என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trump speech"

    • சார்லி கிர்க் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது.
    • உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது. இதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.

    சார்லி கிர்க்கின் கொலைக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என்று டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சார்லி கிர்க்கை சுட்டவரை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. 

    அமெரிக்காவும் வடகொரியாவும் இணைந்து புதிய வரலாறு படைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #singaporesummit #Trumpkimsummit #Trumpspeech
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று கையொப்பமிட்டனர்.

    பின்னர், செய்தியாளர்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப், இன்றைய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதுபோல், அதில் உள்ள அம்சங்களின்படி கிம் ஜாங் அன் வாழ்ந்து காட்ட வேண்டும் என தெரிவித்தார்.

    பின்னர் டிரம்ப் பேசியதாவது:-

    இன்றைய நாள் உலக வரலாற்றில் மிக முக்கியமான உயர்வான நாளாகும். புதிய வரலாறு படைக்கவும், புதிய அத்தியாயத்தை எழுதவும் நாங்கள் தயாராகி விட்டோம். எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதை கடந்தகாலம் வரையறுக்க முடியாது. யார் வேண்டுமானாலும் போரை ஏற்படுத்தலாம். ஆனால், விவேகமானவர்களால் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும்.

    போரின் பயங்கரங்களை அமைதிக்கான வரங்களால் நாம் மாற்றி அமைக்க முடியும். அணு ஆயுதங்களை ஒழிக்கும் வடகொரியாவின் நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கும். இன்றைய ஒப்பந்தத்துக்கு பின்னர் வடகொரியாவுடன் உறவுகளை ஏற்படுத்தி கொள்ள உலக நாடுகள் ஆர்வம் காட்டும்.



    தனது நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த பாடுபடும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் மிகவும் திறமைசாலி. எங்கள் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேர்மையாகவும், நேரடியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்தது.

    முந்தைய அமெரிக்க அதிபர்கள் மூலம் இந்த ஒப்பந்தம் உருவாகி இருக்க முடியாது என நம்பியதாக கிம் ஜாங் அன் என்னிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பு வடகொரியா மக்களுக்கு மட்டுமின்றி, அமெரிக்க மக்களுக்கும் நன்மையாக அமையும் என எண்ணுகிறேன்.

    அணு ஏவுகணைகள் ஒரு பொருட்டல்ல என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படும்போது, முன்னர் (வடகொரியா மீது) விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் நீக்கப்படும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன். அணு ஆயுதங்களை கைவிடுவதால் வடகொரியா பெறும் நன்மைகள் ஏராளம். உரிய நேரம் வரும்போது அமெரிக்காவுக்கு வருமாறு கிம் ஜாங் அன்-ஐ அழைக்கப் போவதாக நான் தெரிவித்தேன். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்.

    கிம் ஜாங் அன் வடகொரியாவுக்கு போய் சேர்ந்ததும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள பணிகளை தொடங்குவார் என நான் நினைக்கிறேன். கொரிய தீபகற்பத்தில் இனி அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #singaporesummit #Trumpkimsummit #Trumpspeech
    ×