search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Singapore"

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்புக்காக 81 கோடி ரூபாயை சிங்கப்பூர் அரசு செலவு செய்துள்ளது. #Singapore #TrumpKimSummit
    சிங்கப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது. கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவதற்காக இந்த சந்திப்பை சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்தது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்புக்காக 81 கோடி ரூபாயை சிங்கப்பூர் அரசு செலவு செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், சிங்கப்பூரின் டிரம்ப் - கிம் சந்திப்புக்காக 81.50 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இது 12 மில்லியன் அமெரிக்க டாலராகும். முதலில் கணிக்கப்பட்ட தொகையை விட சற்று குறைவாகும் என தெரிவித்துள்ளது. #Singapore #TrumpKimSummit
    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது உடல் நிலையை யாரும் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக விசே‌ஷ கழிவறை சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதைத்தான் கிம் பயன்படுத்தினார். #KimJongUn
    சிங்கப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் வடகொரிய தலைவர் கிம்ஜாங்கும் சிங்கப்பூரில் நேற்று முன்தினம் சந்தித்து வரலாற்று சிறப்புமிக்க பேச்சு நடத்தினார்கள்.

    இதன்மூலம் இரு நாடுகள் இடையேயான போர் பதட்டம் தணிந்தது. இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பில் டிரம்பை விட உலக மக்களால் வடகொரிய அதிபர் கிம்தான் அதிகம் ஈர்க்கப்பட்டார். ஏனெனில் கிம் பற்றி உலகம் அறியாத ரகசியங்கள் சில வெளியாகி உள்ளது.

    டிரம்ப்பை விட கிம்முக்குத்தான் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அவர் யாரிடம் எங்கு, எந்த அறையில் பேச வேண்டும் எனபன முன்பே துல்லியமாக திட்டமிடப்பட்டன.


    அவருக்கு 2 விமானங்கள் மற்றும் கப்பலில் விசே‌ஷ உடைகளும், கொரிய உணவு வகைகளும் கொண்டு செல்லப்பட்டன. தனது உடல் நிலையை யாரும் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக விசே‌ஷ கழிவறையும் சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதைத்தான் கிம் பயன்படுத்தினார்.

    மேலும் இந்த சந்திப்புக்கு முன்பு தான் கொல்லப்படலாம் என்ற அச்சமும் கிம்மிடம் இருந்ததாகவும், இதன் காரணமாகவே அவர் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #KimJongUn #TrumpKimSummit
    அமெரிக்காவும் வடகொரியாவும் இணைந்து புதிய வரலாறு படைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #singaporesummit #Trumpkimsummit #Trumpspeech
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று கையொப்பமிட்டனர்.

    பின்னர், செய்தியாளர்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப், இன்றைய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதுபோல், அதில் உள்ள அம்சங்களின்படி கிம் ஜாங் அன் வாழ்ந்து காட்ட வேண்டும் என தெரிவித்தார்.

    பின்னர் டிரம்ப் பேசியதாவது:-

    இன்றைய நாள் உலக வரலாற்றில் மிக முக்கியமான உயர்வான நாளாகும். புதிய வரலாறு படைக்கவும், புதிய அத்தியாயத்தை எழுதவும் நாங்கள் தயாராகி விட்டோம். எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதை கடந்தகாலம் வரையறுக்க முடியாது. யார் வேண்டுமானாலும் போரை ஏற்படுத்தலாம். ஆனால், விவேகமானவர்களால் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும்.

    போரின் பயங்கரங்களை அமைதிக்கான வரங்களால் நாம் மாற்றி அமைக்க முடியும். அணு ஆயுதங்களை ஒழிக்கும் வடகொரியாவின் நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கும். இன்றைய ஒப்பந்தத்துக்கு பின்னர் வடகொரியாவுடன் உறவுகளை ஏற்படுத்தி கொள்ள உலக நாடுகள் ஆர்வம் காட்டும்.



    தனது நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த பாடுபடும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் மிகவும் திறமைசாலி. எங்கள் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேர்மையாகவும், நேரடியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்தது.

