search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "recruitment"

    • நெல்லையில் ஊர்காவல் படைக்கு 46 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்ைல மாநகர போலீஸ் கமிஷனர் அவிநாஷ் குமார் உத்தரவுப்படி, மாநகர ஊர்காவல் படையில் புதிதாக ஊர்காவல் படையினர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை இந்த தேர்வு நடக்கிறது. 39 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 46 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு குறையாமலும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும்.

    தேர்வுக்கு வருபவர்கள் கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, கல்வி தகுதிச் சான்று (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்), ஆதார் அட்டை (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்), இருப்பிட சான்று (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்) ஆகியவற்றுடன் ஆயுதப்படை மைதானத்திற்கு நேரில் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தில் இந்திய கப்பற்படையில் 20 சதவீதம் பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள்
    • சேலம், நாமக்கல் மாணவிகள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

    சேலம்:

    இந்திய நாட்டின் முப்படைகளான ராணுவப்படை, கப்பற்படை, விமானப் படை ஆகிய பாதுகாப்பு படைகளில் இளைஞர்கள், இளம்பெண்களை அதிக அளவில் நியமிக்க முடிவு செய்து மத்திய பா.ஜ.க. அரசு அக்னி பத் திட்டத்தை கடந்த 14-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.

    இந்த புதிய பணி நியமன முறையை 'டூர் ஆப் தி டூட்டி' என்று அழைக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். மாதந்தோறும் ரூ.35 ஆயிரத்துக்கு மேல் ஊதியம், பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.

    4 ஆண்டுகள் முடிவில் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் பட்டப்படிப்பு படித்து முடித்தற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

    20 சதவீதம் பெண்கள்

    இந்த திட்டத்தில் சேர வேண்டி தமிழகத்தில் அதிக அளவில் இளம்பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இந்திய கப்பற்படையில் பெண் மாலுமிகளும் சேர்க்கப்பட உள்ளனர். இதில் நடப்பாண்டில் 20 சதவீதம் பெண்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

    இத்திட்டத்தில் கடந்த 1-ந்தேதியில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பணி மற்றும் இளநிலை பட்டம் வழங்கப்படுவதால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்-2, பட்டப்படிப்பு பயிலும் மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கின்றனர்.

    17½ வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கடற்படையில் சேரும் முதல் பிரிவினருக்கு ஐ.என்.எஸ்.சில்கா போர்கப்பலில் ஓடிசாவில் வருகிற நவம்பர் மாதம் 21-ந்தேதி பயிற்சிகள் தொடங்குகின்றன.

    • சேலம், நாமக்கல்லில் அக்னிபத் வீரர்கள் தேர்வுக்கு இளைஞர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.
    • குறிப்பாக பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற, பட்டப்படிப்பு படிக்கும் இளம்பெண்கள் விமானப்படையில் சேர அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    சேலம்:

    இந்திய நாட்டின் முப்படைகளான ராணுவப்படை, கப்பற்படை, விமானப் படை ஆகிய பாதுகாப்பு படைகளில் சேர தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள். பொதுவாக தமிழகத்தில் இப்படைகளுக்கு ஆட்தேர்வின்போது மைதானத்தில் இளைஞர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படும். இதனால் ஆள்சேர்ப்பு நடைபெறும் மைதானத்தின் தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்த நிகழ்வுகளும் உண்டு. அதுமட்டுமின்றி இளைஞர்களின் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவங்களும் உண்டு.

    சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கொரோனா கால கட்டத்திற்கு முன் அடிக்கடி ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் அலை அலையாக திரளுவார்கள். கொரோனா ெதாற்று பரவலுக்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்பு படைகளில் ஆள்சேர்ப்பு நடைபெறவில்லை.

    இந்த நிலையில் ராணுவத்தில் சிறிது காலமாவது பணியாற்ற வேண்டும் என்பது பல பேருடைய லட்சிய கனவாகவே இருக்கிறது. திறமையான பல இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். ஆட்சேர்ப்பு முகாமின்போது குறைந்த எண்ணிக்கையிலேயே வீரர்கள் தேர்வு செய்யப்படுவதால் தகுதியான பல இளைஞர்கள் பாதுகாப்பு படையில் சேர முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்களுடைய எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், துடிப்பான இளைஞர்களை பாதுகாப்பு படையில் சேர்ப்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் முப்படைகளில் ஒன்றான விமானப் படையில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 24-ம் தேதி முதல் இணையதளம் வழியாக பெறப்படுகின்றன. அடுத்த மாதம் 5-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இதுவரை விமானப் படைக்கு 94 ஆயிரத்து 281 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற, பட்டப்படிப்பு படிக்கும் இளம்பெண்கள் விமானப்படையில் சேர அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்பு படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு மட்டும் அக்னிபத் திட்டத்தில் வீரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டு 23 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சித்து வருகிறது.
    • அரசின் பல்வேறுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மிஷன் முறையில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியில் சேர்க்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
    மத்திய அரசின் அனைத்து அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் உள்ள மனித வளங்களின் நிலை குறித்த மதிப்பாய்வு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சித்து வருகிறது.

