search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajini makkal mandram"

    மன்றத்தின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டவர்களைத் தான் மன்றத்திலிருந்து நீக்கி இருக்கிறோம். நம் கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார். #Rajinikanth
    ரஜினி மக்கள் மன்ற தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது.

    சமூக நலனுக்காக நம்முடன் சேர்ந்து செயல்பட விரும்பும் பொது மக்களுக்கு பொறுப்புகளை வழங்கி நாம் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அப்படி, பொது மக்களுடன் மன்ற நிர்வாகப் பொறுப்புகளை பகிர்ந்து செயல்படாமல், கொடுத்த வேலையை தானும் செய்யாமல், துடிப்புடன் செயல்பட விரும்பும் உறுப்பினர்களை செயல்பட விடாமலும் தடுத்து, மன்றத்தின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டவர்களைத் தான் மன்றத்திலிருந்து நீக்கி இருக்கிறோம். நம்முடைய கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை.

    ரசிகர் மன்றத்தை விடுத்து மக்கள் மன்றத்தை நான் உருவாக்கியதன் நோக்கத்தை இவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதைத் தான் இது காட்டுகிறது.

    ஊடகங்கள் மூலமாக நம்மைப் பற்றி அவதூறுகளை பரப்பி வருபவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல்களில் நாம் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. வீண் வதந்திகளில் நமது நேரத்தை வீணடிக்க கூடாது.

    மன்றத்திற்காக உண்மையாக உழைக்கும் எல்லோருடைய செயல்பாடுகளையும் நான் நன்கு அறிவேன். அந்த உழைப்பு வீண் போகாது. அதற்கான பலனை இறைவன் நமக்கும், நம் நாட்டு மக்களுக்கும் தருவான் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

    இவ்வாறு கூறியுள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram

    குடும்பத்தை பராமரிக்காமல் மன்றப் பணிகளுக்கு யாரும் வரவேண்டாம், மன்றத்திற்காக யாரையும் செலவு செய்ய வேண்டும் என்று நான் சொன்னது கிடையாது என்று ரஜினிகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். #Rajinikanth
    ரஜினி மக்கள் மன்ற தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நமது மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என் அனுமதி இல்லாமல் நடந்ததாக சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவது என் கவனத்திற்கு வந்தது. அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    நம் மன்ற உறுப்பினர்கள் நியமனம், மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே என் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு என் ஒப்புதலுடன் தான் அறிவிக்கப்படுகின்றன. 

    கடந்த வருடன் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, `நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்துப் பதவி வாங்ணும், பணம் சம்பாதிக்கணும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்கமாட்டேன். அப்படிப் பட்டவர்கள் இப்போதே விலகி விடுங்கள்' என்று நான் கூறியிருந்தேன் என்று தெளிவாகக் கூறியிருந்தேன். 



    நான் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயத்தை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். முதலில் நீங்கள் உங்கள் தாய், தந்தை மற்றும் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகுதான் மற்றவை எல்லாம். தன் குடும்பத்தை பராமரிக்காமல் மன்றப் பணிகளுக்காக யாரும் வரவேண்டாம். மன்றத்திற்காக யாரையும் செலவு செய்ய வேண்டும் என்று நான் சொன்னது கிடையாது. நான் மன்றத்தினருக்குக் கொடுத்த வேலை, பணம், செலவு செய்து முடிக்க வேண்டிய வேலையும் கிடையாது. அதனால் யாராவது என்னிடம் வந்து நான் மன்றத்திற்காக பணம் செலவு செய்தேன் என்று சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. 

    வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்று  தான் அர்த்தம். #Rajinikanth #RajiniMakkalMandram

    ரஜினி மக்கள் மன்றத்தில் செயல்படாத நிர்வாகிகள் குறித்து புலனாய்வு குழு விசாரணை நடத்தி புதிய நிர்வாகிகளை நியமிக்க பரிந்துரை செய்கின்றனர். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    ரஜினி புதிய கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் ஓசையின்றி நடந்து வருவதையொட்டி புகார் வரும் நிர்வாகிகள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக ரஜினி மக்கள் மன்றத்தில் புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகிகள் சுதாகர், இளவரசன், ஸ்டாலின் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறார்கள்.

    இந்த புலனாய்வு குழுவினர் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் தோறும் ரகசியமாக சென்று மக்கள் மன்ற நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கிறார்கள்.

    இவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்பதில்லை, மாறாக உறுப்பினர்களுக்கு தெரியாமல் நிர்வாகிகளின் செயல்பாடு பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார்கள். நிர்வாகிகள் மீது பொதுமக்கள் புகார் கூறும் பட்சத்தில் உடனடியாக நிர்வாகிகள் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

    சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த புலனாய்வு குழுவினர் மக்களிடம் கருத்துக்களை கேட்டு பழைய நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமிக்க பரிந்துரை செய்துள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்த அமலன், கவுரவ செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இணைச் செயலாளராக இருந்த தங்கம் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல ஒவ்வொரு மாவட்டங்களிலும் நிர்வாகிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு மாற்றப்படுகிறார்கள்.

    ரஜினி ரசிகர்களாக இருந்தவர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்களை சந்தித்து பேசி அனைவரையும் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram

    ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதி என்றும் டிசம்பர் மாதம் அது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram #ACShanmugam
    சென்னை:

    புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதாக கூறினார். அவர் உங்கள் நண்பர். அறிவிப்பு எப்போது வரும் என்று கூற முடியுமா?

    பதில்:- ரஜினி கட்சி தொடங்குவது உறுதி. டிசம்பர் மாதம் அது பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.


    கேள்வி:- உங்கள் புதிய நீதி கட்சி அவருடன் இணைந்து செயல்படுமா?

    பதில்:- ரஜினி தொடங்கும் புதிய கட்சியுடன் புதிய நீதி கட்சியும் கரம் கோர்த்து செயல்படும்.

    இவ்வாறு ஏ.சி.சண்முகம் கூறினார். #Rajinikanth #RajiniMakkalMandram #ACShanmugam
    ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக மாநில அமைப்பு செயலாளர் இளவரசன் தெரிவித்துள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றம் செய்யப்பட்டன.

    இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களுக்கு உடனடியாக உறுப்பினர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

    அதன் பிறகு மாவட்டம் தோறும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

    பின்னர் கடந்த ஜூலை மாதம் மாவட்டந்தோறும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    இதற்காக உள்ளூரில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பற்றியும் ரஜினி மக்கள் மன்றத்தினர் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்பு செயலாளராக இளவரசன் நியமிக்கப்பட்ட பிறகு மன்றத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தது. இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டனர்.

    அவர்கள் புகார்களை நேரடியாக தலைமைக்கு அனுப்ப இயலாது. மாவட்ட செயலாளர்களுக்குதான் அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக மாநில அமைப்பு செயலாளர் இளவரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் அக்டோபர் 5-ந்தேதி மற்றும் 11-ந்தேதிகளில் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.

    ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டு 9 மாதங்கள் ஆன நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன.

    எனவே அவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாக ரஜினி மக்கள் மன்ற வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.



    ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக பொதுமக்களிடம் சர்வே நடத்தப்பட்டதில் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருப்பது தெரிய வந்துள்ளது.

    எனவே ரஜினி தனது அரசியல் பயண திட்டத்தை அடுத்த மாதமே தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. #Rajinikanth #RajiniMakkalMandram

    ரஜினி மக்கள் மன்றம் 10 நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் சில நாடுகளில் இந்த அமைப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு இறுதியில் அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் இன்னமும் அவர் புதிய கட்சியை தொடங்கவில்லை.

    கட்சி தொடங்குவதற்கு முன்பு அதன் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அவர் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றினார்.

    ரஜினி மக்கள் மன்றத்திற்கு நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

    அவர்கள் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்ட அதே நேரத்தில் வெளி நாடுகளிலும் இத்தகைய மன்றத்தை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி முதலில் அமெரிக்காவில் ரஜினி ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டன.

    இதைத் தொடர்ந்து கனடாவிலும் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டது. இந்த இரு நாடுகளிலும் ரஜினி மக்கள் மன்றத்தில் நிறைய தீவிர உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மூலம் இணைய தள தொடர்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மேலும் சில நாடுகளில் ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சமீபத்தில் ஐக்கிய அரபு எமிடேட், இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, கத்தார், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

    இதுவரை 10 நாடுகளில் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் சில நாடுகளில் இந்த அமைப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

    இந்த மன்றங்கள் சார்பில் சமீபத்தில் வாஷிங்டன், லண்டன், அபுதாபி, சார்ஜா உள்பட பல்வேறு நகரங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.

    தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்படும்போது வெளிநாடுகளில் இருந்து ஆதரவாளர்களை அழைத்து வந்து ரஜினிக்கு பிரசாரம் செய்வது பற்றி இந்த கூட்டங்களில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Rajinikanth #RajiniMakkalMandram
    நடிகர் ரஜினிகாந்த் கட்சியில் மாநில நிர்வாகிகள் 2 பேர் நீக்கப்பட்டு அந்த பதவியை மாவட்ட செயலாளர்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த பிறகு தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். ஏற்கனவே நிர்வாகிகளை சந்தித்தும் ஆலோசனை நடத்தினார்.

    ரஜினி மக்கள் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக இளவரசன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த 2 மாதங்களாக மாவட்டம் தோறும் நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளை சேர்த்தும் வருகிறா£ர்.

    நிர்வாகிகள் மீது புகார் வந்தால் அவர்கள் உடனடியாக நீக்கப்படுகின்றனர். கடந்த மாதம் பல நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.

    கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சாய்வர்சன், புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் முருகானந்தம், மாவட்ட செயற் குழு உறுப்பினர் பூக்கடை ரவி, விழுப்புரம் மாவட்ட நகர செயலாளர் கலைநேசன், விழுப்புரம் மாவட்ட இணை செயலாளர் மதிராஜன், துணை செயலாளர்கள் ரஜினி முருகன், சரணவன், டான்போஸ்கோ, தகவல் தொழில்நுட்ப செயலாளர் வேல்முருகன், இளைஞர் அணி செயலாளர் தினேஷ், வழக்கறிஞர் அணி செயலாளர் வெங்கடேஷ், பண்ருட்டி நகர துணை செயலாளர்கள் ரமேஷ், வெங்கடேசன், வினோத், கரூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜவஹர், திருச்சி மாவட்டம் பொன்மலை பகுதி துணைச் செயலாளர்கள் அமுல்ராஜ், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நீக்கப்பட்டனர்.


    இந்த நிலையில் தற்போது மாநில நிர்வாகிகள் 2 பேர் நீக்கப்பட்டு அந்த பதவியும் கலைக்கப்பட்டுள்ளது. மாநில மகளிர் அணி செயலாளர் காயத்ரி துரைசாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் சாமுவேல் சர்ச்சில் ஆகியோர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    காயத்ரி துரைசாமி தற்போது தென் சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளராகவும், சாமுவேல் சர்ச்சில் கோவை மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து மாநில மகளிர் அணி செயலாளர், மாநில இளைஞர் அணி செயலாளர் ஆகிய 2 பதவிகள் கலைக்கப்பட்டுவிட்டன.

    அதே நேரத்தில் தற்போது மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அமைப்பு செயலாளரும், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவருமான இளவரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    ரஜினி மக்கள் மன்ற அனைத்து மாவட்ட மகளிர் அணி மற்றும் இளைஞர் அணிகளின் அமைப்பு பணிகள், இனி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாடு, மேற்பார்வை மற்றும் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட வேண்டும். மாவட்ட மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளர்கள் தினசரி தங்கள் அணிகளின் அமைப்புப் பணி பற்றிய அறிக்கையை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட பொறுப்பாளர் மற்றும் செயலாளரிடம் சமர்பித்து ஒப்புதல் பெற்று அவர்களின் அறிவுரைபடி மன்றப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மாநில இளைஞர் அணி நிர்வாகிகளும், மாநில மகளிர் அணி நிர்வாகிகளும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர் அல்லது மாவட்ட செயலாளர் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். கட்சிப் பணிகள் தொடர்பான கோரிக்கைகளை நிர்வாகிகள் இனி நேரடியாக தலைமைக்கு அனுப்ப முடியாது. அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்குதான் அனுப்ப வேண்டும். இதன் மூலம் மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளில் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களின் கீழ் உள்ளனர். அதே போல் தற்போது ரஜினி மக்கள் மன்றத்திலும் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    இதன் மூலம் ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. எனவே சில வாரங்களில் ரஜினி அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு இருப்பதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நம்புகிறார்கள். இது நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram
    நோட்டீஸ், பேனர்களை அச்சிடும்போது தலைமைக்கு அனுப்பி அனுமதி எண் பெற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்னோட்டமாக தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். அதற்காக நேர்காணல் நடத்தி புதிய நிர்வாகிகளையும் அவர் நியமித்தார். தற்போது அரசியல் கட்சிகளை போன்று ரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிய விதிகளை உருவாக்கி கடந்த மாதம் புத்தகம் ஒன்றையும் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

