search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sophia arrest"

    தூத்துக்குடியில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #BJP #TamilisaiSoundararajan #Sophia
    தூத்துக்குடி:

    தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும் சோபியா என்ற பெண், பாஜக ஒழிக என கோஷமிட்டார்.

    இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சோபியாவை கைது செய்தனர், 

    விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா (23) என்பதும், அவர் கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், தூத்துக்குடியில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    சோபியா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன், இயக்குனர் பாரதிராஜா உள்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சோபியாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையே, பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட 10 பேர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சோபியாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். #BJP #TamilisaiSoundararajan #Stalin
    பாஜக ஒழிக என கோஷமிட்ட சோபியா என்ற பெண்ணை தமிழக போலீசார் கைது செய்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பாஜக தலைவருக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan #Stalin
    சென்னை:

    தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும் சோபியா என்ற பெண், பாஜக ஒழிக என கோஷமிட்டார்.

    இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சோபியாவை கைது செய்தனர், 

    இந்நிலையில், சோபியா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    அவர் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு டுவிட்டரில் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்.

    அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?
    நானும் சொல்கின்றேன்! பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக! என பதிவிட்டுள்ளார். #BJP #TamilisaiSoundararajan #Stalin
    ×