search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விண்ணப்பங்கள் பதிவு செய்ய 2 கட்ட முகாம்கள்
    X

    விண்ணப்பங்கள் பதிவு செய்ய 2 கட்ட முகாம்கள்

    • மகளிருக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டம்
    • 24-ந் தேதி தொடங்குகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-முதல்-அமைச்சரின் முக்கிய திட்டமான மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தினை குமரி மாவட்டத்தில் செயல்படுத்தும் பொருட்டு 2 கட்டமாக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 764 நியாய விலைக்க டைகளில் 5 லட்சத்து 77ஆயிரத்து 138 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    764 நியாய விலைக்கடைகள் கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்பட்டு 764 முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ள ப்பட உள்ளது. முதற்கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரையி லும் 2-ம் கட்டமாக ஆகஸ்ட் 8-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும் நடைபெறவுள்ளது,

    முதற்கட்டமாக அகஸ்தீ ஸ்வரம் வட்டத்தில் 215 முகாம்களும், தோவாளை வட்டத்தில் 59 முகாம்களும் கல்குளம் வட்டத்தில் 126 முகாம்களும் நடைபெற உள்ளது. மீதமுள்ள 364 முகாம்களுக்கான விண்ணப்ப பதிவு 2-ம் கட்டமாக கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் ஆகிய வட்டங்களில் நடைபெறவுள்ளது. மேற்படி இரண்டு கட்ட முகாம்களின் கண்காணிப்பு பணியில் 153 மண்டல அலுவலர்கள் 51 மேற்பார்வை அலுவலர்கள், வட்டவாரியாக ஒரு மாவட்ட நிலை மேற்பார்வை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஒவ்வொரு முகாமிற்கும் கிராம நிர்வாக அலுவலர் நிலையில் 1 முகாம் அலுவலர் என 764 முகாம் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் இது குறித்து தகவல் தெரிந்து கொள்ள மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை ஒன்று இயங்கி வருகிறது. அதற்கான எண் 1077 மற்றும் 04652 - 231077 ஆகும். பொதுமக்கள் மேற்படி முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெற வேண் டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×