search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "restaurant"

    • உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்கா, மிசோரி மாகாணம், கன்சஸ் நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கிச்சூடு சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 

    • சென்னையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஸ்பைடர்மேன் தோசை பற்றிய தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
    • ஸ்பைடர்மேன் தோசை தயாரிக்கும் அழகே தனி அழகாக உள்ளது.

    சென்னை:

    தோசை தெரியும். அது என்ன "ஸ்பைடர்மேன் தோசை"

    சென்னையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஸ்பைடர்மேன் தோசை பற்றிய தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. சென்னை அண்ணா நகரில் உள்ள கோரா புட் ஸ்ட்ரீட் என்ற உணவகத்தில் இந்த ஸ்பைடர்மேன் தோசை தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதை ஒரு பெண்மணி தயாரித்து வழங்குகிறார். அவர் ஸ்பைடர்மேன் தோசை தயாரிக்கும் அழகே தனி அழகாக உள்ளது.

    தோசை மாவு ஊற்றிய பிறகு அதில் முட்டை, காய்கறிகள் சேர்த்து அவர் ஸ்பைடர்மேன் தோசை தயாரிக்கிறார். நூல் நூலாக இருக்கும் அந்த தோசை கவர்ச்சியாக இருக்கிறது. பிறகு அதில் தக்காளி சாறு ஸ்மைலி வரைந்து கொடுக்கிறார். பார்ப்பதற்கு ஸ்பைடர்மேன் தோசை அழகாக இருப்பதால் சாப்பாட்டு பிரியர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த ஸ்பைடர்மேன் தோசை தயாரிப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் இதுவரை சுமார் 2 கோடி பேரை கவர்ந்துள்ளது. சுமார் 1000 பேர் லைக் போட்டுள்ளனர்.

    • அழகு நிலையம், உணவகம் அமைத்தல் போன்ற பயிற்சிகளை தர தயாராக உள்ளோம்.
    • அடுத்த 3 மாதம் இலவச பயிற்சி நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் வானவில் அறக்கட்டளை அஸ்வினி சீதா பவுண்டேஷன் பெண்கள் திறன் வளர்ப்பு தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் அடிப்படை தேவையான உபகரணங்களும் வழங்கும் விழா கட்டிமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி நகர் மன்ற உறுப்பினர் பாண்டியன் முன்னிலை வகித்து கருணாநிதி பிறந்தநாளில் ஏழை மகளிர் இரண்டு நபர்களுக்கு இலவச தையல் இயந்திரம் தருவதாக உறுதி அளித்தார்.

    சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழு பெருந்தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டு சான்றிதழ்களையும் தேவையான பயிற்சி பெற்றவர்களுக்கு உபகரண ங்களை வழங்கி பெண்களின் முன்னேற்றத்திற்கு கட்டிமேடு ஊராட்சி மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.

    ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் காளான் வளர்ப்பு, மெழுகுவர்த்தி, பினாயில் தயாரித்தல், ஒயர் கூடை, சாக்குப்பை மேட், அழகு நிலையம், உணவக அமைத்தல் போன்ற பயிற்சிகளை தர தயாராக உள்ளோம் என்றார்.

    வானவில் அறக்கட்டளை இயக்குனர் பிரேமாவதி பயிற்சியின் நோக்கம், பயன்கள், சுயதொழில்களால் பொருளாதார முன்னேற்றம் பற்றியும், தொடர்ந்து அடுத்த மூன்று மாத கால இலவச பயிற்சி நடத்த அனுமதியும் வழங்கியுள்ளார்.

    முன்னதாக வருகை தந்த அனைவரையும் வானவில் மேலாளர் சோலைராஜ் வரவேற்புரை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.

    கல்வி மேலாண்மை குழு உறுப்பினர் ரவிச்சந்திரன்,வானவில் அறக்கட்டளை புனிதா, தையல் ஆசிரியை பத்மா, கண்ணம்மா, ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    • தலைஞாயிறு பேரூராட்சியை தாலுகாவாக அறிவிக்க வேண்டும்.
    • தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் கலைஞர் உணவகம் திறக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் நடைபெற்றது.

    தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார், பேரூர் செயலாளர் சுப்பிரமணியன்முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் தலைஞாயிறு பேரூராட்சியை தாலுகாவாக அறிவிக்க வேண்டும், தலைஞாயிறு பேரூராட்சி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் கலைஞர் உணவகம் திறக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், ஒன்றிய குழுதலைவர் தமிழரசி, வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் மறைமலை, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தாமரைசெல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆருர் மணிவண்ணன், கற்பகம் நீலமேகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சோழன், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் அன்பரசு, ஜெய்சங்கர், பாரிபாலன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் சத்யா, இளைஞர் அணி விக்னேஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே கடந்த 7 வருடங்களாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
    • இந்த உணவகத்தின் மேற்கூறையின் சிறிது அளவு கூரை ஏற்கனவே பெயர்ந்து விழுந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே கடந்த 7 வருடங்களாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் மேற்கூறையின் சிறிது அளவு கூரை ஏற்கனவே பெயர்ந்து விழுந்தது. இருந்தாலும் உணவகம் அதே இடத்தில் செயல்பட்டு வந்தது.

    தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் காலை, மதியம் சாப்பிட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென மேற்கூரை (பால் சீலிங்) கீழே சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் அதிர்டவசமாக காயமின்றி தப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அருப்புக்கோட்டையில் ஆவின் பாலகம் உணவகமாக மாறியது.
    • அங்கு வேலை பார்ப்பவர்களில் சிலர் தன்னிச்சையாக முடிவு எடுத்து உணவுகளை விற்று வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் மற்றும் மதுரை சாலையில் ஆவின் பாலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பால் மற்றும் அதனை சார்ந்த பொருட்களை வாங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் மேற்கண்ட 2 ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்களைத் தவிர உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் வடை மற்றும் பூரி போன்ற உணவுகளை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    ஆனால் பாலகங்களில் பால் பொருட்கள் பெரும்பாலான நேரங்களில் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக அங்கு வேலை பார்ப்பவர்களில் சிலர் தன்னிச்சையாக முடிவு எடுத்து உணவுகளை விற்று வருகின்றனர். இதனால் மேற்கண்ட 2 ஆவின் பாலகங்களும் நஷ்டத்சதை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து ஆவின் பாலகங்களை உணவகமாக மாறிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ஒரு தனியார் ஓட்டலில் ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்படும் ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
    சிவமொக்கா :

    ஓட்டல்களில் வழக்கமாக அந்த ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் தான் உணவு சப்ளை செய்வது வழக்கம். அல்லது ஓட்டல் உரிமையாளர்களும் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்வதுண்டு. வெளிநாடுகளில் தற்போது ஓட்டல்களில் ரோபோக்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் தற்போது கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ஒரு தனியார் ஓட்டலில் ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு வருகிறது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

    சிவமொக்கா நகர் வினோபாநகரில் தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ஊழியர்களுக்கு பதில், ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்கள், தங்களுக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்தால் போதும், அவர்கள் விரும்பிய உணவை ரோபோ எடுத்து வந்து வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்கிறது.



    மேலும், ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்களை அந்த ரோபோ அன்புடன் அழைத்து இருக்கையில் அமர வைக்கிறது. மேலும் அவர்களிடம் ஆங்கிலத்தில் காலை வணக்கம், மதிய வணக்கம், இரவு வணக்கம் ஆகியவற்றை கூறி, ஆர்டர் பெறுகிறது. பின்னர் அவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு செல்லும்போது, அந்த ரோபோ, நன்றி மீண்டும் வருக என்றும் கூறுகிறது.

    இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் கூறுகையில், ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்களுக்கு ரோபோ மூலம் உணவு பரிமாற முடிவு செய்தேன். இதனால் சீனாவில் இருந்து புதிய ரோபோ ஒன்று இறக்குமதி செய்து ஓட்டலில் வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே முதல் முறையாக எனது ஓட்டலில் தான் ரோபோ மூலம் உணவு பரிமாறப்படுகிறது. இந்த ரோபோ வாடிக்கையாளர்களிடம் அன்பாக நடந்து கொள்கிறது.

    வாடிக்கையாளர்களின் இருக்கை எண்ணை பதிவு செய்து, அவர்கள் கேட்ட உணவுகளை கொடுக்கிறது. இந்த ரோபோ வந்தது எனக்கு மிகவும் எளிமையாக உள்ளது. ஆட்களுக்கு கொடுக்கும் சம்பளமும் மிச்சமாகிறது. இந்த ரோபோவை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும். நாள் முழுவதும் வேலை செய்யும் என்றார்.

    ஓட்டலில் ரோபோ உணவு பரிமாறுவது பற்றி அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல தகவல்கள் பரவியது. இதனால் மக்கள் ஆச்சரியத்துடன் ஓட்டலுக்கு வந்து ரோபோவை பார்த்து செல்கிறார்கள். 
    இங்கிலாந்து உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஷியர் உள்பட 2 பேர் மீது நச்சுப் பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது. #PoisionAttack #Restaurant
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் வில்ட்ஷையர் மாவட்டத்தின் சாலிஸ்பரி என்னும் சுற்றுலா நகரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்டேன்ஹெஞ்ச் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்தூண்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சாலிஸ்பரி நகரில் குவிவது வழக்கம். இதனால் சாலிஸ்பரி நகரில் உள்ள உணவகங்களும், விடுதிகளும் வார விடுமுறை நாட்களில் நிரம்பி வழியும்.



    இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று முன்தினம், சாலிஸ்பரி நகரின் ஹை ஸ்டீரிட் தெருவில் உள்ள ஒரு உணவகத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவர்களில் ஒருவர் ரஷியாவைச் சேர்ந்தவர் ஆவார்.அப்போது இருவரும் திடீரென மயக்கம் அடைந்து கீழே சரிந்தனர். இதையடுத்து அவர் கள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் ஹை ஸ்டீரிட் பகுதியை சுற்றி வளைத்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போக்குவரத்தையும் தடை செய்தனர். உணவகத்துக்கு வந்து சென்றவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.உணவகத்தில் சாப்பிட்ட அந்த ஆணும், பெண்ணும் ‘நோவிசாக்’ என்னும் நச்சுப் பொருள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இத்தகைய நச்சுப்பொருளை ரஷிய உளவுத்துறையினரும், ராணுவத்தினரும் ரகசியமாக பயன்படுத்துவதாக கூறப்படுவது உண்டு.

    கடந்த மார்ச் மாதம் ரஷியாவின் முன்னாள் உளவாளி செர்கோய் ஸ்கிர்பால் தனது மகள் யூலியாவுடன் இதே சாலிஸ்பரி நகரில் நச்சுப் பொருளால் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்ததும், பின்னர் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், நினைவுகூரத்தக்கது. ஸ்கிர்பால், யூலியா இருவர் மீதும் நரம்பு மண்டலத்தை பாதிக்க வைத்து உயிரை இழக்கச் செய்யும் ‘நோவிசாக்’ நச்சுப் பொருள் வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    கடந்த ஜூலை மாதம் இதே சாலிஸ்பரி நகரின் புறநகரான அமெஸ்பரியில் மர்ம மனிதர்கள் வாசனை திரவிய பாட்டில் மூலம் நடத்திய ‘நோவிசாக்’ தாக்குதலில் டான் ஸ்டர்கெஸ் என்ற பெண் உயிரிழந்தார். அவருடைய காதலர் சார்லி ரோவ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவங்களில் ரஷிய உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக இங்கிலாந்து அரசு பகிரங்கமாகவே குற்றம் சாட்டியது. ஆனால் இதை ரஷிய அதிபர் புதின் மறுத்தார்.

    இதற்கிடையே ஸ்கிர்பால், யூலியா ஆகியோரை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ரஷியர்களான அலெக்சாண்டர் பெட்ரோவ் மற்றும் ரஸ்லன் பொஷிரோவ் ஆகியோர் தங்களுக்கும் இதற்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை என்று மறுத்துள்ளனர். அவர்கள் இருவரும் ரஷிய டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் சாலிஸ்பரி நகருக்கு சென்றது உண்மைதான். ஆனால் எங்களது சுற்றுலாவை முடித்துவிட்டு ஒரு மணி நேரத்தில் லண்டன் திரும்பிவிட்டோம்” என்று கூறினர்.

    இந்தநிலையில் அதே சாலிஸ்பரி நகரில் ரஷியாவைச் சேர்ந்த ஒருவரும் அவருடன் இருந்த மற்றொருவரும் நோவிசாக் நச்சுப் பொருளால் தாக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #PoisionAttack #Restaurant
    ரெயில் நிலையங்களில் உணவகம் நடத்த குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி தரக்கூடாது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களில் உணவகம் நடத்த ரெயில்வே நிர்வாகம் லைசென்ஸ் வழங்குகிறது. ஈரோடு ரெயில் நிலையத்தில் உணவகம் நடத்த பி.கே.அமினா என்பவருக்கு ரெயில்வே நிர்வாகம் லைசென்ஸ் வழங்கியது. லைசென்ஸ் காலம் முடிவடைந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டது.

    இந்தநிலையில், மீண்டும் லைசென்சை புதுப்பிக்கக்கோரி அமினா, ரெயில்வே துறையை நாடினார். அவரது கோரிக்கையை ரெயில்வே நிர்வாகம் எதிர்த்தது. இதைத்தொடர்ந்து அவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர், ‘ரெயில் நிலையங்களில் உணவகம் நடத்த குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி தரக்கூடாது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். மனுதாரருக்கு ஏற்கனவே ஒருமுறை லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 
    ×