search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student murder"

    கோவை கல்லூரியில் நடந்த மோதலில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். #Coimbatore #CollegeStudent
    கோவை:

    கோவை மலுமிச்சம்பட்டி அருகே ஒரே வளாகத்தில் இந்துஸ்தான் என்ஜினீயரிங் கல்லூரி, இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகள் உள்ளன.

    இதில் என்ஜினீயரிங் கல்லூரி தன்னாட்சி நிர்வாகம் பெற்றது. மற்றொரு கல்லூரி அண்ணா பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்டது ஆகும். இந்த கல்லூரிகளில் தங்கள் கல்லூரி தான் சிறந்தது என்று முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    விடுமுறை நாளான நேற்று விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் சிலர் கேன்டீனுக்கு சாப்பிட சென்றனர். அப்போது மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது.

    இதில் திருச்சி குளித்தலை அண்ணாநகரை சேர்ந்த ஆரிப் அகமது கான் என்பவரின் மகன் அஸ்ரப் முகமது (18) என்பவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். இதைப்பார்த்து அவரது நண்பர்கள் கதறினர். உடனே விடுதி மாணவர்கள் அங்கு திரண்டனர்.

    அவர்கள் அஸ்ரப் முகமதுவை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.



    இதுதொடர்பாக அஸ்ரப் முகமதுவின் நண்பர் கவுசிக் செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பி.டெக். ஐ.டி. பிரிவில் முதலாமாண்டு படிக்கும் மதுரை செங்கோல் நகரை சேர்ந்த தினகரன்(19), ஏரோநாட்டிக்கல் பிரிவில் முதலாமாண்டு படிக்கும் நீலகிரியை சேர்ந்த நிதீஷ் குமார்(19), பி.இ. மெக்கானிக்கல் பிரிவில் முதலாமாண்டு படிக்கும் சிவகங்கையை சேர்ந்த சரவணகுமார்(19) ஆகிய 3 மாணவர்களை கைது செய்தனர்.

    கைதான மாணவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

    கல்லூரியில் படிக்கும் தவுபிக் என்பவர் நேற்று தினகரனின் நண்பரிடம் கல்லூரியில் தினகரன் தான் பெரிய ஆளாமே, அவரை எல்லோரும் தீனா என்று தான் அழைப்பார்களாமே என கிண்டலாக கேட்டதோடு, தினகரனின் போட்டோவை வாட்ஸ்அப்பில் அனுப்புமாறு கூறி உள்ளார்.

    இதையறிந்த தினகரன் தனது நண்பர்களுடன் சென்று தவுபிக்கிடம் கேட்ட போது தான் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அஸ்ரப் அகமது, தினகரனிடம் உன்னை பற்றி புகார் செய்து கல்லூரியை விட்டே நீக்க வைக்கிறேன் பார் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தினகரன் கத்தியால் குத்தியதில் அஸ்ரப் முகமது இறந்துள்ளார்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    இவர்கள் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் கைதான மாணவர்கள் தரப்பை சேர்ந்த விஷ்ணுபிரசாத் என்பவரும் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதன்பேரில் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். #Coimbatore #CollegeStudent
    அரூர் அருகே பிளஸ்-2 மாணவியை நண்பருடன் சேர்ந்து கற்பழித்தது உண்மைதான் என கைதான வாலிபர் சதீஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். #dharmapurigirlstudent #girlmolested
    கம்பைநல்லூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சதீஷ் (வயது 22) நேற்று முன்தினம் ஏற்காட்டில் கைது செய்யப்பட்டார். அரூர் கொண்டுவரப்பட்ட அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை தருமபுரி மகளிர் விரைவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 29-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு இன்று அதிகாலை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    கைதான வாலிபர் சதீஷ் மாணவியை கற்பழித்தது உண்மைதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம் அவர் கூறிய தகவல்கள் வருமாறு:-

    எனக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி அவரை சந்தித்து பேசுவேன். தீபாவளி சமயத்தில் ஊருக்கு வந்தபோது அவரை சந்தித்து தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டேன். அந்த சமயத்தில் அங்கு வந்த ரமேசும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட ரமேஷ் (22) என்ற வாலிபர் சேலம் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். 19-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டார். அவரை காவலில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்து உள்ளனர். இதேபோல சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சதீசையும் காவலில் எடுத்து விசாரிக்கலாமா? என்று போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவியின் உடல் நேற்று மாலை 5 மணிக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வேலூர் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் தண்டர்சீப், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் மதன்ராஜ், அமீர்தாசுல்தான் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். 3 மணி நேரம் நடைபெற்ற பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அரசு ஆம்புலன்ஸ் மூலம் சிட்லிங் மலை கிராமத்திற்கு மாணவி உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் அஞ்சலிக்கு பிறகு இரவு 11.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவியின் வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் லட்சுமி.

    மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போஸ்கோ சட்டத்தின் கீழ் முதலில் கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். தற்போது போக்சோ சட்டப்பிரிவோடு, பாலியல் பலாத்காரம், கொலை ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. வழக்கு மாற்றம் குறித்த சட்ட மாறுதல் அறிக்கையும் இந்த வழக்கை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரியான அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி தாக்கல் செய்து உள்ளார். குற்ற பத்திரிகையில் வழக்கு மாற்றம் தொடர்பான விவரங்கள் இடம்பெறும். இந்த வழக்கில் விரைவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை ஏற்கனவே மாணவி இறப்பதற்கு முன்பு 6-ந் தேதி ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். அதில் மீண்டும் இந்த வழக்கில் புகார் மனு கொடுத்து உள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    எனது மகள் மலம் கழிக்க சென்றபோது சதீஷ், ரமேஷ் ஆகியோர் தன்னை கெடுத்ததாக கூறினார். இந்த விவரங்களை கடந்த 6-ந் தேதி பெண் உதவி ஆய்வாளர் விசாரித்தபோது பெண்ணின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு இதை சொல்லவில்லை என்றும் அவர் என்னிடம் கூறினார். இன்று எனது மகள் இறந்துவிட்ட நிலையில் என் மகளின் சாவுக்கு சதீஷ் மற்றும் ரமேஷ் இருவரும் தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மாணவியின் தந்தை அண்ணாமலை புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி சட்ட மாறுதல் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளார்.

    தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விரைவில் சிட்லிங் கிராமத்திற்கு வர உள்ளது. அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் மாணவியின் குடும்பத்துக்கு விரைவில் நிதி உதவியும் வழங்கப்பட உள்ளது.

    ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன்

    மாணவியின் புகாரை பதிவு செய்யாமல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துக் கிருஷ்ணன் மாவட்ட ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

    இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார்களா? என்பது குறித்து அரூர் ஆர்.டி.ஓ. புண்ணியக்கோடி விசாரணை நடத்தி வருகிறார். நேற்று அவர் மலை கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார். விரைவில் அவர் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் கோட்டப்பட்டி போலீசாரிடம் விசாரணை நடத்த உள்ளார். விசாரணை அறிக்கை தாக்கல் செய்த பிறகு போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கலெக்டர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் முடிவு செய்வார்கள்.  #dharmapurigirlstudent #girlmolested
    தருமபுரியில் பிளஸ்2 மாணவியை பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் தேடப்பட்ட வாலிபர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். #DharmapuriGirlStudent #GirlMolested
    சேலம்:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் 3 நாட்களுக்கு பிறகு இறந்து போனார்.

    இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் தேடப்பட்ட சிட்லிங் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ரமேஷ் (22) என்ற வாலிபர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்தனர்.

    இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த ரமேஷ், சேலம் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். இதையடுத்து அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கலாம் எனவும், இது தொடர்பாக விரைவில் மனு தாக்கல் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. #DharmapuriGirlStudent #GirlMolested
    கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாரப்பன் தெருவைச் சேர்ந்த அன்சாரி. இவரது மகன் அப்துல் கலாம்(14). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று அப்துல் கலாம் தனது நண்பர்களுடன் காக்களூர் தனியார் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார். அப்போது, வேடிக்கை பார்க்க வந்த மாணவர்கள் மீது பந்து விழுந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வேம்புலி அம்மன் கோவிலை சேர்ந்த 4 பள்ளி மாணவர்கள் அப்துல் கலாமிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கினார்கள்.இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.

    உடனே அவரது நண்பர்கள் அப்துல்கலாமின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர் விரைந்து வந்து அப்துல் கலாமை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தந்தை அன்சாரி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் கலாமை தாக்கிய வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 4 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். கைதான 4 பேரும் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். #tamilnews
    கேரளாவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் மார்க்சிஸ்டு தொண்டரை வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு, உக்கிலாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் இரு மாணவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று மாணவர்கள் இருவரும் பள்ளி வகுப்பறையில் இருந்த தேர்வு தாள்களை எடுக்கச் சென்றனர். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இது கைகலப்பாக மாறியது.

    அப்போது ஒரு மாணவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் இன்னொரு மாணவரை சரமாரியாக குத்தினார்.

    இதில் அந்த மாணவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வகுப்பறையில் இருந்த மாணவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு காசர்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்து போன மாணவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முகமது மஜிலாக் (வயது16) என்பவர் ஆவார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது மஜிலாக்கை கொலை செய்ததாக பிளஸ்-1 மாணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காசர்கோடு உப்பாலா பகுதியைச் சேர்ந்தவர் சித்திக்(25). மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தொண்டர். நேற்று பகல் 11 மணிக்கு சோன்கால் பகுதியில் நடந்துச் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் சித்திக்கை வழி மறித்து சரமாரியாக தாக்கியது, அரிவாளாலும் வெட்டினர்.

    இதில் சித்திக் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் வழியிலேயே சித்திக் இறந்து போனார்.

    இந்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். சித்திக் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா கட்சியினரே காரணம் என்றும் கூறினர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    ×