    இந்நிலையில், அரசின் பல்வேறுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மிஷன் முறையில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியில் சேர்க்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித வளத்தின் நிலையை மதிப்பாய்வு செய்தார். அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்துவது அரசால் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் வங்கி பணிகளுக்கு ஊழியர்கள் தேர்வு செய்தது பற்றி பரவிய பொய் செய்திக்கு வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



    ஜம்மு காஷ்மீர் வங்கியில் பணிபுரிய அதிகாரிகள் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தோல்வியுற்றோர் மத்தியில், ஆன்லைன் தேர்வில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து தோல்வியுற்றோர் தங்களுக்கு நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சிகள் சார்பில் வங்கி பணிகளில் சேர பின்பற்றப்பட்ட ஆட்சேர்ப்பு முறைகளில் முழு விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தன. இதற்கு ஜம்மு காஷ்மீர் வங்கி சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அதில், வங்கி பணிகளில் சேர்வதற்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு பற்றி போட்டியாளர்களிடையே பொய் தகவல் பரப்பப்படுகிறது. இவ்வாறு பரப்பப்படும் தகவல்களில் எவ்வித ஆதாரமும் இல்லை. வங்கி பணிகளுக்கு தேவைப்படும் அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் சிறப்பு ஆணையம் பரிந்துரைத்த விதிகளின் கீழ் பணியமர்த்தப்படுகின்றனர்.



    அந்த வகையில் ஆட்சேர்ப்பு வழிமுறைகளில் சிறப்பு ஆணையத்தின் விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டது. ஆன்லைன் தேர்வில் ஆணையத்தின் விதிகள் முறையே பின்பற்றப்பட்டு அதன்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    வங்கி பணிகளி்ல் ஆட்சேர்ப்பு முறைகளில் நடைபெற்ற முழு வழிமுறைகளும் பொதுவாகவே பின்பற்றப்பட்டுள்ளன. இதனால் விண்ணப்பதாரர்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி செய்திகள் மற்றும் ஆதாரமற்ற விவரங்களை நம்ப வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
    மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கிலிடும் வேலைக்கு ஆட்கள் தேவை என இலங்கை சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. #SriLankahangmen #hangmenrecruitment #MaithripalaSirisena
    கொழும்பு:

    இலங்கை நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இனி கருணை காட்ட மாட்டோம். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தூக்கிலிட்டு கொல்லப்படுவார்கள் என அந்நாட்டின் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா சமீபத்தில் பாராளுமன்ற உரையின்போது தெரிவித்திருந்தார்.

    இலங்கையில் கடைசியாக கடந்த 1976-ம் ஆண்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் பதவிக்கு வந்த அதிபர்கள் மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான எந்த உத்தரவிலும் கையொப்பமிடவில்லை.

    இதனால், கடந்த 42 ஆண்டுகளில் எந்த கைதியும் அங்குள்ள சிறைகளில் தூக்கிலிட்டு கொல்லப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 48 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் 30 பேர் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்து வழக்காடி வருகின்றனர். 18 பேரின் உயிர்கள் அதிபரின் கையொப்பத்துக்கான உத்தரவில் ஊசலாடி வருகிறது.

    இந்நிலையில், அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா சமீபத்தில் அறிவித்திருந்ததுபோல் இலங்கை சிறைகளில் மரண தண்டனையை நிறைவேற்றும் வகையில் தூக்கிலிடும் பணியை செய்து முடிக்க யாரும் தற்போது இல்லை.

    அந்த பணியில் இருந்த ஒருவர் கடந்த 2014-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றப்பிறகு மூன்று பேர் இந்த வேலைக்காக சேர்ந்தனர். ஆனால், அவர்களும் குறுகிய காலத்துக்குள் வேலையை விட்டு நின்று விட்டனர்.

    எனவே, ஒருவேளை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா சிறையில் இருக்கும் கைதிகளில் சிலருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு திடீரென்று உத்தரவிட்டால் அந்த காரியத்தை செய்து முடிப்பதற்காக புதிய கொலையாளிகளை நியமிக்க இலங்கை சிறைத்துறை தீர்மானித்துள்ளது.

    இதுதொடர்பான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்த பணிக்கான இருவரை தேர்வு செய்வதற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அந்நாட்டின் சிறைத்துறை கமிஷனர் தனசிங்கே தெரிவித்துள்ளார். #SriLankahangmen #hangmenrecruitment #MaithripalaSirisena
    ×