search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sales"

    • ஜவுளித்தொழில் என குறிப்பிடும்போது கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, ஆயத்த ஆடை மற்றும் நூற்பாலைகளையும் சேர்த்தே குறிப்பிடுகிறது.
    • உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உடனுக்குடன் விற்பனை செய்வதற்கான வழிவகைகளை செய்து வருகிறது.

    திருப்பூர்:

    உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜவுளிப்பொருட்களை விற்பனையாக்கும் திட்டங்களில் கவனம் ெசலுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சைமா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறியிருப்பதாவது:-

    நமது நாட்டில் ஜவுளித்தொழில் என குறிப்பிடும்போது கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, ஆயத்த ஆடை மற்றும் நூற்பாலைகளையும் சேர்த்தே குறிப்பிடுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்றின் காலத்தில் இருந்து தற்போது வரை ஜவுளித்தொழில் பின்னடைவை சந்தித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கடன், மானியம், வட்டி தள்ளுபடி என பல சலுகைகளை அறிவித்து ஜவுளி தொழிலை காப்பாற்ற நினைக்கிறார்கள். ஆனால் நமக்கு போட்டியாக உள்ள பிற நாடுகளில் ஜவுளித்தொழிலில் பிரச்சினை இல்லை. காரணம், அந்த அரசு உற்பத்தி உயர்வை மட்டுமே கணக்கிடாமல், உற்பத்தி ஆன பொருட்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உடனுக்குடன் விற்பனை செய்வதற்கான வழிவகைகளை செய்து வருகிறது.

    இந்திய அரசு மற்றும் தமிழக அரசும் ஆடை உற்பத்திக்கான உதவிகளை, சலுகைகளை மாற்றி யோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசின் உதவிகளையும், உறுதிமொழிகளையும் பெற்று புதிய, புதிய ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பெருகி வருகிறது. மேலும் ஏற்கனவே உள்ள உற்பத்தியாளர்களும் உற்பத்தியை பெருக்குவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தி வருகிறார்கள்.உற்பத்தி பெருக்கத்தில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நுகர்வோர்களிடம் கொண்டு சேர்ப்பதில் புதுமையான வழிமுறைகளை கண்டுபிடிக்க தவறி வருகிறோம். பிற போட்டி நாடுகளில் திட்டங்களை கூர்ந்து ஆராய வேண்டும். உற்பத்தி பெருக்கத்தை முன்னிலைப்படுத்தும் நேரத்தில் உற்பத்தியாகும் பொருட்களை உடனுக்குடன் விற்பனையாகும் வகையில் நுகர்வோரை சென்றடைய வணிக நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் புதிய வணிக வாய்ப்புகளை கண்டறியும் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலைபுதூர் வேளாண் கூடத்தில் நிலக்கடலை ரூ.2.16 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது
    • ஏலத்தில் 25.50 குவிண்டால் நிலக்கடலை விற்பனையானது

    கரூர், நவ. 23-

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இந்த வாரம் நடந்த ஏலத்தில் 25.50 குவிண்டால் எடை கொண்ட 77-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.90.39-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.30-க்கும், சராசரி விலையாக ரூ.86.70-க்கும் என ரூ 2லட்சத்து 16ஆயிரத்து 541-க்கு ஏலம் போனது.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக் கான ஏலம் நடைபெறுகிறது.
    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 19 லட்சத்து34 ஆயிரத்து 223-க்கு விற்பனையானது.

    வேலாயுதம்பாளையம்

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக் கான ஏலம் நடைபெறுகிறது.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 29 குவிண்டால் எடை கொண்ட 8 ஆயிரத்து 459 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.40-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.09-க்கும், சராசரி விலையாக ரூ.25.20-க்கும் என மொத்தம் ரூ.70 ஆயிரத்து 488-க்கு விற்பனையானது.

    அதேபோல் 224 குவிண்டால் எடை கொண்ட437-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.60-க்கும், சராசரி விலையாக ரூ.85.99-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.10-க்கும், சராசரி விலையாக ரூ.79.39-க்கும் என மொத்தம் ரூ.16 லட்சத்து 85 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது.

    அதேபோல் 11.75 குவிண்டால் எடை கொண்ட 16-மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.159.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.139.78-க்கும், சராசரி விலையாக ரூ.155.99-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 78ஆயிரத்து 135-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 19 லட்சத்து34 ஆயிரத்து 223-க்கு விற்பனையானது.

    • திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் மூலம் விற்பனை நடைபெற்றது
    • ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் மூலம் விற்பனை நடைபெற்றது.

    இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 4 விவசாயிகள், 15 மூட்டைகள் (704 கிலோ) தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர்.

    இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.53 ஆயிரத்திற்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.89-க்கும், குறைந்த பட்சமாக ரூ.62-க்கும், சராசரியாக ரூ.88- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார்.

