என் மலர்

  நீங்கள் தேடியது "tablet"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்5இ மற்றும் கேலக்ஸி டேப் ஏ 10.1 டேப்லெட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #Samsung  சாம்சங் நிறுவனம் இரண்டு புதிய ஆண்ட்ராய்டு டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய டேப்லெட்கள் கேலக்ஸி டேப் ஏ 10.1 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்5இ என அழைக்கப்படுகின்றன. சாம்சங் தயாரிப்புகளில் மிக மெல்லிய டேப்லெட் மாடலாக கேலக்ஸி டேப் எஸ்5இ உருவாகியிருக்கிறது.

  மெல்லிய பெசல்களுடன் மெட்டாலிக் பாடி கொண்டிருக்கும் கேலக்ஸி டேப் எஸ்5இ வெறும் 5.5 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. கேலக்ஸி டேப் எஸ்5இ டேப்லெட் AMOLED டிஸ்ப்ளே, எல்.டி.இ. கனெக்டிவிட்டி மற்றும் இன்டகிரேட்டெட் டெக்ஸ் வசதி உள்ளிட்டவை கொண்டிருக்கிறது. இதன் விற்பனை இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் துவங்குகிறது.

  சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 10.1 மாடல் தற்சமயம் ஜெர்மனியில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மற்ற சந்தைகளில் அறிமுகமாவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.   கேலக்ஸி டேப் எஸ்5இ சிறப்பம்சங்கள்:

  - 10.5 இன்ச் WQXGA 2560x1600 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
  - ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர்
  - அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம்
  - 128 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - 13 எம்.பி. பிரைமரி கேமரா
  - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
  - டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம்
  - யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
  - ஆண்ட்ராய்டு 9 பை
  - பிக்ஸ்பி 2.0
  - 7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்5இ மாடல் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித மாடல்களில் கிடைக்கிறது. இதன் விலை வைபை மாடல் விலை 399.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.28,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் எல்.டி.இ. வெர்ஷன் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.  கேலக்ஸி டேப் ஏ 10.1 சிறப்பம்சங்கள்:

  - 10.1 இன்ச் 1920x1200 பிக்சல் டிஸ்ப்ளே
  - எக்சைனோஸ் 7904 பிராசஸர்
  - 3 ஜி.பி. ரேம்
  - 32 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - 8 எம்.பி. பிரைமரி கேமரா
  - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
  - டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம்
  - 6150 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 10.1 டேப்லெட் வைபை மற்றும் எல்.டி.இ. மாடல்களில் கிடைக்கிறது. இதன் வைபை மாடல் விலை 210 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.17,000) என்றும் எல்.டி.இ. வேரியண்ட் விலை 270 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.22,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனத்தின் புதிய ரக்கட் டேப்லெட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. புதிய டேப்லெட் எஸ் பென்னுடன் கிடைக்கிறது. #GalaxyTabActive2  சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டேப்லெட் MIL-STD-810 தரச்சான்று பெற்றிருக்கிறது. இதில் 1.2 எம் ஆண்டி-ஷாக் இன்பாக்ஸ் ப்ரோடெக்டிவ் கவர், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

  புதிய டேப்லெட்டில் நாக்ஸ் (Knox) பாதுகாப்பு தளம் வழங்கப்பட்டிருப்பதால், இதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட்டில் கைரேகை சென்சாருடன் பயோமெட்ரிக் ஆத்தென்டிகேஷன் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

  இதனுடனஅ எஸ் பென் ஸ்டைலஸ் சப்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. வைபை மற்றும் 4ஜி என இருவித வெர்ஷன்களில் கிடைக்கும் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட் 4450 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.  சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சிறப்பம்சங்கள்:

  - 8.0 இன்ச் 1280x800 பிக்சல் WXGA TFT டிஸ்ப்ளே
  - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
  - மாலி T830 GPU
  - 3 ஜி.பி. ரேம்
  - 16 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
  - 8 எம்.பி. ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
  - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
  - IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
  - கைரேகை சென்சார்
  - எஸ் பென்
  - 4ஜி எல்.டி.இ., வைபை., ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
  - 4,450 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.50,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் மினி 5 டேப்லெட் சிறப்பம்சங்களும் அதன் அறிமுக விவரங்களும் வெளியாகியுள்ளது. #Apple #iPadMini  ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மாடல்களை 2019 ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஐபேட்களில் ஒன்று ஐபேட் மினி 5 என அழைக்கப்படும் என்றும் இதன் வடிவமைப்பு பார்க்க ஐபேட் மினி 4 என அழைக்கப்படுகிறது.

