search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bodi sand robbery"

    போடி அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    போடி அருகே பெருமாள் கவுண்டன் பட்டி பகுதியில் உள்ள நீர்நிலைகளில் அதிக அளவு மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் பொதுமக்கள் அல்லல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே மணல் கடத்தும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீசார் பெருமாள்கவுண்டன்பட்டி ஆலமரம் பஸ் நிறுத்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த டிராக்டரை மறித்து சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கண்ணபிரகாசம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி அருகே கொட்டக்குடி ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.#Sandrobbery

    மேலசொக்கநாதபுரம்:

    போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் அதிக அளவு மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

    போலீசார் மற்றும் கனிம வளத்துறையினர் அவ்வப்போது மணல் கடத்தல் கும்பலை பிடித்து அபராதம் விதித்தபோதும் மணல் கொள்ளை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    இதனால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

    குறிப்பாக கொட்டக்குடி ஆற்றில் அதிக அளவு மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதனை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். போடி டவுன் போலீசார் புதூர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கொட்டக்குடி ஆற்றில் 2 பேர் மாட்டு வண்டியில் மணல் கடத்திக் கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்து மாடுகளுடன் வண்டியையும் பறிமுதல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு மாடுகளை போலீசார் விடுவித்தனர்.

    மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டி (வயது42), செல்வம் (25) ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    போடி அருகே மணல் கடத்த பயன்படுத்திய டிப்பர் லாரிகள் மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சில இடங்களில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மட்டும் தங்கள் நிலங்களுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதனை பயன்படுத்தி சிலர் மணல் கடத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். போலீசார் அவ்வப்போது இவர்களை கண்காணித்து அபராதம் விதித்தபோதும் மணல் கொள்ளை தொடர்ந்து கொண்டே வருகிறது.

    போடி அருகே பாலார்பட்டி கூழையனூர் பகுதியில் தாசில்தார் ஆர்த்தி, ராசிங்காபுரம் ஆய்வாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வேகமாக வந்த 2 டிப்பர் லாரிகள் மற்றும் டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அனுமதி இல்லாமல் மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து 2 லாரிகள் மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாகனங்களை போடி தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மணல் கடத்தி வந்த நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×