    அதில், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது வாகனங்களில் மன்றத்தின் கொடியை நிரந்தரமாக பொருத்தக்கூடாது. அந்த கொடி துணியால் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும். மன்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடக்கும்போது உறுப்பினர்கள் கொடியை வாகனங்களில் பயன்படுத்தலாம். நிகழ்ச்சி முடிந்த பின்னர் வாகனங்களில் இருந்து கொடியை அகற்றிவிடவேண்டும். பெண்கள், முதியோர்களிடம் மிகவும் கண்ணியத்துடன் நடக்கவேண்டும்.

    சாதி, மத சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ, அமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தில் சேருவதற்கு அனுமதி இல்லை. மன்ற பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்வது, நியமனம் செய்வது, நீக்கம் செய்வது உள்ளிட்ட விஷயங்களில் தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.



    இந்தநிலையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நோட்டீசுகள் ஒட்டுவதிலும், பேனர்கள் வைப்பதிலும் என மேலும் சில கட்டுப்பாடுகளை ரஜினி மக்கள் மன்றம் உத்தரவாக பிறப்பித்து இருக்கிறது.

    அதன்படி, நோட்டீஸ், பேனர்கள் அச்சிடுவதற்கு முன்பு ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமைக்கு அனுப்பி, உரிய அனுமதி எண் பெறவேண்டும். அனுமதி எண் பெற்ற பின்னரே வைக்கவேண்டும்.

    மாநகரத்துக்கு உட்பட்ட மண்டல நிகழ்ச்சியில் மாநகர செயலாளரை விட மண்டல நிர்வாகிகள் படம் இடம்பெறலாம் என்று ரஜினிகாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. #RajiniMakkalMandram

    புதிய அரசியல் கட்சியை விரைவில் அறிவிக்க உள்ள ரஜினிகாந்த் கட்சிக்கான தொலைக்காட்சி, நாளிதழுடன் கொடி சின்னம் போன்றவற்றை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார். #RajiniMakkalMandram #Rajinikanth
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். தொடர்ந்து கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் வகையில் மன்றத்தை பலப்படுத்தும் பணிகளில் இறங்கினார்.

    அரசியலில் ஒரு பக்கம் கவனம் செலுத்தினாலும் சினிமாவிலும் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அரசியலில் தீவிரமாக இறங்காமல் சினிமாவில் கவனம் செலுத்துகிறாரே என்று அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

    அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விரைவில் சில அறிவிப்புகள் வர இருக்கின்றன. இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பகிர்ந்த தகவல்கள்...

    ரஜினி மக்கள் மன்றத்தை கட்சியாக மாற்றுவதற்காக தமிழ்நாடு முழுக்க பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வருகிறது.

    சில இடங்களில் இந்த 30 பேர் இலக்கை எட்ட முடியவில்லை. சில இடங்களில் பொய்க்கணக்கு காட்டி இருந்தார்கள். இவர்கள் மீதுதான் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ரஜினி பூத் கமிட்டி வி‌ஷயத்தில் அதிக கவனம் காட்டுகிறார். ஒவ்வொரு தெருவிலும் ரஜினி மக்கள் மன்றம் இருக்க வேண்டும் என்று தனது அரசியல் வியூகத்தை அறிவித்த ரஜினிகாந்த், பூத் கமிட்டி என்பதை பலமிக்க கட்சி அமைப்பாகவே கருதியுள்ளார்.

    வாக்குச்சாவடி அளவில் அதிகாரப்பூர்வமாக ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் கட்சி மற்றும் ஆட்சி சார்ந்த தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கும் பொறுப்பு இவர்களுக்கு இருக்கும்.

    மக்களோடு மக்களாக இருந்து, அவர் சொன்னதைப் போல் ‘காவலர்களாக’ கண்காணிக்கும் பொறுப்பு. பல மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்றத்தின் பூத் கமிட்டி நியமனங்கள் முடிந்துள்ளது. மேலும் சில மாவட்டங்களில் இன்னும் தொடர்கிறது.

