search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand robbery"

    தேனி அருகே அனுமதியின்றி மணல் திருடிய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    சின்னமனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். துரைச்சாமிபுரம் சுடுகாட்டு பாதையில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த நபர்களை மடக்கி விசாரணை நடத்தினர்.

    ஆற்று புறம்போக்கு பகுதியில் அனுதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வரவே மாட்டு வண்டியை பறிமுதல் செய்து துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த முருகன் (52), மாரிச்சாமி (48) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் தேவாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வம் தலைமையிலான போலீசார் சிந்தலைச்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அவ்வழியே மார்க்கையன் கோட்டை முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (28) என்பவர் டிராக்டரில் மணல் திருடி வந்தது தெரிய வந்தது.

    போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதுகுளத்தூர் அருகே குடிமராமத்து என்ற பெயரில் கண்மாய்களில் மணல் கடத்தல் அதிகரித்து வருகிறது. #Sandrobbery

    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் பெரிய கண்மாய் 64 லட்ச ரூபாய் குடிமராமத்து திட்டத்தின்கீழ் மராமத்து செய்யப்பட்டு வருகிறது. மராமத்து பணியின்போது தண்ணீர் தேங்கும் கண்மாய் பகுதிகளை 3 அடி ஆழத்திலும், கரைகளையும் பலப்படுத்த வேண்டும்.

    ஆனால் கண்மாய் மராமத்து பணிகள் பெயரளவில் மட்டுமே சீரமைக்கபட்டு, மணல் உள்ள பகுதிகளில் மணலை பொதுப்பணித்துறையினரின் அனுமதியோடு, குவியலாக எடுத்து, இரவு நேரங்களில் விற்பனை செய்கின்றனர்.

    இதனால் கண்மாயின் சில பகுதிகள் 40 அடிக்கும் ஆழமாக தோண்டப்பட்டு, விபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதலபாதாளத்தில் உள்ளது. கண்மாய் மராமத்து பணிகளை முறையாக பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.

    அதேபோல் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இந்தப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    15 ஆண்டுகளாக நடந்து வந்த மணல் கொள்ளையே முக்கொம்பு கொள்ளிடம் பாலம் இடிய காரணம் என்று விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். #PRPandian
    திருச்சி:

    திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்படும் மதகுகளில் நேற்றிரவு மதகுகள் உடைந்து பாலம் துண்டிக்கப்பட்டது. இதனால் மேட்டூரில் இருந்து திருச்சி காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் முழுவதும் உடைந்த மதகுகள் வழியாக கொள்ளிடத்தில் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து விவசாய சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது :-

    காவிரி-கொள்ளிடம் ஆற்றில் கரூர் முதல் திருச்சி வரை கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையே கொள்ளிடம் இரும்பு பாலம் மற்றும் முக்கொம்பு அணை பாலம் உடைய காரணம் ஆகும்.

    கோர்ட்டு உத்தரவுப்படி ஆறுகளில் 5 அடி அளவு தான் மணல் அள்ள வேண்டும். ஆனால் அரசு குவாரிகளிலும் பல அனுமதி பெறாத திருட்டு குவாரிகளிலும் காவிரி ஆறுகளில் 50 அடி முதல் 100 அடி ஆழம் வரை மணலை அள்ளி விட்டனர்.

    பாலங்கள் அடியிலும் இந்த மணல் கொள்ளை நடந்தது. அதனால் தான் வெள்ளம் வரும் நேரங்களில் பள்ளங்களை நிரப்ப வெள்ள நீர் பாலங்களின் அருகில் உள்ள மணல் திட்டை அள்ளிக்கொண்டு செல்கிறது.

    அப்போது பாலத்தின் தூண் அருகில் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் பாலம் சுவர் வலுவிழந்து போய் விடுகிறது. இதனால் தான் பலவீனம் அடைந்து கொள்ளிடம் பழைய பாலமும், நேற்றிரவு முக்கொம்பு மேலணை பாலமும் உடைந்து ஆற்றுக்குள் விழுந்து விட்டன.

    கடந்த ஆண்டு கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணையின் மதகுகள் உடைந்தது. தொடர்ந்து எடப்பாடி அருகில் உள்ள அணையிலும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு நீர் மேலாண்மையில் அணைகள் பாதுகாப்பு, பராமரிப்பிற்கு ஒதுக்கீடு செய்த தொகை எவ்வளவு? செலவு செய்தது எவ்வளவு? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.