    • கரூர் மாவட்டத்தில் உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி
    • 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையானது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புப்பா ளையம், திருக்காடுதுறை , நத்தமேடுப்பாளையம், தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், மோது காடு, பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்க ணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றி லை போன்ற வெற்றிலை களை பயிர் செய்துள்ளனர். பறிக்கப்படும் வெற்றிலை களை பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் வெற்றிலை அசோசி யேசன் வெற்றிலை மண்டிக ளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்வர்.

    இங்கு வாங்கப்படும் வெற்றிலைகள் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா , கர்நா டகா , மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்த ராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4500-க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.3000-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.1500-க்கும் வாங்கிச் சென்றனர்.

    நேற்று வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று 1,200-க்கும் வாங்கிச் சென்றனர்.

    • கரூர் மின்னணு தேசிய சந்தையில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ரூ.4.25 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றுள்ளது
    • 2 ஆயிரத்து 533 கிலோ தேங்காய்கள் விற்பனை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதன்படி இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 2 ஆயிரத்து 533 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.25.19 -க்கும், குறைந்தபட்சமாக ரூ15.10- க்கும், சராசரியாக ரூ.23.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 59 ஆயிரத்து 621- க்கு ஏலம் நடைபெற்றது.

    இதே போல ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 675 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ 85.09- க்கும் குறைந்தபட்சமாக ரூ 53.39- க்கும், சராசரியாக ரூ 82.89- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 980- க்கு ஏலம் நடைபெற்றது.

    • பெரம்பலூர் அருகே உள்ள சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது
    • தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆடுகள் விற்பனை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் வாரந்தோறும்  ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். மற்ற நாட்களை விட, தீபாவளி, பொங்கல், பக்ரீத், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் ஆடு விற்பனை களைகட்டும்.அதன்படி நாளை தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சிக்காக 100க்கும் மேற்பட்ட ஆடுகள் திருச்சி, அரியலூர், கடலூர், தஞ்சாவூர் என பல் வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இச்சந்தைகளுக்கு கொண்டு வந்தனர்.இவற்றை வாங்கி செல்வதற்கு ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.அவர்கள் போட்டிப்போட்டு வாங்கிதாலும், ஆடுகளின் வரத்து குறைவாக இருந்ததாலும் ஆடுகளின் விலை அதிகரித்தது.ஒரு நாள் ஆடு விற்பனை ரூ.2 கோடி என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மக்கள் புத்தாடை, பட்டாசு, பலகாரம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • கொரோனா வைரஸ் தாக்குதலால் நிலைகுலைந்த மக்களின் வருவாய், சேமிப்பு தற்போது சமநிலைக்கு வந்துள்ளதால் இந்த தீபாவளியை மக்கள் உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகி உள்ளனர்.

    திருச்சி

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மக்கள் புத்தாடை, பட்டாசு, பலகாரம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    திருச்சி மாநகரில் கடந்த ஒரு வார காலமாக ஜவுளி மற்றும் நகைக் கடைகள் நிரம்பியுள்ள என்.எஸ். பி. ரோடு, பெரிய கடை வீதி, சிங்காரத்தோப்பு, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் கடைவீதிகளில் சங்கமிக்கிறது.

    கொரோனா வைரஸ் தாக்குதலால் நிலைகுலைந்த மக்களின் வருவாய், சேமிப்பு தற்போது சமநிலைக்கு வந்துள்ளதால் இந்த தீபாவளியை மக்கள் உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகி உள்ளனர்.

    2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் ஊடுருவியது. அதன் தாக்கம் 2021 வரை நீடித்தது. உலகமெல்லாம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து வீடுகளில் முடங்கினர்.

    பின்னர் 2022ல் வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட்டனர். ஆனால் முந்தைய வேலை இழப்பு, வருவாய் இழப்பு போன்றவற்றில் இருந்து விடுபடுவதற்கு 3 ஆண்டுகள் பிடித்துள்ளது.

    திருச்சி மாநகரின் பிரபல ஜவுளிக்கடை அதிபர் ஒருவர் கூறும் போது,

    கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்கள் இந்த ஆண்டுதான் முழுமையாக மீண்டிருக்கிறார்கள்.

    கடந்த தீபாவளி பண்டிகையின் போது எளிய நடுத்தர மக்கள் ஒன்று இரண்டு ஆடை மட்டுமே வாங்கிச் சென்றனர். ஆனால் தற்போது மூன்று நான்கு சேலைகள் வாங்கி செல்கிறார்கள்.

    நடப்பாண்டில் ஏப்ரல் மே மாதத்தில் இருந்தே விற்பனை நன்றாக இருக்கிறது.

    கிராமப்புறங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள் தீபாவளி பர்சேஸ் முடித்து விட்டார்கள் என்றார்.