    முந்தைய அமெரிக்க அதிபர்கள் மூலம் இந்த ஒப்பந்தம் உருவாகி இருக்க முடியாது என நம்பியதாக கிம் ஜாங் அன் என்னிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பு வடகொரியா மக்களுக்கு மட்டுமின்றி, அமெரிக்க மக்களுக்கும் நன்மையாக அமையும் என எண்ணுகிறேன்.

    அணு ஏவுகணைகள் ஒரு பொருட்டல்ல என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படும்போது, முன்னர் (வடகொரியா மீது) விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் நீக்கப்படும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன். அணு ஆயுதங்களை கைவிடுவதால் வடகொரியா பெறும் நன்மைகள் ஏராளம். உரிய நேரம் வரும்போது அமெரிக்காவுக்கு வருமாறு கிம் ஜாங் அன்-ஐ அழைக்கப் போவதாக நான் தெரிவித்தேன். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்.

    கிம் ஜாங் அன் வடகொரியாவுக்கு போய் சேர்ந்ததும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள பணிகளை தொடங்குவார் என நான் நினைக்கிறேன். கொரிய தீபகற்பத்தில் இனி அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #singaporesummit #Trumpkimsummit #Trumpspeech
    சிங்கப்பூர் கேபெல்லா ஓட்டலில் நடைபெற்று வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது பேச்சுவார்த்தை முடிவடைந்தது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    சிங்கப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது.

    டிரம்பும், கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இவர்கள் தங்களது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேச உள்ளனர்.

    இதையடுத்து, இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு நாட்டு தலைவர்களும் சுமார் 45 நிமிடம் பேசினர்.

    சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும் இரு நாட்டு தலைவர்களும் ஓட்டலின் பால்கனியில் நின்றபடி செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர்.



    இந்த பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் கூறுகையில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான பேச்சுவார்த்தை நன்றாக அமைந்தது என தெரிவித்தார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பை உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் ஏராளமானோர் கண்டுகளித்தனர். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    சிங்கப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது.

    டிரம்பும், கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இவர்கள் தங்களது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேச உள்ளனர்.

    சிங்கப்பூரில் குறிப்பிட்ட ஓட்டலை சுற்றி பல்வேறு பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமானோர் இந்த சந்திப்பை கண்டனர்.



    தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் அந்நாட்டு மக்கள் இருவரது சந்திப்பையும் பார்த்தனர். இதேபோல், உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் டிரம்ப் - கிம் சந்திப்பை பார்த்து ரசித்தனர்.

    வடகொரியா உருவான பின்னர், வடகொரியா மற்றும் அமெரிக்க அதிபர்கள் சந்தித்திக் கொள்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    சிங்கப்பூர் செண்டோசா தீவில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் சந்தித்தனர் #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    சிங்கப்பூர்:

    வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

    இதற்கிடையே, டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் 12-ம் தேதி நடைபெறும் என்றும், இவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

    இதையடுத்து, டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவே சிங்கப்பூர் வந்தடைந்தனர். இருவரது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது என சிங்கப்பூர் அரசும் தெரிவித்துள்ளது.



    இந்நிலையில், சந்திப்பு நடக்கவுள்ள ஓட்டலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் சென்றடைந்தார். அவரை சந்திக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    இதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்தனர். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    சிங்கப்பூர் செண்டோசா தீவில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் தனது ஓட்டலில் இருந்து புறப்பட்டு சென்றார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    சிங்கப்பூர்:

    வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

    இதற்கிடையே, டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் 12-ம் தேதி நடைபெறும் என்றும், இவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.



    இதையடுத்து, டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவே சிங்கப்பூர் வந்தடைந்தனர். இருவரது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது என சிங்கப்பூர் அரசும் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சந்திப்பு நடக்கவுள்ள ஓட்டலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் சென்றடைந்தார். அவரை சந்திக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க வந்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன், சிங்கப்பூர்வாசிகள் செல்பி எடுத்து மகிழ்ந்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    சிங்கப்பூர்:

    வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

    இதற்கிடையே, டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் 12-ம் தேதி நடைபெறும் என்றும், இவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்தது.

