என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனை
- விராலிமலையில் ரூ.1.25 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விராலிமலை ஆட்டு சந்தை களை கட்டியது
விராலிமலை,
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்த ஆட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டியது.
இங்கு ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர். அதேபோன்று உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வியாபாரிகளும் ஆடுகள் வாங்க திரண்டனர்.
இதில் அதிகபட்சமாக 5 கிலோ எடை கொண்ட ஆடு ரூ. 8000 வரையிலும், 8 கிலோ ஆடு ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலும், 10 கிலோ ஆடு ரூ.17 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இருப்பினும் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் அதிக விலை கொடுத்து ஆடுகளை வாங்க தயக்கம் காட்டினர்.
பின்னர் வேறு வழியில்லாமல் விற்பனை செய்ய கொண்டு வந்த ஆடுகளை திரும்ப கொண்டு செல்ல மனமில்லாமல் கிடைத்த விலைக்கு விவசா யிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்தனர்.
தீபாவளி நெருங்குவதால் தீபாவளி அன்று இறைச்சி கடை அமைக்க வியாபாரி கள் அதிக அளவில் ஆடு களை வாங்கிச் சென்றனர். அதிகாலை முதல் நடை பெற்ற இந்த ஆட்டு சந்தையில் சுமார் ரூ.1 கோடியே 25 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடை பெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






