என் மலர்
செய்திகள்

தேனி அருகே ஓடை மணல் கடத்திய வாலிபர் கைது
தேனி அருகே ஒடை மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தேனி:
முல்லைப் பெரியாற்றில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் மணல் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.
போலீசார் ரோந்து சென்று மணல் கொள்ளையர்களை பிடித்து அபராதம் விதித்தபோது மணல் திருட்டை தடுக்க முடியவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய பணிகள் முடங்கி உள்ளன. மேலும் குடிநீருக்காக தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராயப்பன்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையிலான போலீசார் சண்முகாநதி அணை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தியது தெரிய வந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து ராயப்பன்பட்டியை சேர்ந்த ராமர் (வயது20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






