என் மலர்

  நீங்கள் தேடியது "humanoid robot"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சியோமி நிறுவனம் மிக்ஸ் போல்டு 2 அறிமுக நிகழ்வில் சைபர் ஒன் ரோபோட்-ஐ அறிமுகம் செய்தது.
  • இதன் மொத்த எடை 52 கிலோ, உயரம் 1.77 மீட்டர்கள் ஆகும்.

  சியோமி நிறுவனம் நேரலை நிகழ்ச்சியில் தனது சைபர் ஒன் ரோபோட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. இது மனித உருவம் கொண்ட ரோபோட் ஆகும். மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்ட ரோபோட் மணிக்கு 3.6 கிமீ வேகத்தில் செல்லும்.

  சியோமி சைபர் குடும்பத்தில் இரண்டாவதாக அறிமுகமாகி இருக்கிறது சைபர் ஒன் ரோபோட். முன்னதாக கடந்த ஆண்டு நான்கு பயோனிக் கால்களை கொண்ட ரோபோட் டாக் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோட் பற்றிய தகவல்கள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.


  இந்த ரோபோட் மொத்த எடை 52 கிலோ, உயரம் 1.77 மீட்டர்கள் ஆகும். நடப்பது, ஓடுவது, பொருட்களை எடுப்பது உள்ளிட்டவைகளை இந்த ரோபோட் செய்யும். மேலும் மணிக்கு அதிகபட்சமாக 3.6 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சைபர் டாக் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சைபர் ஒன் ரோபோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோட் 45 வித்தியாசமான உணர்ச்சிகளை கண்டறிய முடியும். இதன் முகம் வளைந்த OLED பேனல் கொண்டிருக்கிறது.

  மேலும் இதில் உள்ள இரு மைக்ரோபோன்கள் காதாகவும், இரண்டு கேமராக்கள் மூன்று கோணங்களில் பார்க்கவும் வழி செய்கிறது. 13 மணிக்கட்டுகள் மூலம் இந்த ரோபோட் 21 வித்தியாசமான டிகிரிக்களில் நடமாட முடியும். இதில் உள்ள மோட்டார்கள் 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.

  ஆரம்பக் கட்டத்தில் உள்ள சியோமி சைபர் ஒன் ரோபோட்-ஐ உருவாக்க சுமார் ஒரு லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 79 லட்சத்து 68 ஆயிரம் வரை செலவாகும் என சியோமி நிறுவன தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் தெரிவித்தார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ஒரு தனியார் ஓட்டலில் ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்படும் ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
  சிவமொக்கா :

  ஓட்டல்களில் வழக்கமாக அந்த ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் தான் உணவு சப்ளை செய்வது வழக்கம். அல்லது ஓட்டல் உரிமையாளர்களும் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்வதுண்டு. வெளிநாடுகளில் தற்போது ஓட்டல்களில் ரோபோக்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

  ஆனால் தற்போது கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ஒரு தனியார் ஓட்டலில் ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு வருகிறது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

  சிவமொக்கா நகர் வினோபாநகரில் தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ஊழியர்களுக்கு பதில், ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்கள், தங்களுக்கான உணவை ஆர்டர் செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்தால் போதும், அவர்கள் விரும்பிய உணவை ரோபோ எடுத்து வந்து வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்கிறது.  மேலும், ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்களை அந்த ரோபோ அன்புடன் அழைத்து இருக்கையில் அமர வைக்கிறது. மேலும் அவர்களிடம் ஆங்கிலத்தில் காலை வணக்கம், மதிய வணக்கம், இரவு வணக்கம் ஆகியவற்றை கூறி, ஆர்டர் பெறுகிறது. பின்னர் அவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு செல்லும்போது, அந்த ரோபோ, நன்றி மீண்டும் வருக என்றும் கூறுகிறது.

  இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் கூறுகையில், ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்களுக்கு ரோபோ மூலம் உணவு பரிமாற முடிவு செய்தேன். இதனால் சீனாவில் இருந்து புதிய ரோபோ ஒன்று இறக்குமதி செய்து ஓட்டலில் வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே முதல் முறையாக எனது ஓட்டலில் தான் ரோபோ மூலம் உணவு பரிமாறப்படுகிறது. இந்த ரோபோ வாடிக்கையாளர்களிடம் அன்பாக நடந்து கொள்கிறது.

  வாடிக்கையாளர்களின் இருக்கை எண்ணை பதிவு செய்து, அவர்கள் கேட்ட உணவுகளை கொடுக்கிறது. இந்த ரோபோ வந்தது எனக்கு மிகவும் எளிமையாக உள்ளது. ஆட்களுக்கு கொடுக்கும் சம்பளமும் மிச்சமாகிறது. இந்த ரோபோவை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும். நாள் முழுவதும் வேலை செய்யும் என்றார்.

  ஓட்டலில் ரோபோ உணவு பரிமாறுவது பற்றி அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல தகவல்கள் பரவியது. இதனால் மக்கள் ஆச்சரியத்துடன் ஓட்டலுக்கு வந்து ரோபோவை பார்த்து செல்கிறார்கள். 
  ×