search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 series"

    அயர்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. #IREvIND

    அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.



    இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அதிரடியாக விளையாடிய தவான் 45 பந்தில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தவான் - ரோகித் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது.

    சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 61 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் பீட்டர் சேஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 209 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.



    இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பால் ஸ்டிர்லிங், ஜேம்ஸ் ஷனான் ஆகியோர் களமிறங்கினர். ஸ்டிர்லிங் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பால்பிர்னி 11 ரன்னிலும், சிமி சிங் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய ஷனான் அரைசதம் கடந்தார். அவர் 35 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். 12-வது ஓவரை சஹால் வீசினர். அந்த ஓவரின் 3 மற்றும் 4-வது பந்துகளில் கெவின் ஓ பிரையின், கேரி வில்சன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது.



    இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.. இதனால் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், சஹால் 3 விக்கெட்களும், பும்ரா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். அடுத்த டி20 போட்டி 29-ம் தேதி நடைபெறுகிறது. #IREvIND
    அயர்லாந்தில் நடைபெற்றுவரும் முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. #IREvIND

    அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அதிரடியாக விளையாடிய தவான் 45 பந்தில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தவான் - ரோகித் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது.



    அதன்பின் சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். ரோகித் சர்மா தொடர்ந்து நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்முனையில் வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரெய்னா 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டோனி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். 



    சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 61 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் பீட்டர் சேஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 209 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. #IREvIND
    ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. #SCOvPAK #PAKvSCO

    எடின்பர்க்:

    ஸ்காட்லாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி எடின்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் ஜமான், அகமது ஷெசாத் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷெசாத் 33 ரன்களிலும், ஜமான் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹுசைன் தலாட் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 



    அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் சர்பராஸ் அகமது 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷோயிப் மாலிக் மட்டும் சற்று நிலைத்து நின்று விளையாடினார். மற்றவர்கள் பிராகசிக்க தவறியதால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. மாலிக் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சில் மைக்கெல் லீஸ்க் 3 விக்கெட்களும், கிறிஸ் சோலே 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே, கைல் கொயிட்செர் ஆகியோர் களமிறங்கினர். முன்சே முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார்.  அதன்பின் வந்த ரிச்சி பெர்ரிங்டன் நிதானமாக ரன் சேர்த்தனர். அவர் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். கொயிட்செர் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.



    அதைத்தொடர்ந்து வந்த கலம் மெக்லியோட் 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஸ்காட்லாந்து அணி 14.4 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்களும், உஸ்மான் கான் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணியின் உஸ்மான் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். #SCOvPAK #PAKvSCO

    ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. #SCOvPAK #PAKvSCO

    எடின்பர்க்:

    ஸ்காட்லாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி எடின்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் ஜமான், அகமது ஷெசாத் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷெசாத் 14 ரன்களிலும், ஜமான் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹுசைன் தலாட் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து கேப்டன் சர்பராஸ் அகமது, ஷோயிப் மாலிக் ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 



    இருவரும் அரைசதம் கடந்தனர். அதிரடியாக விளையாடிய மாலிக் 27 பந்தில் 5 சிக்ஸர்கள் உட்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. சர்பராஸ் அகமது இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சில் அலஸ்டெய்ர் எவான்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே, கைல் கொயிட்செர் ஆகியோர் களமிறங்கினர். முன்சே 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிச்சி பெர்ரிங்டன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கைல் கொயிட்செர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    இதுதவிர டைலான் பட்ஜ் 4 ரன்கள், கலம் மெக்லியோட் 12 ரன்கள், மேத்தீவ் கிராஸ் 13 ரன்கள் எடுத்தனர். மைக்கெல் லீஸ்க் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் எடுத்தார். ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் ஹசன் அலி, ஷதப் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

    பாகிஸ்தான் அணியின் சர்பிராஸ் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஸ்காட்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. #SCOvPAK #PAKvSCO
    உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றுவரும் டி20 போட்டியில், வங்காளதேசம் அணியின் வெற்றிக்கு 146 ரன்களை இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. #BANvAFG #AFGvBAN

    டேராடூன்:

    வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடந்து வருகிறது. அதன்படி நடந்த முதல் இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றிவிட்டது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அக்சார் ஸ்டானிக்சாய் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து வங்காளதேசம் அணி முதலில் பந்துவீசியது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர்.  தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஷசாத் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் அஸ்கார் ஸ்டானிக்சாய் களமிறங்கினார்.



    இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. கனி 19 ரன்னிலும், ஸ்டானிக்சாய் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நபி 3 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். ஆப்கானிஸ்தான் அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து சமியுல்லா ஷென்வாரி, நஜிபுல்லா சத்ரான் இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். சத்ரான் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி பந்துவீச்சில் நஸ்முல் இஸ்லாம், அபு ஜயத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர். இதன்மூலம் வங்காளதேசம் அணிக்கு 146 ரன்களை இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. #BANvAFG #AFGvBAN
    உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றுவரும் வங்காளதேசம் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #BANvAFG #AFGvBAN

    டேராடூன்:

    வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் இடையே மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடந்து வருகிறது. அதன்படி நடந்த முதல் இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றிவிட்டது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அக்சார் ஸ்டானிக்சாய் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து வங்காளதேசம் அணி முதலில் பந்துவீசி வருகிறது..

    வங்காளதேசம் அணி: தமீம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம், மஹ்மதுல்லா, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), சவுமியா சர்க்கார், அரிபுல் ஹக், மெஹிதி ஹசன், அபு ஹைதர் ரோனி, நஸ்முல் இஸ்லாம், அபு ஜயெத்.

    ஆப்கானிஸ்தான் அணி: மொகமது ஷசாத், உஸ்மான் கனி, அஸ்கார் ஸ்டானிக்சாய், சமியுல்லா ஷென்வாரி, மோகமது நபி, ஷபிகுல்லா ஷபிக், நஜிபுல்லா சத்ரான், கரீம் ஜனத், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், அப்தாப் ஆலம். #BANvAFG #AFGvBAN
    ×