search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பங்கள்"

    • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படஉள்ளது.
    • இதையொட்டி அதில் பயன்பெற விண்ணப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படஉள்ளது. இதையொட்டி அதில் பயன்பெற விண்ணப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

    2 கட்டம்

    முதல் கட்ட விண்ணப்ப பதிவு வருகிற 24-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை நடக்கிறது . 2-ம் கட்டமாக 5-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் வினியோகம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி இன்று காலை தொடங்கியது. இதை தொடர்ந்து ரேசன் கடை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று அதனை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட குடும்ப தலைவிகள் அதனை பூர்த்தி செய்து விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், நேரத்தில் வழங்க வேண்டும். மகளிர் உரிமை திட்ட செயல்பாட்டை கண்காணிக்க மாவட்டத்தில் 10 துணைப்பதிவாளர்கள் தலைமையில் 40 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஆய்வு

    இதற்கிடையே டோக்கன் வழங்கும் பணியை முதல் கட்டமாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கன்னங்குறிச்சியில் இன்று காலை ஆய்வு செய் தார். அப்போது டோக்கன் வினியோகம் குறித்து கேட்டறிந்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் உள்பட பலர் உடன் இருந்தனர். 

    • மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இம்மாதம் 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறும். 2-ம்கட்ட முகாம் ஆக.5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறும்.

    காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம் நடைபெறும்.

    நாமக்கல் மாவட்டத்தில் விண்ணப்ப பதிவு முகாம் பணிகளை ஒருங்கிணைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    முதற்கட்டமாக 611 முகாம்களுக்கும், 2-ம் கட்டமாக 303 முகாம்களுக்கும் என மொத்தம் 914 முகாம்களுக்கு பொறுப்பு அலுவலர்களும், 5 முகாமிற்கு 1 மண்டல அலுவலர் என 126 மண்டல அலுவலர்களும், 15 முகாமிற்கு 1 மேற்பார்வை அலுவலர் என 49 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் விண்ணப்ப பதிவு பணிகளை மேற்கொள்ள 4,800-க்கும் மேற்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

    முகாமில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு 2 கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப வினியோகம் இன்று தொடங்கியது.

    இந்த பணிகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான குமரகுருபரன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா ஆகியோர் பார்வையிட்டனர்.

    • மகளிருக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டம்
    • 24-ந் தேதி தொடங்குகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-முதல்-அமைச்சரின் முக்கிய திட்டமான மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தினை குமரி மாவட்டத்தில் செயல்படுத்தும் பொருட்டு 2 கட்டமாக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 764 நியாய விலைக்க டைகளில் 5 லட்சத்து 77ஆயிரத்து 138 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    764 நியாய விலைக்கடைகள் கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்பட்டு 764 முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ள ப்பட உள்ளது. முதற்கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரையி லும் 2-ம் கட்டமாக ஆகஸ்ட் 8-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும் நடைபெறவுள்ளது,

    முதற்கட்டமாக அகஸ்தீ ஸ்வரம் வட்டத்தில் 215 முகாம்களும், தோவாளை வட்டத்தில் 59 முகாம்களும் கல்குளம் வட்டத்தில் 126 முகாம்களும் நடைபெற உள்ளது. மீதமுள்ள 364 முகாம்களுக்கான விண்ணப்ப பதிவு 2-ம் கட்டமாக கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் ஆகிய வட்டங்களில் நடைபெறவுள்ளது. மேற்படி இரண்டு கட்ட முகாம்களின் கண்காணிப்பு பணியில் 153 மண்டல அலுவலர்கள் 51 மேற்பார்வை அலுவலர்கள், வட்டவாரியாக ஒரு மாவட்ட நிலை மேற்பார்வை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஒவ்வொரு முகாமிற்கும் கிராம நிர்வாக அலுவலர் நிலையில் 1 முகாம் அலுவலர் என 764 முகாம் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் இது குறித்து தகவல் தெரிந்து கொள்ள மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை ஒன்று இயங்கி வருகிறது. அதற்கான எண் 1077 மற்றும் 04652 - 231077 ஆகும். பொதுமக்கள் மேற்படி முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெற வேண் டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • கொல்லிமலை செங்கரையில், அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது.
    • இந்த பள்ளியில் உள்ள விடுதிக்கு சமையல் செய்திட 6 பணி யாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலி கமாக நியமிக்கப்பட உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை செங்கரை யில், அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள விடுதிக்கு சமையல் செய்திட 6 பணி யாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலி கமாக நியமிக்கப்பட உள்ளனர்.

    சமையல் கலை தெரிந்த பழங்குடியினர் இனத்தி லிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது உச்ச வரம்பு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    சமையலர் (ஆண்) 2 பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியம் ரூ. 12 ஆயிரம் வீதம் வழங்கப்ப டும். உதவி சமையலர் (பெண்) 3 பணியிடங்க ளுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 12 ஆயி ரம் வீதம் வழங்கப்படும். துப்புரவா ளர் (ஆண், பெண்) 1 பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியம் ரூ. 5,200 வழங்கப்படும்.

    இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை, வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் கொல்லிமலை, தாலுகா அலுவலகத்தில் உள்ள, பழங்குடியினர் நல திட்ட அலுவலகம் அல்லது செங்கரை, ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு வந்துசேருமாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் தாங்கள் கல்லூரி சிறப்பம்சம் குறித்து விளம்பரப்படுத்தி வருகின்றன.
    • பெண்கள் மட்டும் கல்வி பயிலும் வகையில் எல்.ஆர்.ஜி.,கல்லூரி உள்ளது.

    திருப்பூர்:

    பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி தேர்வுமுடிவுக்கு காத்திருக்கும் மாணவர்கள் அடுத்து காலடி எடுத்து வைக்க போவது கல்லூரிகளில் தான். மதிப்பெண் என்ன என்பதை யூகித்து தனியார் கல்லூரிகளில் ஏறி, இறங்கி விண்ணப்பங்களை வாங்கி மாணவர் பலர் உயர்கல்விக்கு தயாராகி வருகின்றனர்.

    தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் தாங்கள் கல்லூரி சிறப்பம்சம் குறித்து விளம்பரப்படுத்தி வருகின்றன. பல கல்லூரிகளில் அட்மிஷனும் நடந்துள்ளது.இது ஒருபுறம் இருந்தாலும் அரசு கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பம் எப்போது வழங்கப்படும், எந்த படிப்புக்கு எப்போது கவுன்சிலிங், அட்மிஷன், கல்லூரி படிப்புக்கான தேதி என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. காரணம், அரசு பள்ளிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள் அரசு கல்லூரியில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர்.

    திருப்பூரில் உயர்கல்வி கற்றுத்தரும் வகையில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, உடுமலை அரசு கலைக்கல்லுாரி செயல்படுகிறது. பெண்கள் மட்டும் கல்வி பயிலும் வகையில் எல்.ஆர்.ஜி.,கல்லூரி உள்ளது. இவை தவிர, திருப்பூர் குமரன் கல்லுாரி கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்குகிறது.காங்கயம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட தாலுகாவில் அரசு கல்லுாரிகள் செயல்படுகிறது. அரசு கல்லூரிகளில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாளுக்கு (ஜூன் 23) ஒரு வாரம் முன்னதாக, விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது. இருப்பினும் தேதி விபரங்களை, தமிழக அரசுகல்லூரி கல்வி இயக்ககம் தான் அறிவிக்கும் என கல்லுாரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

    ×