search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தூர் நகராட்சி ஆய்வு கூட்டத்தில்  அமைச்சர் பங்கேற்பு
    X

    அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    சாத்தூர் நகராட்சி ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு

    • சாத்தூர் நகராட்சி ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றனர்.
    • இந்து சமய அறநிலையத்துறை செயலரிடம் ஆவணங்களை சமர்ப்பித்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் குருசாமி, நகராட்சி ஆணையாளர் இளவரசன் முன்னிலை வகித்தனர்.

    சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நகராட்சியில் உள்ள பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு, கழிவு நீர் வாறுகால், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்-குறைபாடுகள் குறித்து கவுன்சிலர்கள் முறையிட்டனர். இந்த குறைகள் சம்பந்தமாக அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து சரி செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

    மேலும் கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் வாடகை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து முறையிட்டனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலரிடம் ஆவணங்களை சமர்ப்பித்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். வட்டாட்சியர் வெங்கடேசன், தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், போலீஸ் டி.எஸ்.பி. நாகராஜ், இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் மற்றும் நகராட்சி, வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×