    முக்கொம்பு அணை பராமரிப்பு குறித்து இங்குள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிக்கை அனுப்பியிருந்தாலும் அதை பராமரிக்காமல் செலவு செய்தது போல கணக்கை மட்டும் காட்டினார்களா? அதிகாரிகள் கைகளை யார் கட்டிப் போட்டது என்பதை விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    தொடர்ந்து ஏற்படும் பாலம் பிரச்சனைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். இதை வலியுறுத்தி நாங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    அணைகள் கட்டப்பட்டது தண்ணீரை தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்துவதற்காகத் தான் தவிர இப்படி உடைந்து வீணாக வெளியேறுவதற்காக அல்ல. தண்ணீருக்காக போராடி, அதன் மூலம் கிடைத்த நீரை தேக்கி வைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் போனது கண்டிக்கத்தக்கது. நீர் மேலாண்மை சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று கூறும் அரசு கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தேக்க என்ன செய்துள்ளது.?

    இவ்வாறு அவர் கூறினார். #PRPandian
    சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய டிராக்டர் மற்றும் மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்து வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் மற்றும் செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்று பகுதியில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், இந்த தடையை மீறி இரவு நேரங்களிலும், அதிகாலை வேளையிலும் டிப்பர் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது.

    இந்த மணல் கடத்தலால் சில சமயங்களில் கொலையிலும் முடிந்து விடுகிறது. வில்லியனூர் பகுதியில் இது போன்று 3-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து மணல் கடத்தலை முற்றிலும் தடுக்க வில்லியனூர் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வில்லியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் நேற்று இரவு ஆரியபாளையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர் சேந்தநத்தம் பகுதியை சேர்ந்த எழிலரசன் (21) என்பதும், இவர் வில்லியனூர் சங்கரா பரணி ஆற்றில் இருந்து மணலை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து எழிலரசனை கைது செய்தனர்.

    இதுபோல் டிராக்டரில் மணல் கடத்தி வந்த கணுவாய்பேட்டை புதுநகரை சேர்ந்த முத்து (40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் மற்றும் மாட்டு வண்டியை வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    ஜலகண்டாபுரம் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரியை, கனிம வளத்துறை அதிகாரி சுரேஷ் பறிமுதல் செய்தார்.

    நங்கவள்ளி:

    ஜலகண்டாபுரம் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரியை, கனிம வளத்துறை அதிகாரி சுரேஷ் பறிமுதல் செய்தார்.

    கனிம வளத்துறை துணை இயக்குநர் சுரேஷ் நேற்று இரவு ஜலகண்டாபுரம் பகுதியில், வாகன தனிக்கையில் ஈடுபட்டார். அப்போது ஆவடத்தூர் கிராமம் குண்டத்துமேடு அருகில், செம்மண் லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்றில் உரிய ஆவணங்கள் இல்லாமல், செம்மண் கடத்திச் செல்வது தெரிய வந்தது.

    இந்த மண் எடப்பாடி தாலுகா ஆடையூரிலிந்து, தாரமங்கலம் கொண்டு செல்வதாக விசாரணையில் தெரிந்தது. லாரியுடன் மணலை பறிமுதல் செய்து ஜலகண்டாபுரம் போலீசில் துணை இயக்குநர் சுரேஷ் ஒப்படைத்தார்.

    மீஞ்சூர் அருகே லாரியில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் ஏரியில் மணல் கடத்தப்படுவதாக மீஞ்சூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்குரோந்து பணியில் ஈடுபட்ட போது இரண்டு லாரியில் மணல் கடத்திய விழுப்புரத்தை சேர்ந்த சங்கர், மீஞ்சூர்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. எழில் என்பவர் தப்பி ஓடிவிட்டார்.

    பறவைகள் சரணாலயம் அருகேயுள்ள கண்மாயில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

    மதுரை:

    பறவைகள் சரணாலயம் அருகேயுள்ள கண்மாயில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    அவரிடம் திருமங்கலம் அருகேயுள்ள பேரையூர், சாத்தூர், எழுமலை கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர்.

    அதில் பேரையூர் அருகேயுள்ள எழுமலையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இதன் அருகேயுள்ள கண்மாயில் மணல் திருட்டு நடைபெறுவதாக பேரையூர் தாசில்தாரிடம் புகார் மனு கொடுத்தோம். எங்கள் புகார் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    நடவடிக்கை எடுக்காத தாசில்தார் மீது நடவடிக்கை எடுப்பதோடு மணல் திருட்டையும் தடுக்க வேண்டுகிறோம்.

    மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    போடி அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    போடி அருகே பெருமாள் கவுண்டன் பட்டி பகுதியில் உள்ள நீர்நிலைகளில் அதிக அளவு மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் பொதுமக்கள் அல்லல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே மணல் கடத்தும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீசார் பெருமாள்கவுண்டன்பட்டி ஆலமரம் பஸ் நிறுத்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த டிராக்டரை மறித்து சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கண்ணபிரகாசம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய கும்பலை போலீசார் மடக்கினர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வரதராஜபுரம் மேற்கே உள்ள கன்னிமார் ஓடையில் மணல் அள்ளப்படுவதாக ராஜதானி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் ராஜதானி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது 5 மாட்டுவண்டிகள் அணிவகுத்து வந்தது. உடனே போலீசார் மடக்கி சோதனைபோட்டதில் மணல் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    மணல் கடத்தி வந்ததாக கொட்டப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 36), வரதராஜபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி (60), ஆனந்த் (23), ராஜேஷ்(29), சுரேஷ் (35) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. பிடிப்பட்ட அவர்கள் ராஜதானி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

    செய்யாறு ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க சூரியசக்தி மூலம் இயங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடியுமா? என்று தமிழக அரசிடம் ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #ChennaiHighCourt #TNGovernment
    சென்னை:

    ஐகோர்ட்டில் ஏ.சவுந்தரராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘திருவண்ணாமலை மாவட்டம் விண்ணமங்கலம், கங்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் செய்யாறு ஆற்றில் சட்டவிரோதமாக பலர் மணல் அள்ளுகின்றனர். எனவே, மணல் கொள்ளையை தடுக்க இங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் அதிகாரிகளை ஈடுபடுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்படும் இடத்தில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த கிராமங்களில் ஜூலை 22-ந்தேதி சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டபோது எடுத்த புகைப்படங்களையும் ஐகோர்ட்டில் சமர்பித்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் புகைப்படத்தை எப்போது எடுத்தார் என்பது தெரியவில்லை. அவர் கூறும் இடங்களில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். 2017-18-ம் ஆண்டுகளில் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 783 லாரிகள், 1,426 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 15 லட்சத்து 44 ஆயிரத்து 405 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.



    மேலும் அவர், ‘2016-17-ம் ஆண்டுகளில் 120 லாரிகள், 60 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.56 லட்சத்து 84 ஆயிரத்து 330 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்கள் மீது 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆரணி, சேத்துப்பட்டு தாசில்தார்கள் இரவு-பகலாக அங்கு திடீர் சோதனையில் ஈடுபடுகின்றனர்’ என்றும் கூறினார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த விளக்கத்தை பார்க்கும்போது, மனுதாரர் கூறும் இடங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது என்று தெரிகிறது. எனவே, இந்த பகுதியில் சூரியசக்தியை கொண்டு இயங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடியுமா? என்பது குறித்து அக்டோபர் 1-ந்தேதிக்குள் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர். #ChennaiHighCourt #TNGovernment
    ஆண்டிப்பட்டி அருகே சரக்கு வேனில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். #sandrobbery

    தேனி:

    ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு மணல்கொள்ளையர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இருந்த போதும் கடத்தலை தடுக்க முடியவில்லை. கண்டமனூர் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான்பாஷா தலைமையிலான போலீசார் அடைக்கம்பட்டி பிரிவு பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது வேகமாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக விஜயராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். சீப்பாலக்கோட்டை- காமாட்சிபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த குப்பிநாயக்கன்பட்டி லட்சுமிபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி அருகே கொட்டக்குடி ஆற்றில் மணல் கொள்ளை அதிகரித்து வருகிறது.
    மேலசொக்கநாதபுரம்:

    குரங்கணி மலை பகுதியில் இருந்து உருவாகி வரும் கொட்டக்குடி ஆறு போடி வழியாக தேனி வைகை ஆற்றில் கலக்கிறது. கடந்த சில வருடங்களாகவே பருவமழை போதிய அளவில் பெய்யாததால் இப்பகுதியில் உள்ள ஆற்றில் நீர் வரத்து குறைந்தது. இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கொட்டக்குடி ஆறு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.

    பெரும் பகுதியில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டு மணல் கொள்ளையர்களை பிடித்து அபராதம் விதித்த போதும் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை.

    தாசில்தார் ஆர்த்தி, வருவாய் ஆய்வாளர் ராமர் தலைமையில் அலுவலர்கள் தருமத்துப்பட்டி கொட்டக்குடி ஆற்று பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மணல் கொள்ளையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ராம்கி என்பவரிடம் இருந்து 2 டிராக்டர்கள், ஈஸ்வரன் என்பவரிடம் ஒரு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல் போடியில் மணல் கடத்திய ஸ்டாலின் என்பவரின் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. அனைவருக்கும் அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
    ×