என் மலர்
நீங்கள் தேடியது "Theni sand robbery"
மேலசொக்கநாதபுரம்:
முல்லை பெரியாற்றில் அதிகளவு மணல் கொள்ளை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைந்தது. மேலும் ராட்சத பள்ளங்கள் தோண்டியதால் நீர்வரத்து உள்ள சமயங்களில் சுழலில் சிச்கி உயிரிழப்புகளும் அதிகரித்தது. எனவே மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். தாசில்தார் ஆர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் நேற்று நள்ளிரவு 18-ம் கால்வாய் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது முல்லை பெரியாற்றில் இருந்து மணல் கடத்தி சரக்கு வாகனம் மற்றும் மாட்டு வண்டிகளில் ஏற்றி வந்தனர்.
அதிகாரிகளை கண்டதும் வாகனங்களில் வந்தவர்கள் அங்கேயே விட்டு தப்பி ஓடிவிட்டனர். அவற்றை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகம் கொண்டுவரப்பட்டது. மேலும் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
தேனி:
முல்லைப் பெரியாற்றில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் மணல் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.
போலீசார் ரோந்து சென்று மணல் கொள்ளையர்களை பிடித்து அபராதம் விதித்தபோது மணல் திருட்டை தடுக்க முடியவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகள் முடங்கி உள்ளன. மேலும் குடிநீருக்காக தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராயப்பன்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையிலான போலீசார் சண்முகாநதி அணை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தியது தெரிய வந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து ராயப்பன்பட்டியை சேர்ந்த ராமர் (வயது20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
சின்னமனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். துரைச்சாமிபுரம் சுடுகாட்டு பாதையில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த நபர்களை மடக்கி விசாரணை நடத்தினர்.
ஆற்று புறம்போக்கு பகுதியில் அனுதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வரவே மாட்டு வண்டியை பறிமுதல் செய்து துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த முருகன் (52), மாரிச்சாமி (48) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் தேவாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வம் தலைமையிலான போலீசார் சிந்தலைச்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அவ்வழியே மார்க்கையன் கோட்டை முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (28) என்பவர் டிராக்டரில் மணல் திருடி வந்தது தெரிய வந்தது.
போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் குடிநீருக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சன்னாசிபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 6 மூட்டை மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. மணல் மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக போடி கீழத்தெருவை சேர்ந்த பாலமுருகன் (25) என்பவரை கைது செய்தனர்.






