search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "soldiers"

    தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கிராமங்கள் மீது அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியபோது, அங்குள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதாக ஐ.நா. குற்றம்சாட்டியுள்ளது.
    ஜெனிவா:

    தெற்கு சூடானில் அரசுப் படைக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சிப் படைகளிடம் உள்ள கிராமங்களை கைப்பற்றுவதற்காக அரசுப் படைகள் மற்றும் ஆதரவு படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த சண்டையின்போது போர் விதிமீறல்கள் நடைபெறுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், தெற்கு சூடானில் உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    அந்த அறிக்கையில், தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கிராமங்கள் மீது அரசுப் படைகள் மற்றும் அதன் ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தியதில் 232 பேர் கொல்லப்பட்டதாகவும், தாக்குதலின்போது 120 பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் கற்பழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யூனைட்டி மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை நடைபெற்ற இந்த அட்டூழியங்களுக்கு மூன்று ராணுவ கமாண்டர்களே பொறுப்பாளிகள் என ஐ.நா. விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆப்கானிஸ்தானில் அரசு போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் பாத்கிஸ் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். #Afghanistanceasefire #Talibanattack

    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் ரம்ஜானை முன்னிட்டு அந்நாட்டு அரசு மற்றும் தலிபான்கள் போர் நிறுத்தம் அறிவித்திருந்தனர். இந்த போர் நிறுத்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இந்த போர் நிறுத்தத்தை மேலும் 10 நாட்களுக்கு அரசு நீட்டித்தது.

    ஆனால் இந்த அறிவிப்பை ஏற்க தலிபான்கள் மறுத்தனர். மேலும் தங்கள் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அவர்கள் அறிவித்தனர். கடந்த புதன்கிழமை பாத்கிஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ராணுவ தளத்தை குறிவைத்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், பாத்கிஸ் மாகாணத்தில் உள்ள ஒரு சாலை கட்டுமான அலுவலகத்தை குறிவைத்து சில பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 13 என்ஜினியர்கள் மற்றும் 20 பாதுகாவலர்களை கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை தலிபான்கள் நடத்தியிருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistanceasefire #Talibanattack
    ஆப்கானிஸ்தானில் அரசு போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் பாத்கிஸ் மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். #Afghanistanceasefire #Talibanattack

    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் ரம்ஜானை முன்னிட்டு அந்நாட்டு அரசு மற்றும் தலிபான்கள் போர் நிறுத்தம் அறிவித்திருந்தனர். இந்த போர் நிறுத்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இந்த போர் நிறுத்தத்தை மேலும் 10 நாட்களுக்கு அரசு நீட்டித்தது.

    ஆனால் இந்த அறிவிப்பை ஏற்க தலிபான்கள் மறுத்தனர். மேலும் தங்கள் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அவர்கள் அறிவித்தனர்.

    இதனிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டின் பாத்கிஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ராணுவ தளத்தை குறிவைத்து தலிபான்கள் இன்று பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த ராணுவ தளத்தை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. #Afghanistanceasefire #Talibanattack
    பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் துணை ராணுவ படையைச் சேர்ந்த 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். #ISattack #pakistanisoldierskilled
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தின் அதிகப்படியான வளங்களை ஒதுக்கக்கோரி சமீபகாலமாக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று மஸ்தூங் நகரின் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த துணை ராணுவ வீரர்கள் மீது பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையேயான துப்பாக்கிச்சூட்டில் 1 பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐஎஸ் அமைப்பின் தொடர்புடைய இணையதளத்தில் முகமது அல் குரசானி, ரித்வான் அல் குரசானி ஆகிய 2 பயங்கரவாதிகளே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #ISattack #pakistanisoldierskilled
    ×