search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி
    X

    உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி

    • கரூர் மாவட்டத்தில் உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி
    • 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையானது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புப்பா ளையம், திருக்காடுதுறை , நத்தமேடுப்பாளையம், தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், மோது காடு, பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்க ணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றி லை போன்ற வெற்றிலை களை பயிர் செய்துள்ளனர். பறிக்கப்படும் வெற்றிலை களை பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் வெற்றிலை அசோசி யேசன் வெற்றிலை மண்டிக ளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்வர்.

    இங்கு வாங்கப்படும் வெற்றிலைகள் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா , கர்நா டகா , மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்த ராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4500-க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.3000-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.1500-க்கும் வாங்கிச் சென்றனர்.

    நேற்று வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று 1,200-க்கும் வாங்கிச் சென்றனர்.

    Next Story
    ×