  ஐபேட் மினி 5 மாடல் 6.1 எம்.எம். அளவு தடிமனாகவும், 7.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் லைட்னிங் கனெக்டர், டச் ஐ.டி. மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கிறது. புதிய ஐபேட்களில் பின்புற மைக்ரோபோன் மேல்பக்கத்தின் மத்தியில் பொருத்தப்படுகிறது.

  புதிய ஐபேட் மினி 5 மாடலில் ஏ10 ஃபியூஷன் சிப் வழங்கப்படுமா அல்லது ஏ10எக்ஸ் ஃபியூஷன் சிப் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. மேலும் இந்த ஐபட் ஆப்பிள் பென்சில் வசதியை சப்போர்ட் செய்யுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.  ஏற்கனவே வெளியான தகவல்களில் 9.7 இன்ச் ஐபேட் (2018) மாடலின் மேம்பட்ட மாடல் 10 இன்ச் அளவில் அறிமுகமாகும் என்றும் இத்துடன் குறைந்த விலையில் ஐபேட் மாடல் ஒன்றும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டது. 

  புதிய ஐபேட் அறிமுகம் செய்வது பற்றி ஆப்பிள் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், வரும் மாதங்களில் ஐபேட் மினி 5 மற்றும் குறைந்த விலை ஐபேட் மாடல் வரும் மாதங்களில் அறிமுகமாகலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய புதிய ஐபேட் மினி மற்றும் 9.7 இன்ச் ஐபேட் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #ipadmini5 #Apple  ஆப்பிள் நிறுவனம் ஐந்தாம் தலைமுறை ஐபேட் மினி சாதனத்தை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்கள் இருவித வெர்ஷன்களில் அறிமுகமாகலாம் என தெரிகிறது.

  ஐபேட்களின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில், ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபேட் மினி 5 சாதனத்தை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதற்கென அதிகளவு ஐபேட் மினி சாதனங்களின் உற்பத்தி டிசம்பர் மாத இறுதியில் துவங்கும் என கூறப்படுதிறது.  ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 2015 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை தனது சிறிய ஐபேட் மாடலை அறிமுகம் செய்யவில்லை. ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ அக்டோபர் மாதத்தில் வெளியிட்டிருந்த தகவல்களில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஐபேட் மினி, குறைந்த விலை டிஸ்ப்ளே பேனலுடன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவித்திருந்தார்.
   
  ஆறாம் தலைமுறை 9.7 இன்ச் ஐபேட் மாடலுக்கு மாற்றாக ஆப்பிள் புதிய என்ட்ரி லெவல் ஐபேட் மாடலை அறிமுகம் செய்யலாம். இந்த ஐபேட் மாடலில் 10-இன்ச் டிஸ்ப்ளே மெல்லிய ஃபிரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபேட் சாதனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், இரு விலை குறைந்த ஐபேட் மாடல்களை அடுத்த ஆண்டு வெளியிடலாம்.

  அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின்படி ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஐபேட்களின் உற்பத்தி கட்டணத்தை குறைக்கும் நோக்கில் அந்நிறுவனம் கொரியாவில் தயாரிக்கப்படும் எல்.இ.டி. டிஸ்ப்ளேக்களை புதிய சாதனங்களில் வழங்கலாம் என கூறப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புது ஐபேட் ப்ரோ மாடல்கள் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட சில ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கிறது. #ipadpro2018  ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த 2018 ஐபேட் ப்ரோ 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் மாடல்கள் இந்திய ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட சில விற்பனையாளர்களிடம் ஆஃப்லைன் விற்பனை நடைபெற்று வருகிறது. 

