search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆள்சேர்ப்பு"

    • சேலம், நாமக்கல்லில் அக்னிபத் வீரர்கள் தேர்வுக்கு இளைஞர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.
    • குறிப்பாக பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற, பட்டப்படிப்பு படிக்கும் இளம்பெண்கள் விமானப்படையில் சேர அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    சேலம்:

    இந்திய நாட்டின் முப்படைகளான ராணுவப்படை, கப்பற்படை, விமானப் படை ஆகிய பாதுகாப்பு படைகளில் சேர தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள். பொதுவாக தமிழகத்தில் இப்படைகளுக்கு ஆட்தேர்வின்போது மைதானத்தில் இளைஞர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படும். இதனால் ஆள்சேர்ப்பு நடைபெறும் மைதானத்தின் தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்த நிகழ்வுகளும் உண்டு. அதுமட்டுமின்றி இளைஞர்களின் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவங்களும் உண்டு.

    சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கொரோனா கால கட்டத்திற்கு முன் அடிக்கடி ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் அலை அலையாக திரளுவார்கள். கொரோனா ெதாற்று பரவலுக்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்பு படைகளில் ஆள்சேர்ப்பு நடைபெறவில்லை.

    இந்த நிலையில் ராணுவத்தில் சிறிது காலமாவது பணியாற்ற வேண்டும் என்பது பல பேருடைய லட்சிய கனவாகவே இருக்கிறது. திறமையான பல இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். ஆட்சேர்ப்பு முகாமின்போது குறைந்த எண்ணிக்கையிலேயே வீரர்கள் தேர்வு செய்யப்படுவதால் தகுதியான பல இளைஞர்கள் பாதுகாப்பு படையில் சேர முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்களுடைய எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், துடிப்பான இளைஞர்களை பாதுகாப்பு படையில் சேர்ப்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் முப்படைகளில் ஒன்றான விமானப் படையில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 24-ம் தேதி முதல் இணையதளம் வழியாக பெறப்படுகின்றன. அடுத்த மாதம் 5-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இதுவரை விமானப் படைக்கு 94 ஆயிரத்து 281 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற, பட்டப்படிப்பு படிக்கும் இளம்பெண்கள் விமானப்படையில் சேர அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்பு படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு மட்டும் அக்னிபத் திட்டத்தில் வீரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டு 23 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ×