search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shakib Al Hasan"

    டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றவர் ஷாகிப் அல் ஹசன்.
    துபாய்:

    ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியில் குரூப் 1 பிரிவில் வங்காளதேசம் இடம்பிடித்துள்ளது.
    அந்த அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.

    இந்நிலையில், வங்காளதேசத்தின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

    சமீபத்தில் ஷார்ஜாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் ஷாகிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது நடுவரிடம் மோதல் போக்கில் ஈடுபட்ட வங்காள தேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #BANvWI
    வங்காள தேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியது.

    வங்காள தேச அணி பேட்டிங் செய்தபோது 14-வது ஓவரில், நடுவர் ஒரு பந்திற்கு வைடு கொடுக்கவில்லை. இதனால் ஷாகிப் அல் ஹசன் நடுவரை நோக்கி கத்தினார். அத்துடன் அவரிடம் சென்று நீண்ட நேரம் பேசினார். இதுகுறித்து நடுவர் புகார் செய்தார்.

    போட்டி முடிந்த பின்னர் ஷாகிப் அல் ஹசன் தனது தவறை ஒப்புக்கொண்டதால், 15 சதவிதம் அபராதத்துடன் தடைக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் ஷாகிப் அல் ஹசன் 43 பந்தில் 63 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொதப்பியதால் வங்காள தேசம் 129 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
    சுண்டு விரல் காயம் மிகவும் மோசமானதால் மூன்று மாதங்கள் ஓய்வு தேவைப்படும் என்று ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார் #ShakibAlHasan
    வங்காள தேச கிரிக்கெட் அணியின் துருப்புச் சீட்டாக இருப்பவர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். 31 வயதாகும் இவருக்கு இலங்கை தொடரின்போது சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் அறுவை சிகிச்சை செய்யவில்லை. சமீபத்தில் வங்காள தேச அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடியது. அப்போது சுண்டு விரலில் வலி ஏற்பட்டது. இதனால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தார்.

    ஆனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கியதால் வங்காள தேச கிரிக்கெட் வாரியம் ஷாகிப் அல் ஹசன் விளையாட வேண்டும் என்று விரும்பியது. ஷாகிப் அல் ஹசனும் அணியில் இடம்பிடித்து விளையாடினார். பாகிஸ்தான் போட்டிக்கு முன் வலி அதிகம் ஏற்பட்டதால் தொடரில் இருந்து விலகினார்.

    அத்துடன் உடனடியாக சொந்த நாடு திரும்பினார். சொந்த நாடு திரும்பிய வேகத்தில் சுண்டு விரல் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் காயம் ஏற்பட்ட இடத்தில் இருந்து மணிக்கட்டு வரைக்கும் சீழ் வைத்திருந்ததால் உடனடியாக ஆபரேசன் செய்ய இயலாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

    உடனடியாக காயத்தில் இருந்து சீழை அகற்றும் பணியில் டாக்டர்கள் ஈடுபட்டனர். தற்போது ஓரளவிற்கு சீழ் அகற்றப்பட்டுள்ளது. ஒருவேளை இரண்டு மூன்று நாட்கள் தாமதமாக வந்திருந்தால் மணிக்கட்டு செயல் இழந்து போயிருக்கும் என்று கூறிய ஷாகிப் அல் ஹசன் காயம் குணமடைய மூன்று மாத காலம் ஆகும் என தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘நான் மருத்துவமனைக்கு வந்த போது, டாக்டர்கள் என்னிடம் எவ்வளவு சீழ் வெளியேற்ற முடியுமோ, அவ்வளவு சீழை வெளியேற்ற வேண்டும். நான் தாமதம் செய்திருந்தால், மணிக்கட்டு வரை பரவிய நோய்தொற்று மிகவும் மோசமாக நிலையை அடைந்திருக்கும். இன்னும் சில நாட்கள் தாமத்திருந்தால், என்னுடைய மணிக்கட்டு செயல்படாமலேயே போயிருக்கும்.

    டாக்டர்கள் என்னுடைய காயத்தில் இருந்து சீழை வெளியே எடுத்த பின்னர், தற்போது பரவாயில்லை. இந்த பிரச்சினை இன்னும் தீரவில்லை. இதனால் காயம் அடைந்த விரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அறுவை சிகிச்சை நடைபெறும். அதன்பின் 8 வாரங்கள், அதாவது மூன்று மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்த விலகி இருக்க வேண்டியது இருக்கும்’’ என்றார்.
    சுண்டு விரல் காயம் நீண்ட நாட்களாக அச்சுறுத்தி வந்ததால், தற்போது ஷாகிப் அல் ஹசன் அறுவை சிகிச்சை செய்துள்ளார். #ShakibAlHasan
    வங்காள தேச கிரிக்கெட் அணியின் துருப்புச் சீட்டாக இருப்பவர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். 31 வயதாகும் இவருக்கு இலங்கை தொடரின்போது சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் அறுவை சிகிச்சை செய்யவில்லை.

    சமீபத்தில் வங்காள தேச அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடியது. அப்போது சுண்டு விரலில் வலி ஏற்பட்டது. இதனால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தார்.

    ஆனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கியதால் வங்காள தேச கிரிக்கெட் வாரியம் ஷாகிப் அல் ஹசன் விளையாட வேண்டும் என்று விரும்பியது. ஷாகிப் அல் ஹசனும் அணியில் இடம்பிடித்து விளையாடினார். பாகிஸ்தான் போட்டிக்கு முன் வலி அதிகம் ஏற்பட்டதால் தொடரில் இருந்து விலகினார்.



    அத்துடன் உடனடியாக சொந்த நாடு திரும்பினார். சொந்த நாடு திரும்பிய வேகத்தில் சுண்டு விரல் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்த பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    அத்துடன் காயம் குறித்து ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘நான் சொந்த ஊர் திரும்பிய பின்னர், எனது சுண்டு விரல் இவ்வளவு மோசமான நிலையை அடைந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. சுண்டு விரலில் அதிகமான வலியும், வீக்கமும் இருந்தது. சுண்டு விரலில் 60 முதல் 70 சதவீதம் வரை நோய் தொற்று இருந்தது. விரலில் இருந்து சீழ் வெளியே எடுக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.
    ஆசிய கோப்பை ‘சூப்பர் 4’ கடைசி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்காள தேசம் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #AsiaCup2018
    ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றின் கடைசி ஆட்டம் அபு தாபியில் இன்று நடக்கிறது. இதில் பாகிஸ்தான் - வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.



    வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை. சர்கார், ருபெல், மொமினுல் ஹக்யூ ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் அடித்தபோது ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்து முஷ்பிகுர் ரஹிம் சாதனைப் படைத்துள்ளார். #MushfiqurRahim
    வங்காள தேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹிம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 33 ரன்கள் சேர்த்தார். 7 ரன்னைத் தொட்டபோது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 190 போடடிகளில் 5 ஆயிரம் ரன்னைத் தொட்டார்.

    இதன்மூலம் 5 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வங்காள தேச வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.



    31 வயதாகும் முஷ்பிகுர் ரஹிம் 2005-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும், 2006-ல் ஒருநாள் போட்டியிலும் அறிமுகமானார். ஒருநாள் போட்டியில் 6 சதம், 29 அரைசதங்களும், டெஸ்ட் போட்டியில் ஐந்து சதம், 29 அரைசதங்களும் அடித்துள்ளார்.
    ஆசிய கோப்பைக்கான வங்காள தேச அணியில் இடம் பிடித்துள்ள முக்கிய வீரர்கள் காயம் அடைந்துள்ளதால், அந்த அணிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. #AsiaCup2018
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் 15-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். ஷாகிப் அல் ஹசன் ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வந்தார். அவர் எப்படியும் குணமடைந்து விடுவார் என்று வங்காள தேச கிரிக்கெட் அணி நம்பிக்கையில் இருந்தது.



    ஆனால் தான் 20 முதல் 30 சதவிகிதம் உடற்தகுதி மட்டுமே பெற்றுள்ளேன் என்று ஷாகிப் அல் ஹசன் தெரிவித்தார். இதனால் வங்காள தேச அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்ட தொடக்க வீரர் தமிம் இக்பாலின் வலது கை விரலில் முறிவு ஏற்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தமிம் இக்பால் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. ஒரே நேரத்தில் முக்கியமான இரண்டு வீரர்கள் காயத்திற்குள்ளானதால் வங்காள தேச அணிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்கு தான் 30 சதவிகிதம்தான் பிட் ஆக உள்ளேன் என்று ஷாகிப் அல் ஹசன் கூறியதால் வங்காள தேச அணி கவலையில் உள்ளது. #AsiaCup2018
    ஆசிய கோப்பை 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றது. தகுதிச் சுற்று அடிப்படையில் ஹாங் காங் தகுதிப் பெற்றுள்ளது.

    வங்காள தேச அணி துருப்புச் சீட்டாக இருப்பவர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். இவருக்கு இலங்கை தொடரின்போது சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் அறுவை சிகிச்சை செய்யவில்லை.

    சமீபத்தில் வங்காள தேச அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடியது. அப்போது சுண்டு விரலில் வலி ஏற்பட்டது. இதனால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தார்.



    வருகிற 15-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை தொடருக்கு ஷாகிப் அல் ஹசன் போதுமான அளவு உடற்தகுதி பெற்று விடுவார் என்று கேப்டன் மோர்தசா மற்றும் அணி நிர்வாகம் எண்ணியது.

    இந்நிலையில் தான் 20 முதல் 30 சதவிகிதம் மட்டுமே உடற்தகுதி பெற்றுள்ளேன் என்ற ஷாகிப் அல் ஹசனே கூறியுள்ளார். ஷாகிப் அல் ஹசனின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வங்காள தேச அணிக்கு கவலையை அளித்துள்ளது.
    ஷாகிப் அல் ஹசன் கைவிரல் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் ஆசிய கோப்பையில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. #ShakibAlHasan
    வங்காள தேச கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டரும் ஆன ஷாகிப் அல் ஹசன் கடந்த ஜனவரி மாதம் சொந்த மண்ணில் இலங்கையை எதிர்த்து ஒருநாள் தொடரில் விளையாடினார். அப்போது இடது கை சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது.

    இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் இருந்து விலகினார். அதன்பின் ஆஸ்திரேலியா சென்று சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் வற்புறுத்தினார்கள்.



    ஆனால் ஷாகிப் அல் ஹசன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை. சிகிச்சைக்குப்பின் இலங்கையில் நடைபெற்ற நிதாஹா் டிராபியில் விளையாடினால். கடந்த சில வாரங்களாக வங்காள தேசம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.

    கடைசியாக டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது விரலில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார். அறுவை சிகிச்சை மேற்கொண்டால் ஐக்கிய அரவு எமிரேட்சில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசியக் கோப்பையில் பங்கேற்பது சந்தேகம் எனக்கூறப்படுகிறது.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற வங்காள தேசம் 2-1 என தொடரை அசத்தலாக கைப்பற்றியது. #WIvBAN
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும், 2-வது ஆட்டத்தில் வங்காள தேசமும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி அமெரிக்கா நேரப்படி நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. புளோரிடாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வங்காள தேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி லித்தோன் தாஸ், தமிம் இக்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தமிம் இக்பால் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். லித்தோன் தாஸ் 32 பந்தில் 61 ரன்கள் விளாசினார்.



    அதன்பின் வந்த ஷாகிப் அல் ஹசன் 24 ரன்களும், மெஹ்முதுல்லா ஆட்டமிழக்காமல் 32 ரன்களும் அடிக்க வங்காள தேசம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

    பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க விக்கட்டுக்கள் சீரான இடைவெளில் சரிந்து கொண்டே வந்தது.

    அதிரடி மன்னன் அந்த்ரே ரஸல் பட்டாசாக வெடித்தார். அவர் 21 பந்தில் 47 ரன்கள் குவித்தார். அப்போது 17.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அந்த நேரத்தில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது.



    இதில் வங்காள தேசம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியது. லித்தோன் தாஸ் ஆட்ட நாயகன் விருதையும், ஷாகிப் அல் ஹசன் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வங்காள தேசம் 2-0 எனக் கைப்பற்றியது. அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 தொடரை வங்காள தேசம் 2-1 எனக் கைப்பற்றியது.
    கயானாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தமிம் இக்பால் சதத்தால் வெஸ்ட் இண்டீசை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காள தேசம். #WIvBAN #TamimIqbal
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில் நேற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது.

    கயானாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தமிம் இக்பால், அனாமுல் ஹக்யூ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹக்யூ ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார்.

    2-வது விக்கெட்டுக்கு தமிம் இக்பால் உடன் ஷாகிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷாகிப் அல் ஹசன் 121 பந்தில் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மூன்று ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மறுமுனையியல் தமிம் இக்பால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

    இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 44.3 ஓவரில் 207 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த சபீர் ரஹ்மான் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் அதிரடியாக விளையாடி 11 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன்கள் அடித்தார். தமிம் இக்பால் 160 பந்தில் 130 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க வங்காள தேசம் 50 ஓவரில 4 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் குவித்தது.

    பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 60 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். ஹெட்மையர் 52 ரன்கள் எடுத்தார்.



    மற்ற வீரர்கள சராசரி இடைவெளியில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வங்காள தேசம் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காள தேச கேப்டன் மோர்தசா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    சதம் அடித்த தமிம் இக்பால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வரும் 25-ந்தேதி (நாளை மறுநாள்) நடக்கிறது)

    இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்காள தேசம் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
    ஜமைக்காவில் நடைபெற்ற 2-வது டெஸ்டிலும் வங்காள தேசத்தை 166 ரன்னில் வீழ்த்தி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ். #WIvBAN
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கடந்த 12-ந்தேதி (வியாழக்கிழமை) ஜமைக்கா கிங்ஸ்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய கிரேக் பிராத்வைட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 110 ரன்கள் சேர்த்தார். ஹேட்மையர் 86 ரன் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 354 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வங்காள தேச சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் வங்காள தேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. தமிம் இக்பால் (47), ஷாகிப் அல் ஹசன் (32) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் வங்காள தேசம் 149 ரன்னில் சுருண்டது.

    205 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஷாகிப் அல் ஹசனின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாம் 129 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ். ஷாகிப் அல் ஹசன் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    முதல் இன்னிங்சில் 205 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் 129 ரன்னுடன் 334 ரன்கள் முன்னிலைப் பெற்றது வெஸ்ட் இண்டீஸ். இதனால் வங்காள தேசத்திற்கு 335 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்.



    335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேச அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் தமிம் இக்பால் டக்அவுட்டில் வெளியேறினார். லித்தோன் தாஸ் 33 ரன்களும், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 54 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 31 ரன்களும் அடிக்க 168 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் 166 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்றிருந்ததால் 2-0 என தொடரைக் கைப்பற்றியது. முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஹோல்டர், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    ×