search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Study Meeting"

    • பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை
    • ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி கிரிவல ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    இது குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் :-

    தமிழகத்தில் அதிக அளவில் ஆன்மீக மக்களே உள்ளனர். 38 வருவாய் மாவட்டங்களில் அதிகளவில் ஆன்மீக மக்கள் வருகை தரும் மாவட்டங்க ளில் திருவண்ணாமலையும் ஒன்றாகும்.

    சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல- அமைச்சர், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதற்கு உதாரணம் கார்த்திகை தீபத்தின் போது 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து பாதுகாப்பாக திரும்ப சென்றனர் என்று பெருமையாக பேசினார்.

    கார்த்திகை தீபப் பணியை அடிப்படையாகக் கொண்டு சித்ரா பவுர்ணமிக்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து செயல்பட வேண்டும்.

    இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் கூறியது போன்று கோவிலில் வரிசையை நீளம் செய்தால் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருட்டு போன்ற செயல்கள் நடைபெறுவது தவிர்க்கப்படும்.

    சித்ரா பவுர்ணமி கோடை வெயிலில் வருவதால் குடிநீர் வசதியை கூடுதல் செய்ய வேண்டும். தூய்மை அருணை போன்ற தன்னார்வலர்கள் அமைப்பினர்களை கொண்டு அதிகளவில் நீர், மோர் பந்தல்கள் அமைக்கலாம்.

    அன்னதானம் வழங்கும் இடத்தில் உணவை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வழங்குவதை உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டறிந்து அதனை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் சித்ரா பவுர்ணமியொட்டி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் பெற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

    கோவில் வளாகத்திற்குள் இ.சி.ஜி., அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பரிசோதனை கருவிகளுடன் கூடிய அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.

    மேலும் சித்ரா பவுர்ணமி பணிகளை மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலர்களை மாவட்ட நிர்வாகம் நியமித்து அவர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் முதல்- அமைச்சர் பாராட்டும் அளவிற்கு சிறப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், இந்து சமய அறநிலைத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், ஆணையாளர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, ஓ.ஜோதி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன்,, திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், முன்னாள் வார்டு கவுன்சிலர் கார்த்தி வேல்மாறன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் அருணாச லேஸ்வரர் கோவில் இணை ஆணையர் குமரேசன் நன்றி கூறினார்.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கை கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைகளிலும் அதிகப்படியான சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும்.

    அன்னதானப்பட்டி:

     சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ்

    சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கை கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    குற்றத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு செய்ய மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலைய

    எல்லைகளிலும் அதிகப்படியான சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும். பழுதடைந்த கேமராக்களை சரி செய்தல் வேண்டும். போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீடுகளிலும் கேமிராக்கள் பொருத்த பொது மக்க ளுக்கு அறிவுறுத்த வேண்டும். மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களில் அதிக விபத்துக்கள் நடந்த இடங்களை கணக்கெடுத்து, அந்த இடங்களை போலீசார்

    கள ஆய்வு செய்து, அங்கு

    விபத்து தடுப்பு நடவ டிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கஞ்சா, புகை யிலைப் பொருட்கள், சந்துக் கடை களில் மது விற்பனை, கள்ளச் சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்டவற்றை ஒழிக்க

    கடுமையான நடவடிக்கை கள் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூடுதல் போலீஸ்

    சூப்பிரண்டு கென்னடி, துணை போலீஸ் சூப்பி ரண்டுகள் விஜயக்குமார், ஆரோக்கியராஜ், சங்கீதா, ராமச்சந்திரன், ஹரிசங்கரி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • சாத்தூர் நகராட்சி ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றனர்.
    • இந்து சமய அறநிலையத்துறை செயலரிடம் ஆவணங்களை சமர்ப்பித்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் குருசாமி, நகராட்சி ஆணையாளர் இளவரசன் முன்னிலை வகித்தனர்.

    சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நகராட்சியில் உள்ள பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு, கழிவு நீர் வாறுகால், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்-குறைபாடுகள் குறித்து கவுன்சிலர்கள் முறையிட்டனர். இந்த குறைகள் சம்பந்தமாக அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து சரி செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

    மேலும் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் வாடகை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து முறையிட்டனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலரிடம் ஆவணங்களை சமர்ப்பித்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். வட்டாட்சியர் வெங்கடேசன், தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், போலீஸ் டி.எஸ்.பி. நாகராஜ், இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் மற்றும் நகராட்சி, வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • காவிரி நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகம் காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் திருச்சியில் நடந்தது.
    • கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவிலான தண்ணீர் வரத்தால் கூழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை நள்ளிரவில் கலெக்டர் மா.பிரதீப்குமார் அங்கு சென்று பார்வையிட்டார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காவிரி நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகம் காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று திருச்சி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர்.க.மணிவாசன், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் நித்தியானந்தம் மற்றும் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, மாநகராட்சி, தீயணைப்புத் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் ஆலங்குடி மகாஜனம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.வி.பேட்டை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவிலான தண்ணீர் வரத்தால் கூழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை நள்ளிரவில் கலெக்டர் மா.பிரதீப்குமார் அங்கு சென்று பார்வையிட்டார். அந்த பகுதியில் வசித்து வருபவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள தேவாலயத்தில் தங்க வைக்கப்பபட்டனர். அவர்களிடம் பேசிய கலெக்டர், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் அவர்களுக்கு உணவு வழங்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    • மங்களூர் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • மக்காத குப்பை, தண்ணீர் மற்றும் கிராம சுகாதாரம் கணினி ஒளித்திரை மூலம் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், மங்களூர் மற்றும் நல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி துறையால் மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகள் குறித்தும், திட்ட பயனாளிகளின் வீடுகளை முன்னேற்றத்திற்கு கொண்டு வர வேண்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாதிரி கிராமமான சிறுகரம்பலூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட கழிப்பறை, மக்கும் குப்பை, மக்காத குப்பை, தண்ணீர் மற்றும் கிராம சுகாதாரம் குறித்து கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு கணினி ஒளித்திரை மூலம் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. பின்னர் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் கோரிக்கை களை மாவட்ட கலெக்டரிடம் மனுவாக அளித்தனர்.

    • சங்கராபுரத்தில் மேற்கு ஒன்றிய பா.ஜனதா பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி பூத் கமிட்டி கிளை ஆய்வு கூட்டம் நடைபெற்றது

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் மேற்கு ஒன்றியம் கொசப்பாடி, எஸ்.வி.பாளையம் மற்றும் பல கிராமத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி பூத் கமிட்டி கிளை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். இதில் மாவட்ட தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் பாஸ்கரன், கோவிந்தன், கொசப்பாடி கிளை தலைவர் மதி மற்றும் எஸ்.வி.பாளையம் கிளை தலைவர் கோவிந்தராஜ் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மயிலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு நடைபெற்றது.
    • ஆய்வு செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    விழுப்புரம்:

    மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

    இதில்ஒன்றிய குழுபெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கினார். துணை தலைவர் புனிதா ராமஜெயம் முன்னிலை வகித்தார் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி வரவேற்றார். கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டபணிகள், பொது நிதி, 15-வது மானிய நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் செயல்படுத்தும் பணிகள், தூய்மை பாரத இயக்கத்தில் நடைபெற்று வரும் பணி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சேதுநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், மத்திய ஒன்றிய செயலாளர் செழியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
    நல்லம்பள்ளி:

    நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தர்மபுரி உதவி கலெக்டர் சிவனருள் தலைமை தாங்கினார். தாசில்தார் பழனியம்மாள், தனி தாசில்தார்கள் சரவணன், குமரன், மாதேஸ், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் உதவி கலெக்டர் பேசுகையில், இ சேவை, மக்கள் கணினி மையம், கூட்டுறவு கடன் சங்க இ சேவை ஆகிய மையங்களில் இருந்து இருப்பிட சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து சான்றிதழ்கள் வழங்க வேண்டும். நில அளவை தொடர்பான கோப்புகள் தேங்காமல், மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி மனுதாரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று கூறினார். 
    ×