  எனினும், நவம்பர் 23ம் தேதி முதல் பெரும்பாலான விற்பனை மையங்களில் புது ஐபேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அடுத்த வாரம் முதல் பிளிப்கார்ட், அமேசான் துவங்கி பல்வேறு விற்பனையகங்களில் புது ஐபேட் ப்ரோ மாடல்கள் கிடைக்கும்.

  புது 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல்கள் அக்டோபர் 31ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வின் போது புதிய ஐபேட் ப்ரோ மாடல்களின் இந்திய வெளியீடு குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.   2018 ஐபேட் ப்ரோ இந்திய விலை மற்றும் சலுகைகள்:

  ஐபேட் ப்ரோ 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் மாடல்கள் 64 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மெமரி வேரின்ட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 11 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் விலை ரூ.71,900 முதல் துவங்குகிறது. இதேபோன்று 12.9 இன்ச் மாடல் விலை ரூ.89,900 முதல் துவங்குகிறது.

  இரண்டாம் தலைமுறை ஆப்பிள் பென்சில் விலை ரூ.10,990 என்றும் 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஸ்மார்ட் ஃபோலியோ கேஸ் விலை முறையே ரூ.7,500 மற்றும் ரூ.9,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கீபோர்டு ஃபோலியோ விலை முறையே ரூ.15,900 மற்றும் ரூ.17,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  2018 ஐபேட் ப்ரோ சிறப்பம்சங்கள்:

  புதிய 2018 ஐபேட் ப்ரோ 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் எல்.சி.டி. ப்ரோமோஷன் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே பேனல்களை கொண்டுள்ளது. புது ஐபேட் ப்ரோ 5.9 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. 2018 ஐபேட் ப்ரோ மாடல்களில் முதல் முறையாக நியூரல் என்ஜின் கொண்ட A12X பயோனிக் சிப்செட் மற்றும் அதிகபட்சம் 1000 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது.

  இதனுடன் ட்ரூ டெப்த் கேமரா மூலம் இயங்கும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் மாடல்களை போன்றே புது ஐபேட் ப்ரோ மாடல்களில் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் போர்டிரெயிட் மற்றும் லேன்ட்ஸ்கேப் மோட்களில் வேலை செய்கிறது. மேலும் புது ஐபேட் ப்ரோ மாடல்களில் ஐபோன் X போன்ற ஜெஸ்ட்யூர் நேவிகேஷன் கொண்டுள்ளது.

  மேலும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் கொண்ட முதல் ஐ.ஓ.எஸ். சாதனமாக புது ஐபேட் ப்ரோ மாடல்கள் இருக்கின்றன. இவை சார்ஜிங், தகவல் பரிமாற்றம் மற்றும் கனெக்டிவிட்டி வசதிகளை வழங்குகிறது. புது ஐபேட் ப்ரோ மாடல்களில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் நீக்கப்பட்டுள்ளது. 

  புது ஐபேட் மாடல்களில் 12 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார், ட்ரூ டோன் எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் 4K வீடியோ சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி 10 மணி நேர பேக்கப் வழங்குவதோடு, 18 வாட் பவர் அடாப்டர் ஒன்றும் வழங்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #ipadpro2018  ஐபேட் ப்ரோ 2018 இந்திய வெளியீட்டு தேதி ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டு டேப்லெட் மாடல்களும் இந்தியாவில் நவம்பர் 16ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இதன் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. 

  2018 ஐபேட் ப்ரோ 11-இன்ச் மற்றும் 12.9-இன்ச் மாடல்கள் அக்டோபர் 31ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வு நிறைவுற்றதும் இரண்டு ஐபேட் மாடல்களின் துவக்க விலையை ஆப்பிள் அறிவித்தது.

