search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிம் இக்பால் சதத்தால் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை பந்தாடியது வங்காள தேசம்
    X

    தமிம் இக்பால் சதத்தால் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை பந்தாடியது வங்காள தேசம்

    கயானாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தமிம் இக்பால் சதத்தால் வெஸ்ட் இண்டீசை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காள தேசம். #WIvBAN #TamimIqbal
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில் நேற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது.

    கயானாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தமிம் இக்பால், அனாமுல் ஹக்யூ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹக்யூ ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார்.

    2-வது விக்கெட்டுக்கு தமிம் இக்பால் உடன் ஷாகிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷாகிப் அல் ஹசன் 121 பந்தில் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மூன்று ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மறுமுனையியல் தமிம் இக்பால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

    இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 44.3 ஓவரில் 207 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த சபீர் ரஹ்மான் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் அதிரடியாக விளையாடி 11 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன்கள் அடித்தார். தமிம் இக்பால் 160 பந்தில் 130 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க வங்காள தேசம் 50 ஓவரில 4 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் குவித்தது.

    பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 60 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். ஹெட்மையர் 52 ரன்கள் எடுத்தார்.



    மற்ற வீரர்கள சராசரி இடைவெளியில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வங்காள தேசம் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காள தேச கேப்டன் மோர்தசா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    சதம் அடித்த தமிம் இக்பால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வரும் 25-ந்தேதி (நாளை மறுநாள்) நடக்கிறது)

    இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்காள தேசம் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×