search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andipatti sand robbery"

    ஆண்டிப்பட்டி அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய கும்பலை போலீசார் மடக்கினர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வரதராஜபுரம் மேற்கே உள்ள கன்னிமார் ஓடையில் மணல் அள்ளப்படுவதாக ராஜதானி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் ராஜதானி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது 5 மாட்டுவண்டிகள் அணிவகுத்து வந்தது. உடனே போலீசார் மடக்கி சோதனைபோட்டதில் மணல் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    மணல் கடத்தி வந்ததாக கொட்டப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 36), வரதராஜபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி (60), ஆனந்த் (23), ராஜேஷ்(29), சுரேஷ் (35) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. பிடிப்பட்ட அவர்கள் ராஜதானி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

    ஆண்டிப்பட்டி அருகே சரக்கு வேனில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். #sandrobbery

    தேனி:

    ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு மணல்கொள்ளையர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இருந்த போதும் கடத்தலை தடுக்க முடியவில்லை. கண்டமனூர் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான்பாஷா தலைமையிலான போலீசார் அடைக்கம்பட்டி பிரிவு பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது வேகமாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக விஜயராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். சீப்பாலக்கோட்டை- காமாட்சிபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த குப்பிநாயக்கன்பட்டி லட்சுமிபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×