search icon
என் மலர்tooltip icon

    கணினி

    எல்லாமே ஜாஸ்தி தான்.. விரைவில் அறிமுகமாகும் சியோமி பேட் 6 மேக்ஸ்...!
    X

    எல்லாமே ஜாஸ்தி தான்.. விரைவில் அறிமுகமாகும் சியோமி பேட் 6 மேக்ஸ்...!

    • சியோமி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல்.
    • புதிய பேட் 6 மேக்ஸ் மாடலில் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    சியோமி நிறுவனம் தனது சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடலின் வெளியீட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக இந்த டேப்லெட் மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் சியோமி மிக்ஸ் ஃபோல்டு 3 மாடலுடன் புதிய பேட் 6 மேக்ஸ் 14 மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    முன்னதாக சியோமி பேட் 6 மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதிய மேக்ஸ் மாடல் அறிமுகமாகிறது. பேட் 6 மேக்ஸ் 14 மாடலை சியோமி நிறுவனம் லேப்டாப் மற்றும் சியோமி பேட் 6 மாடல் 11 இன்ச் வேரியன்ட் உடன் ஒப்பிட்டுள்ளது. புதிய பேட் 6 மேக்ஸ் டேப்லெட்-இல் 14 இன்ச் அளவு கொண்ட ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

    இது முந்தைய 11 இன்ச் ஸ்கிரீன் கொண்ட பேட் 6 மாடலை விட 62 சதவீதம் வரை பெரியது ஆகும். டீசரில் புதிய டேப்லெட் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை. எனினும், சியோமி பேட் 6 மேக்ஸ் பற்றிய விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அதில் புதிய சியோமி பேட் 6 மேக்ஸ் 14 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இத்துடன் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. தகவல்களுடன் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், ToF சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. புதிய டேப்லெட் பற்றிய இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×