    இப்போது ரஜினி காந்தைப் பார்த்து மு.க.ஸ்டாலினும் திமுகவுக்கு பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதேபோல தினகரனும் தனது கட்சியை பலப்படுத்த பூத் கமிட்டிகள் அமைத்து வருகிறார்.

    ரஜினிகாந்த் சில வி‌ஷயங்களை ரகசியமாக திட்டமிட்டு வருகிறார். அது உறுதியானதும் விரைவில் அறிவிப்புகள் இருக்கும். முக்கியமாக கட்சிக்கு தனியாக சேனல் (டி.வி.) இருக்கவேண்டும். பத்திரிகை இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

    ரஜினியுடன் நெருக்கமாக இருக்கும் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமாக சேனல் ஒன்று இருக்கிறது. பெரிதாக பிரபலமாகாத அந்த சேனலை ரஜினி கையிலெடுத்து தனது கட்சிக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். கட்சிக்கு தனியாக பத்திரிகை தொடங்கும் திட்டமும் உள்ளது.

    ரஜினி மன்ற நிர்வாகிகள் வி‌ஷயத்தில் அடிக்கடி மாற்றங்கள் நடப்பதால் ரஜினி நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நிறைவடைய இருக்கிறது. அந்த படப்பிடிப்பு முடிந்த உடன் ரஜினி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார்.

    திமுக, அதிமுக கட்சிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அவர் கவனித்து வருகிறார். ரஜினி தான் எதிர்பார்த்த சூழ்நிலை அமைந்து வருவதாக நம்புகிறார். எனவே இன்னும் சில வாரங்களில் கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது. கட்சி அறிவிப்பு வெளியிட்ட உடனே தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து செல்வாக்கை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.

    ரஜினி மன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். சின்ன புகார் என்றாலும் எந்தவித விசாரணையும் இன்றி நீக்கப்படுகிறார்கள். இது அப்படியே ஜெயலலிதாவின் நடவடிக்கையை போல் உள்ளது. எனவே கட்சி தொடங்கிய பின்னரும் கூட ரஜினி நிர்வாகிகளிடம் இதே கட்டுப்பாட்டை எதிர்பார்ப்பார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படத்தின் டீசர் ஆகஸ்டு 15-ந்தேதி வெளிவரும் என்று தகவல் வெளியானதால் அன்றைய தினத்தை ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர்.

    ஆனால் ஆகஸ்டு 15-ந் தேதி, டீசர் வெளிவரவில்லை. இதற்கு காரணம், கேரளாவின் மழை-வெள்ளம் என இப்போது தெரிய வந்துள்ளது. “கேரள மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் டீசரை வெளியிட வேண்டாம் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். அதனால், டீசர் வெளியீட்டு விழா தள்ளிப்போடப்பட்டது,” என்று இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார். #RajiniMakkalMandram #Rajinikanth
    ரஜினி மக்கள் மன்றத்தில் புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளை அமைப்பு செயலாளர் இளவரசன் நீக்கியுள்ளார். #Rajinimakkalmandram
    சென்னை:

    ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பாளராக வி.எம்.சுதாகரும் செயலாளராக ராஜு மகாலிங்கமும் செயல்பட்டு வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்னர் டாக்டர். இளவரசன் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. முழு அதிகாரமும் இளவரசன் கைகளுக்கு சென்றது. சில மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

    இந்த வரிசையில் நேற்று புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூக்கடை ரவி மற்றும் வர்த்தகர் அணி செயலாளர் ஜி.முருகானந்தம் ஆகியோரும், விழுப்புரம் மாவட்டம் நகர செயலாளர் என். கலைநேசன், இணை செயலாளர் ஆர்.மதிராஜன், துணை செயலாளர் எம்.ரஜினிமுருகன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இதுபற்றி ரஜினி மன்ற நிர்வாகிகள் கூறும்போது, ‘நிர்வாகிகள் அடிக்கடி மாற்றப்படுவதால் ரஜினி மக்கள் மன்றத்தில் யாருக்கு எப்போது பதவி போகுமோ என்ற சூழல் உருவாகி உள்ளது. இப்போது நீக்கப்பட்டவர்கள் முன்பு நீக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று கூறி நீக்கி இருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகராக இருப்பவர்களை கூட காரணம் சொல்லாமல் நீக்குகிறார்கள். காரைக்காலை சேர்ந்த மவுலா என்ற மாவட்ட செயலாளரை நீக்கினார்கள். அவர் 30 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்தவர். சென்னையில் அழைக்கப்பட்டிருந்த கூட்டத்துக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் அவரால் செல்ல முடியவில்லை. இதை காரணம் காட்டி நீக்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.

