என் மலர்
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தத்திற்கு இடையே தலிபான்கள் பயங்கர தாக்குதல் - 30 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் அரசு போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் பாத்கிஸ் மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். #Afghanistanceasefire #Talibanattack
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் ரம்ஜானை முன்னிட்டு அந்நாட்டு அரசு மற்றும் தலிபான்கள் போர் நிறுத்தம் அறிவித்திருந்தனர். இந்த போர் நிறுத்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இந்த போர் நிறுத்தத்தை மேலும் 10 நாட்களுக்கு அரசு நீட்டித்தது.
ஆனால் இந்த அறிவிப்பை ஏற்க தலிபான்கள் மறுத்தனர். மேலும் தங்கள் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அவர்கள் அறிவித்தனர்.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டின் பாத்கிஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ராணுவ தளத்தை குறிவைத்து தலிபான்கள் இன்று பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த ராணுவ தளத்தை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. #Afghanistanceasefire #Talibanattack
Next Story






