search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்மட்டம்"

    • குமரியில் போதிய அளவு மழை இல்லாததால் நீர்மட்டம் சரிவு
    • பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு அவதிப்பட்டு வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்யும்.

    ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய்ய வில்லை. இயல்பான மழை அளவை காட்டிலும் 69 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. மழை பெய்யாததையடுத்து மாவட்டம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு அவதிப்பட்டு வருகிறார்கள். மதியம் நேரங்களில் சாலையில் கானல் நீராகவே காட்சி அளிக்கிறது. மழை ஏமாற்றி வரும் நிலையில் பாசன குளங்களிலும், அணை களிலும் நீர்மட்டம் கிடுகிடு வென சரிய தொடங்கி யுள்ளது. ஏற்கனவே அணை மற்றும் பாசன குளங்களை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 3 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. மீதம் உள்ள 3 ஆயிரம் ஹெக்டே ரில் நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தேவைப்படுகிறது.

    கடைமடை பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. அணையில் குறைவான அளவில் தண்ணீர் உள்ளதை யடுத்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வந்த நிலையில் தற்போது 500 கன அடி தண்ணீர் மட்டுமே வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 18.28 அடியாக இருந்தது. அணைக்கு 375 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 504 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 27.10 அடியாக உள்ளது.

    அணைக்கு 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 11.38 அடியாகவும் உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 10.30 அடியாகவும், மாம் பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாகவும் சரிந்து காணப்படுகிறது. 

    • பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
    • திறக்கப்பட்ட தண்ணீர் சானலில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. வழக்கமான அளவை காட்டிலும் 65 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. மழை குறைந்ததையடுத்து நீர் நிலைகளிலும் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. குமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 27.57 அடியாக இருந்தது. அணைக்கு 312 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 681 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக வெளி யேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஏற்கனவே கன்னி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் விவசாயத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதையடுத்து பேச்சிப் பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சானலில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரக்கூடிய தண்ணீரை விட கூடுதல் அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

    பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டம் இன்று காலை 24.65 அடியாக இருந்தது. அணைக்கு 24 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 11.31 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 11.41 அடியாகவும், மாம்பழத்துறை யாறு அணையின் நீர்மட்டம் 3.28 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 11.1 அடியாகவும் உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள பாசன குளங்களிலும் தண்ணீர் வற்ற தொடங்கி யுள்ளது. 2000-க்கு மேற்பட்ட பாசன குளங்களில் ஒரு சில குளங்களில் மட்டுமே தண்ணீர் முழு கொள்ள ளவில் உள்ளது.

    75 சதவீ தத்திற்கு மேற்பட்ட குளங்களில் தண்ணீர் குறைவாகவே வருகிறது. அணைகளிலும், குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • கன்னியாகுமரியில் 5-வது நாளாக படகு போக்குவரத்து பாதிப்பு
    • 4 நாட்களாக கன்னியா குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகுஅடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல்கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் பவுர்ண மியையொட்டி கடந்த 4 நாட்களாக கன்னியா குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்படுகிறது. இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.

    இன்று 5-வது நாளாக இந்த நிலை நீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்கக்கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங் கடல் மற்றும் அர பிக்கடல் பகுதியில் கடல் கொந்த ளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப் பட்டது.

    இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப்படவில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயி லில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.

    இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவே கானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவே கானந்தர் நினைவு மண்ட பத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்த னர். கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து இன்று 5-வது நாளாக பாதிக்கப்பட்டது.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற் கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின.

    இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் நிறுத்தம்
    • கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பவுர்ணமியையொட்டி கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்படுகிறது. இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப் பாகவும் காணப்படுகிறது. இன்று 4-வது நாளாக இந்த நிலை நீடிக்கிறது.

    இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற் றும் அரபிக்கடல்பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
    • குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 41.75 அடியாகும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை தமிழகத்தில் 2-வது பெரிய மண் அணையாகும். பவானி ஆற்றின் நடுவில் கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர அணையில் ஏராளமான குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பவானி சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்ட மலை பகுதி உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பொழிவு இல்லாததாலும், அணையில் இருந்து அதிகளவில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 77.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 322 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1305 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 41.75 அடியாகும். தற்போது 32.44 அடியாக நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இதே போல் 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.72 அடியாகவும், 33.46 அடியாக உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் தற்போது 22.11 அடியாகவும் குறைந்து காணப்பட்டது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். 

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் ரத்து
    • பகல் 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவாசை முடிந்த நிலையில் இன்று தொடர்ந்து 4-வது நாளாக கன்னியாகுமரியில் ஒரு புறம் கடல்சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப் படுகிறது. இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

    கடல் நடுவில் அமைந் துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப் படவில்லை.

    விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவுவாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் பகல் 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.

    இதைத் தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகா னந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்தனர்.

    முக்கடல் சங்கமத்தில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங் களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. வட்ட கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    • பாலாற்றின் குறுக்கே ரூ. 7 கோடி மதிப்பில் அணைக்கட்டு அமைக்கும் திட்டத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • நீர் மட்டம் உயர்ந்து விவசாயப்பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மாதவராயன்பட்டி கிராமம் அருகே ரூ. 7 கோடி மதிப்பில் அணைக்கட்டு அமைத்து கோட்டையிருப்பு மற்றும் நாட்டார்மங்கலம் கண்மாய்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் நடைபெறும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) கார்த்திகேயன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முக வடிவேல், உதவி செயற்பொறியாளர்கள் பஞ்சவர்ணம், சங்கர், ஊராட்சி மன்றத்தலைவர்கள் திலகவதி பாண்டியன், சத்தியகலா, சுசிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் கூறும்போது, இந்த திட்டத்தின் மூலம் நாட்டார்மங்கலம், கோட்டையிருப்பு, மாதவராயன்பட்டி, கீழ்நிலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இந்தப்பகுதியில் நீர் மட்டம் உயர்ந்து விவசாயப்பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றார்.

    • படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடக்கம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த3 படகுகளும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பவுர்ணமி முடிந்த நிலையில் இன்று காலை கடல் நீர் மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இன்று காலை காலை 8 மணிக்கு தொடங்கவேண்டிய படகு போக்குவரத்து வெகுநேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது.

    இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றபடியே விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்த தோடு மட்டுமின்றி தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து சென்றனர்.

    இந்த நிலையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.இதைத்தொடர்ந்து 2மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து காலை 10மணி முதல் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    ×