    இதையடுத்து, டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவே சிங்கப்பூர் வந்தடைந்தனர். இருவரது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது என சிங்கப்பூர் அரசும் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சிங்கப்பூர் வந்திருந்த வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அங்குள்ள முக்கிய சுற்றுலா தளங்களை இரவில் சுற்றிப் பார்த்தார்.



    மெரினா பே என்ற பகுதிக்கு வந்திருந்த கிம் ஜாங் உன்னை பொதுமக்கள் ஆர்வமுடன் அவரை சந்தித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் இஸ்பலாண்டே என்ற பகுதிக்கு சென்ற கிம் ஜாங்கை அதிகாரிகள் வரவேற்றதுடன் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    கிம் ஜாங் அன்னுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    வடகொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவற்காக சிங்கப்பூர் வந்து சேர்ந்துள்ள டிரம்ப், இன்று சிங்கப்பூர் பிரதமரை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். #Singaporesummit #DonaldTrump
    சிங்கப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நாளை காலை 9 மணியளவில் சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

    உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்றே சிங்கப்பூர் வந்தடைந்தார். சிங்கப்பூர் நாட்டின், பய லேபார் விமான தளத்திற்கு வந்தடைந்த அவரை, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.


    இந்நிலையில், சிங்கப்பூர் அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான இஸ்தானாவில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் லீ செய்ன் லூங் டிரம்பை வரவேற்று அழைத்துச் சென்றார். டிரம்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் சாரா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

    இதையடுத்து இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து லீ செய்ன் லூங், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டிரம்ப் மற்றும் அவருடன் சென்ற குழுவினருக்கு பிரதமர் லீ மதிய விருந்து அளித்தார். #Singaporesummit #DonaldTrump
    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க வந்திருந்த தென்கொரியா நாட்டை சேர்ந்த இரு பத்திரிகையாளர்களை சிங்கப்பூர் அரசு வெளியேற்றியது. #Singaporedeports #SouthKoreanmediastaff #TrumpKimsummit
    சிங்கப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் வரும் 12-ம் தேதி காலை 9 மணியளவில் சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

    உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையை செய்தியாக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 2500 ஊடகவியலாளர்கள் சிங்கப்பூரில் திரண்டுள்ளனர். இவர்கள் செய்திகளை சேகரிக்க தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க தென்கொரியா அரசுக்கு சொந்தமான வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையவழி (ஆன்லைன்) ஊடகங்களின் சார்பாக இரு பத்திரிகையாளர்கள் சிங்கப்பூருக்கு வந்தனர்.

    உரிய அனுமதி இல்லாமல் சிங்கப்பூரில் உள்ள வடகொரியா நாட்டு தூதர் அலுவலகத்துக்குள் நுழைந்ததாக நேற்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து, சிங்கப்பூருக்குள் நுழைய அந்த பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு, அவர்கள் தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் போலீசார் இன்று தெரிவித்துள்ளனர். #Singaporedeports #SouthKoreanmediastaff  #TrumpKimsummit 
    அடுத்த வாரம் சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    வாஷிங்டன்:

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசவுள்ளனர். அவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்தார்.

    இந்நிலையில், அடுத்த வாரம் சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். 

    இந்த சந்திப்பு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பை சந்தித்து பேசினார்.

    அதன்பின்னர் புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னுடன் சிங்கப்பூரில் நடக்க உள்ள சந்திப்பு வட கொரியாவிற்கு ஒரு புதிய எதிர்காலத்தின் தொடக்கத்தை பிரதிபலிக்கும். உண்மையை சொல்லப் போனால் உலகிற்கு ஓர் ஒரு பிரகாசமான புதிய எதிர்காலம். இந்த சந்திப்பு சுமூகமாக முடிந்தால் அடுத்த 5 நாட்களுக்குள் கிம் ஜாங் அன்னை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என தெரிவித்தார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    வாஷிங்டன்:

    வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா - தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

    வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. திட்டமிட்டபடி வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்தார்.

    இந்நிலையில். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறுகையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னுடனான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. நானும் இதற்காக மிகுந்த முன்னேற்பாட்டுடன் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    டிரம்ப் - கிம் சந்திப்புக்காக உலகம் முழுவதிலும் இருந்து 2,500 பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    ×