search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    விரைவில் இந்தியா வரும் புதிய டேப்லெட் - ரியல்மி வெளியிட்ட சூப்பர் டீசர்!
    X

    விரைவில் இந்தியா வரும் புதிய டேப்லெட் - ரியல்மி வெளியிட்ட சூப்பர் டீசர்!

    • ப்ளிப்கார்ட்-இன் மைக்ரோசைட்-இல் புதிய ரியல்மி பேட் 2 அம்சங்கள் இடம்பெற்று உள்ளது.
    • ரியல்மி பேட் 2 மாடலில் குலோயிங் ஸ்பைஸ் டிசைன் உள்ளது.

    ரியல்மி நிறுவனம் தனது அடுத்த டேப்லெட் மாடல், ரியல்மி பேட் 2 இந்திய சந்தையில் ஜூலை 19-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதே நாளில் ரியல்மி C53 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய ரியல்மி பேட் 2 மாடலுக்காக பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் மைக்ரோசைட்-இல் புதிய ரியல்மி பேட் 2 அம்சங்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்று உள்ளது. அதன்படி ரியல்மி பேட் 2 மாடலில் 11.5 இன்ச் LCD டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், 2000x1200 பிக்சல் ரெசல்யூஷன், 40Hz / 60Hz / 120Hz ரிப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் உள்ளது.

    முந்தைய ரியல்மி பேட் மாடலில் 10.4 இன்ச் LCD ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய டேப்லெட்-இன் டிஸ்ப்ளே புளூ லைட் பாதுகாப்பு, டிசி டிம்மிங் கொண்டிருக்கிறது. இவை நீண்ட நேர பயன்பாடுகளின் போதும், கண்களுக்கு சோர்வு ஏற்படுவதை ஓரளவுக்கு தவிர்க்க செய்கிறது. ரியல்மி பேட் 2 மாடலில் 85.2 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மூலம் தலைசிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும் என்று தெரிகிறது.

    ரியல்மி பேட் 2 மாடலில் O1 அல்ட்ரா விஷன் தொழில்நுட்பம் உள்ளது. இது தலைசிறந்த இமேஜ்-ஐ பிரதிபலிக்கிறது. ஆடியோவுக்காக இந்த மாடலில் குவாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளன. ரியல்மி பேட் 2 மாடலில் குலோயிங் ஸ்பைஸ் டிசைன் உள்ளது. அதிகாரப்பூர்வ புகைப்படங்களின் படி இந்த டேப்லெட் டூயல் டோன் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் உருவாகி இருக்கிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ரியல்மி பேட் 2 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 8360 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்ற கூறப்பட்டது. இத்துடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 20MP பிரைமரி கேமரா, ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0 போன்ற அம்சங்களும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

    Next Story
    ×