    அதேபோன்று நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை மாதத் தொடக்கத்தில் வந்திருப்பதால் சம்பளமும், போனசும் ஒரே நேரத்தில் கைக்கு வந்துள்ளதால் மாதச் சம்பளம் பெற்று வரும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் உற்சாகமடைந் துள்ளனர்.

    விற்பனை களை கட்டி உள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வெளி மாவட் டங்களில் இருந்து ஆடுகள் வாங்கி செல்வதற்கும் வியாபாரிகளும் வருவார்கள்.
    • இதில் 3500 முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலத்தில் வாரந் தோறும் வியாழக்கிழமை அன்று சந்தை நடைபெறு வது வழக்கம். ரம்ஜான் பக்ரீத் தீபாவளி பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டி கை நாட்களில் ஆடுகள் அதிக அளவில் விற்பனை யாவது வழக்கம். இதில் கள்ளக்குறிச்சி மட்டும் இல்லாமல் வெளி மாவட் டங்களில் இருந்து ஆடுகள் வாங்கி செல்வதற்கும் வியா பாரிகளும் வருவார்கள். இந்த நிலை யில் வருகின்றதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு கிராமங்க ளில் மாவட்டங்களில் இருந் தும் ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் 3500 முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. இன்று நடைபெற்ற வார சந்தையில் ஒரே நாளில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையாது.

    • விராலிமலையில் ரூ.1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விராலிமலை ஆட்டு சந்தை களை கட்டியது

    விராலிமலை,

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்த ஆட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டியது.

    இங்கு ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர். அதேபோன்று உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வியாபாரிகளும் ஆடுகள் வாங்க திரண்டனர்.

    இதில் அதிகபட்சமாக 5 கிலோ எடை கொண்ட ஆடு ரூ. 8000 வரையிலும், 8 கிலோ ஆடு ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலும், 10 கிலோ ஆடு ரூ.17 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    இருப்பினும் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் அதிக விலை கொடுத்து ஆடுகளை வாங்க தயக்கம் காட்டினர்.

    பின்னர் வேறு வழியில்லாமல் விற்பனை செய்ய கொண்டு வந்த ஆடுகளை திரும்ப கொண்டு செல்ல மனமில்லாமல் கிடைத்த விலைக்கு விவசா யிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்தனர்.

    தீபாவளி நெருங்குவதால் தீபாவளி அன்று இறைச்சி கடை அமைக்க வியாபாரி கள் அதிக அளவில் ஆடு களை வாங்கிச் சென்றனர். அதிகாலை முதல் நடை பெற்ற இந்த ஆட்டு சந்தையில் சுமார் ரூ.1 கோடியே 25 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடை பெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கடையின் வெளியே வாளிகளில் மணல், தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
    • கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.

    பேராவூரணி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த கடைகளுக்கு தற்காலிக மற்றும் நிரந்தர உரிமம் வழங்கப்படுகிறது. நிகழாண்டு பட்டாசு தொழிற்சாலைகளில் சில இடங்களில் வெடிவிபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.

    எனவே, பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.

    இதனால் பெரும்பாலான கடை களுக்கு இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பேராவூரணி பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய உரிமத்திற்கு விண்ணப்பித்திருந்த கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது வாளிகளில் மணல், தண்ணீர் வைத்திருக்க வேண்டும். தீ தடுப்பு கருவி இருக்க வேண்டும். மின் இணைப்புகள் பழுதின்றி இருக்க வேண்டும். கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும், அவசர கால வழி கண்டிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது பேராவூரணி வட்டாட்சியர் ஆர். தெய்வானை, வருவாய் ஆய்வாளர்கள் ஜெயதுரை, முருகேசன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் கமலநாதன், கிராம நிர்வாக அலுவலர் சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • வாழை இலை உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
    • இது குறித்து வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்ததில், அவர் விரைந்து வந்தார்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் காய்கறிகள் மற்றும் தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர்.இன்று காலை கடலூரை சுற்றியுள்ள விவசாயிகள், காய்கறிகள் மற்றும் வாழை இலை உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    கடலூர் காரைக்காட்டை சேர்ந்த மூதாட்டி கோவிந்தம்மாள், பாலூர் பகுதியில் இருந்து வாழை இலைகளை அறுத்து அதனை கட்டுகளாக கட்டி விற்பனைக்காக உழவர் சந்தைக்கு கொண்டு வந்திருந்தார். அப்போது வாழை இலை கட்டுகளில் இருந்து பாம்பு வெளிவந்து, மீண்டும் உள்ளே சென்று விட்டது. இது குறித்து வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்ததில், அவர் விரைந்து வந்தார். வாழை இலை கட்டுகளை பிரித்துப் பார்த்து, அதற்குள் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தார். இந்த சம்பவத்தால் உழவர் சந்தை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×