  இந்தியாவில் 2018 ஐபேட் ப்ரோ 11-இன்ச் மற்றும் 12-இன்ச் மாடல்கள் 64 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 11-இன்ச் மாடல் இந்திய விலை ரூ.71,900ல் துவங்குகிறது. 12.9-இன்ச் மாடலின் இந்திய விலை ரூ.89,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  இரண்டாம் தலைமுறை ஆப்பிள் பென்சில் விலை ரூ.10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட் ஃபோலியோ கேஸ் 11-இன்ச் மற்றும் 12-இன்ச் மாடல்கள் முறையே ரூ.7,500 மற்றும் ரூ.9,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கீபோர்டு ஃபோலியோ விலை முறையே ரூ.15,900 மற்றும் ரூ.17,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  ஐபேட் ப்ரோ 2018 சிறப்பம்சங்கள்:

  - 11.0 இன்ச் மற்றும் 12.9 இன்ச் எல்.சி.டி. ப்ரோமோஷன் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
  - ஆப்பிள் ஏ12X பயோனிக் 7என்.எம். பிராசஸர்
  - 64 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மெமரி
  - 12 எம்.பி. பிரைமரி கேமரா, ட்ரூ டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
  - மேம்படுத்தப்பட்ட ஃபேஸ் ஐடி
  - யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
  - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
  - 10 மணி நேர பேட்டரி பேக்கப்
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 2018 ஐபேட் ப்ரோ சாதனம் பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. #iPad2018  ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் எவ்வித பட்டன்களும் வழங்கப்படவில்லை, ஐபோன் X மாடலில் அறிமுகம் செய்யப்பட்டதை போன்ற ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் அதிகம் மேம்பட்ட நிலையில், புதிய டேப்லெட்டில் ஆப்பிள் வழங்கியுள்ளது.

  புதிய ஐபேட் ப்ரோ மாடல் 10.5 இன்ச், 11.0 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என மூன்று வித அளவுகளில் கிடைக்கிறது. புதிய ஐபேட் ப்ரோ ஏ12X 7என்.எம். பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஏ12X பிராசஸரில் 8-கோர் சி.பி.யு., சிங்கிள் கோர் செயல்திறன் கொண்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 35 சதவிகிதம் வேகமாகவும், 90 சதவிகிதம் வேகமாகவும் இருக்கிறது.

  புதிய ஏ12X பயோனிக் சிப்செட்டில் இருமடங்கு கிராஃபிக்ஸ் செயல்திறன் மற்றும் ஒரு நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் அதிகபட்சம் 1000 ஜி.பி. மெமரி, யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.   ஐபேட் ப்ரோ சிறப்பம்சங்கள்:

  - 10.5 இன்ச், 11.0 இன்ச் மற்றும் 12.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
  - ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம்
  - ஜெஸ்ட்யூர் இன்டர்ஃபேஸ்
  - ஏ12X பயோனிக் பிராசஸர், நியூரல் என்ஜின்
  - ட்ரூ டெப்த் கேமரா
  - குரூப் ஃபேஸ் டைம்
  - 12 எம்.பி. கேமரா, மேம்படுத்தப்பட்ட ட்ரூ டோன் ஃபிளாஷ்
  - 10 மணி நேர பேட்டரி பேக்கப்
  - 1000 ஜி.பி. மெமரி
  - யு.எஸ்.பி. டைப்-சி
  - புதிய ஆப்பிள் பென்சில்

  புதிய ஐபேட் ப்ரோ மாடலுடன் புதிய வடிவமைப்பு கொண்ட ஆப்பிள் பென்சில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பென்சில் ஐபேட் உடன் இணைந்து கொள்ள காந்த சக்தியும், தானாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதியும் கொண்டுள்ளது. 

  புதிய ஐபேட் ப்ரோ 10.5 இன்ச் விலை 649 டாலர்கள், 11.0 இன்ச் விலை 799 டாலர்களும், 12.9 இன்ச் விலை 999 டாலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் முன்பதிவு இன்று துவங்கி இருக்கும் நிலையில், நவம்பர் 7ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுடன் தனது புதிய டேப்லெட் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. #PixelSlate  கூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுடன் அந்நிறுவனம் தனது புதிய டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. க்ரோம் ஓ.எஸ். மூலம் இயங்கும் புதிய டேப்லெட்டில் ஆன்ட்ராய்டு செயலிகளை கூகுள் பிளே மூலம் பயன்படுத்த முடியும்.

  பிக்சல் ஸ்லேட் என அழைக்கப்படும் புதிய சாதனத்தில் 12.3 இன்ச் 3000x2000 பிக்சல் 293 PPI 2.5D வளைந்த கிளாஸ் மாலிகுலர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. வெறும் 7 மில்லிமீட்டர் அளவு மெல்லியதாக இருக்கும் பிக்சல் ஸ்லேட் முன்பக்கம் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.   இத்துடன் டைட்டன் செக்யூரிட்டி சிப் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாதனத்தின் கடவுச்சொற்கள் மற்றும் ஓ.எஸ். பாதுகாப்பாக இருக்கும். பிக்சல் ஸ்லேட் 8-ம் தலைமுறை இன்டெல் கோர் M3, i5 அல்லது i7 பிராசஸர், இன்டெல் செலரான் பிராசஸர் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இத்துடன் 16 ஜி.பி. ரேம் அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி மற்றும் 8 எம்.பி. பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

  இதன் பவர் பட்டன் கைரேகை சென்சார் போன்றும் இயங்குகிறது. புதிய பிக்சல் ஸ்லேட் 12 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. பிக்சல் ஸ்லேட் கீபோர்டில் ஹஷ் பட்டன்கள், பிரத்யேக கூகுள் அசிஸ்டன்ட் பட்டன் மற்றும் பெரிய டிராக்பேட் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கூகுள் அறிமுகம் செய்த பிக்சல்புக் பேனாவுடன் புதிய பிக்சல் ஸ்லேட் இயங்குகிறது.  கூகுள் பிக்சல் ஸ்லேட் சிறப்பம்சங்கள்:

  - 12.3 இன்ச் 3000x2000 பிக்சல் 293 PPI LCD டிஸ்ப்ளே
  - கூகுள் பிக்சல்புக் பேனா சப்போர்ட்
  - இன்டெல் செலரான் பிராசஸர் / 8th Gen இன்டெல் கோர் m3 / கோர் i5 / கோர் i7 பிராசஸர்
  - 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
  - 8 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. எஸ்.எஸ்.டி. / 128 ஜி.பி. எஸ்.எஸ்.டி
  - 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
  - க்ரோம் ஓ.எஸ்.
  - 8 எம்.பி. ஆட்டோஃபோக்கஸ் பிரைமரி கேமரா, f/1.8, 1.12μm பிக்சல்
  - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9, 1.4μm பிக்சல்
  - பிக்சல் இம்ப்ரின்ட் கைரேகை சென்சார்
  - டைட்டன் சி செக்யூரிட்டி சிப்
  - வைபை, ப்ளூடூத், 2 யு.எஸ்.பி. டைப்-சி, 4K டிஸ்ப்ளே அவுட்புட்
  - முன்பக்கம் டூயல் ஸ்பீக்கர்கள், 2 மைக்
  - 48Wh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங்

  புதிய பிக்சல் ஸ்லேட் மிட்நைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 599 டாலர்களில் துவங்குகிறது. பிக்சல் ஸ்லேட் கீபோர்டு விலை 199 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல்புக் பேனா விலை 99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சாதனத்தின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் புதிய சர்ஃபேஸ் சாதனம் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Microsoft
   


  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய ஹார்டுவேர் நிகழ்வு அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதிய சர்ஃபேஸ் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் தற்போதைய சர்ஃபேஸ் நோட்புக் மாடல்களுக்கு புதிய சர்ஃபேஸ் ப்ரோ மற்ரும் சர்ஃபேஸ் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இத்துடன் டூயல் டிஸ்ப்ளே கொண்ட பாக்கெட் சர்ஃபேஸ் சாதனம் ஆன்ட்ரோமெடா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.  முன்னதாக மலிவு விலை சர்ஃபேஸ் கோ டேப்லெட் மாடலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது. மைக்ரோசாஃப்ட் வெளியிட்டு இருக்கும் அழைப்பிதழில் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் ஹார்டுவேர் சார்ந்த அப்கிரேடுகளை எதிர்பார்க்கலாம். 

  அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் புதிய சர்பேஸ் ப்ரோ மாடலில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சர்ஃபேஸ் ப்ரோ 5 மாடலை விட மேம்படுத்தப்பட்ட புதிய பிராசஸர்கள், பெரிய பேட்டரி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகமான சர்ஃபேஸ் லேப்டாப் மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

  முன்னதாக வெளியான தகவல்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டூயல்-டிஸ்ப்ளே சர்ஃபேஸ் சாதனத்தை தனது புதிய நோட்புக் மாடல்களுடன் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டிருந்தது. இரண்டு திரைகளுடன் இந்த சாதனம் மடிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 டேப்லெட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. புதிய டேப்லெட் சிறப்பம்சங்கள் மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Samsung #GalaxyTab


  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டேப்லெட்-இல் 10.5 இன்ச் WUXGA டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் குவாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.

  டால்பி அட்மாஸ் சவுன்ட் சிஸ்டம், 4ஜி எல்.டி.இ. வசதி கொண்டிருக்கும் புதிய டேப்லெட் 7300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.  சாம்சங் கேலக்ஸி டேப் ஏ (2018) சிறப்பம்சங்கள்

  – 10.5 இன்ச் 1920×1200 பிக்சல் WUXGA 16:10 ரக TFT எல்.சி.டி. டிஸ்ப்ளே
  – 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
  – அட்ரினோ 506 GPU
  – 3 ஜிபி ரேம்
  – 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
  – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  – ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
  – 8 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
  – 5 எம்பி செல்ஃபி கேமரா
  – 4 ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்
  – 4ஜி எல்டிஇ, வைபை, வைபை டைரக்ட், ப்ளூடூத், யுஎஸ்பி 2.0 டைப்-சி
  – 7,300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

  சாம்சங் கேலக்ஸி டேப் ஏ (2018) எபோனி பிளாக் மற்றும் அர்பன் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் சாம்சங் ஆன்லைன் தளம் மற்றும் ப்ளிப்கார்ட்-இல் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மட்டுமின்றி ஆஃப்லைன் விற்பனையகங்களிலும் கேலக்ஸி டேப் ஏ (2018) விற்பனை செய்யப்படுகிறது.

  புதிய கேலக்ஸி டேப் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.2750 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனை பெற பயனர்கள் ரூ.198 அல்லது ரூ.299 சலுகைகளை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இத்துடன் அடுத்த நான்கு ரீசார்ஜ்களுக்கு டபுள் டேட்டா சலுகைகளும் வழங்கப்படுகின்றன. #Samsung  #GalaxyTab
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மருந்தின் தன்மையை பொறுத்தே டாக்டர்கள் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன்பும், சில மாத்திரைகளை சாப்பிட்டிற்கு பின்பு சாப்பிடவும் அறிவுறுத்துகின்றனர்.
  நாம் எடுத்து கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்று கொள்வதிலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்க செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன. மருந்தின் தன்மையை பொறுத்தே டாக்டர்கள் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன்பும், சில மாத்திரைகளை சாப்பிட்டிற்கு பின்பு சாப்பிடவும் அறிவுறுத்துகின்றனர்.

  சில மருந்துகளை நாம் உண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச்செய்து வயிற்றில் பிரச்னை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக்குகின்றன. சில மருந்துகள் வாந்தி உணர்வையும் ஏற்படுத்துகின்றன. இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடவே டாக்டர்களால் அறிவுறுத்தப்படுகிறது.

  இதுபோல மாத்திரைகளை பெரும்பாலும் வெதுவெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. காரணம் பால், தேநீர், காப்பி போன்றவை சில மாத்திரைகளோடு ரசாயன மாற்றம் அடைத்து உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். சில மருந்துகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பக்கவிளைவுகளை தராது என்னும் நிலையில் அவை சாப்பாட்டிற்கு முன்பு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print