    ஏற்கனவே திருவாரூர், கடலூர், விருத்தாசலம், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். ரசிகர் மன்றத்தில் கடுமையாக உழைத்தவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. ரசிகர்களாக இருந்து நிர்வாகிகளாக நீண்டகாலமாகப் பணியாற்றிய எங்களைப் புரிந்துகொண்ட நிர்வாகிகளும் தலைமையில் இல்லை. வருங்காலங்களில் மாவட்டச் செயலாளருக்குத்தான் அனைத்து அதிகாரமும் கொடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவை எல்லாவற்றையும் பற்றி ரஜினியிடம் பேச அனுமதி கேட்டு இருக்கிறோம். இன்னும் கிடைக்கவில்லை என்று ஆத்திரத்துடன் தெரிவித்தனர்.

    மேலும் கூறும்போது, ‘ரஜினி உத்தரவுபடி பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளோம். பிற கட்சியினர் எளிதாக பணம் கொடுத்து உறுப்பினர்களை சேர்த்து பூத் கமிட்டி அமைக்கிறார்கள். நாங்கள் அப்படி இல்லை. ஒவ்வொருவரிடமும் சென்று கெஞ்சி கேட்டு சேர்க்கிறோம். ஆனால் இப்படி திடீர் திடீர் என்று நிர்வாகிகள் நீக்கப்படுவது எங்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது. ரஜினி இதை புரிந்துகொள்ள வேண்டும்’ என்றனர்.

    இது குறித்து தலைமை நிர்வாகிகளிடம் கேட்ட போது, ‘ரஜினி நிர்வாகிகள் வி‌ஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்கிறார். அவரது அனுமதி இன்றி யாரும் நீக்கவோ சேர்க்கவோ படவில்லை. இப்போது அமைப்பு செயலாளராக இருக்கும் டாக்டர் இளவரசன் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டிக்கும் தலைவராக இருக்கிறார். அவருக்கு வரும் புகார்களை விசாரித்து அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிற கட்சியினர் மற்றும் நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருக்கும் நிர்வாகிகளுக்கு இடம் கிடையாது என்று ரஜினி கண்டிப்பாக கூறிவிட்டார். அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாங்கள் திட்டமிட்ட பணிகளில் 80 சதவீதம் முடிந்துவிட்டது. விரைவில் ரஜினி கட்சி அறிவிப்பை வெளியிடுவார்’ என்று கூறினார்கள். #Rajinimakkalmandram
    தேனி மாவட்டத்தில் நடந்த ரஜினி மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவமானப்படுத்தியதால் நிர்வாகி மனவேதனையில் தூக்கில் தொங்கினார்.
    தேனி:


    தேனி அருகில் உள்ள அரண்மனைப்புதூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது46). இவர் தேனி ரத்தினம் நகர் 6-வது தெருவில் உள்ள மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். மேலும் தேனி நகர ரஜினி மன்ற துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீரபாண்டியில் நடந்த ரஜினி மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    மறுநாள் காலையில் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார். இது குறித்து அல்லிநகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ரஜினி மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற செல்வம் நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.

    அதற்கு இது குறித்து உன்னிடம் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தரக்குறைவாகவும் பேசி உள்ளனர். அதன் காரணமாகவே செல்வம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
    தேனி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 4 பேர் ரஜினி மக்கள் மன்றத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாக இறங்கியதையடுத்து தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அமைத்தார்.

    ரசிகர் மன்றம் முழுவதும் கலைக்கப்பட்டு மக்கள் மன்றமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

    மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்ட மகளிர் அணி செயலாளர் அளித்த புகாரின் பேரில் ரஜினிகாந்த் தேனி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஜெயபுஷ்பராஜ் மற்றும் இணை செயலாளர் பொன்சிவா ஆகியோர் ரஜினி மக்கள் மன்றத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

    இதே போல ரஜினி மக்கள் மன்றத்தின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட போடி நகர செயலாளர் இளநீர் முருகன் மற்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.ரஜினி இப்ராகிம் ஆகியோரும் மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    ரஜினி மக்கள் மன்றத்தின் அமைப்பு செயலாளர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் என்.இளவரசன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram

    ×