search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "quarter final"

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். #SerenaWilliams #Federer
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பழம்பெருமை வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-0, 7-5, 6-4 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் அட்ரியன் முன்னாரினோவை தோற்கடித்து 16-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 4-6, 7-6 (7-5), 7-6 (12-10), 6-1 என்ற செட் கணக்கில் லாத்வியா வீரர் எர்னெஸ்ட் குல்பிஸ்டை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 6-4, 7-6 (10-8), 7-6 (7-4) என்ற நேர்செட்டில் கிரீஸ் வீரர் ஸ்டீபனோஸ்சை தோற்கடித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கனடா வீரர் மிலோஸ் ரானிச் தனது ஆட்டத்தில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ரஷியாவை சேர்ந்த தகுதி சுற்று வீராங்கனை எவ்ஜெனியா ரோடினாவை எளிதில் வென்று கால்இறுதிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-3, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச்சை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

    ஏஞ்சலிக் கெர்பர் ரசிகர்களை நோக்கி பறக்கும் முத்தமிட்ட காட்சி

    மற்ற ஆட்டங்களில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா), ஜூலியா கோர்ஜெஸ் (ஜெர்மனி), சிபுல்கோவா (சுலோவக்கியா) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 4-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #SerenaWilliams #Federer
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 3-வது சுற்றில் அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் மெஸ்சியும் ரொனால்டோவும் கால் இறுதியில் நேருக்கு நேர் மோதுவார்கள். #FifaWorldCup2018 #FIFA2018 #Ronaldo #Messi
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்கள் லியோனஸ் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ. அர்ஜென்டினா கேப்டனான மெஸ்சி பார்சிலோனா கிஸ்டிக்காவும், போர்ச்சுக்கல் கேப்டனான ரொனால்டோ ரியல் மாட்ரீட் அணிக்காகவும் ஆடுகிறார்.

    இந்த உலகக்கோப்பையில் இருவரும் நேருக்கு நேர் மோதுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. அர்ஜென்டினா 2-வது சுற்றில் பிரான்சுடனும், போர்ச்சுக்கல் அணி உருகுவேயுடனும் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் 30-ந்தேதி நடக்கிறது.

    3-வது சுற்றில் அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் மெஸ்சியும் ரொனால்டோவும் கால் இறுதியில் நேருக்கு நேர் மோதுவார்கள். பிரான்ஸ் அணி மிகவும் வலுவாக இருப்பதால் அர்ஜென்டினாவுக்கு மிகவும் கடினமே. ஆனால் மெஸ்சி தனது அபாரமான ஆட்டத்திறமையை வெளிப்படுத்தினால் பிரான்சால் தடுக்க முடியாது. #FifaWorldCup2018 #FIFA2018 #Ronaldo #Messi
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ரபெல் நடால் மற்றும் மரின் சிலிச் ஆகியோர் பங்கேற்ற காலிறுதி போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டன. #FrenchOpen #QuarterFinal #RafaelNadal #MarinCilic
    பாரிஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
    தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் மற்றும் அர்ஜெண்டினாவின் டிகோ ஷ்வர்ட்ஸ்மான் மோதினர்.



    இதில், முதல் செட்டில் அர்ஜெண்டினா வீரர் கைப்பற்றினார். இதையடுத்து, ஆக்ரோஷமாக ஆடிய நடால் 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் குரோசியா வீரர் மரின் சிலிச் மற்றும் அர்ஜெண்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவும் மோதினர். முதல் சுற்றில் 6-6 என்ற கணக்கில் சமநிலை வகித்தபோது, மழையால் ஆட்டம் தடைபட்டது. இந்த ஆட்டங்கள் மறுநாள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். #FrenchOpen #QuarterFinal #RafaelNadal #MarinCilic
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடக்கும் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நாடாலூடன் அர்ஜெண்டினா வீரரான டியாகோ ஷ்வாட்மேன் மோதுகிறார். #FrenchOpen #Nadal #Schwartzman
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 10 முறை வென்றவருமான ரபெல் நாடால் (ஸ்பெயின்) மோதும் கால்இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.

    அவர் கால் இறுதியில் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினாவை சேர்ந்த டியாகோ ஷ்வாட்மேனை சந்திக்கிறார்.

    நடால் இந்த தொடரில் எந்த ஒரு செட்டையும் இழக்காமல் கால் இறுதிக்கு வந்துள்ளார். களிமண் தரையில் விளையாடுவதில் வல்லவரான அவர் அர்ஜென்டினா வீரரை வீழ்த்தி அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளார். அர்ஜென்டினா வீரர் டியாகோ 4-வதுசுற்றில் ஆண்டர்சனை வீழ்த்தி இருந்தார். இதனால் அவர் நடாலை நம்பிக்கையுடன் சந்திக்கிறார்.

    மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான சிலிச் (குரோஷியா)- ஆறாவது வரிசையில் இருக்கும் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) மோதுகிறார்கள். நேற்று நடந்த கால் இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் கடும் போராட்டத்துக்கு பிறகு இத்தாலி வீரர் மார்கோ செச்சினட்டோவிடம் தோற்றார். மார்கோ அரை இறுதியில் டொமினிக் தீம்மை (ஆஸ்திரியா) சந்திக்கிறார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் கால் இறுதியில் மோதும் வீராங்கனைகள் வருமாறு:-

    ஷிமோனோ ஹெலப் (ருமேனியா)- கெர்பர் (ஜெர்மனி)

    முகுருஜா (ஸ்பெயின்)- ‌ஷரபோவா (ரஷியா). #FrenchOpen #Nadal #Schwartzman
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் இத்தாலி வீரர் செச்சினடோ முன்னாள் சாம்பியனான ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். #FrenchOpen #MarcoCecchinato
    பாரிஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும், இத்தாலியின் மார்கோ செச்சினடோவும் மோதினர்.



    இதில், இத்தாலி வீரர் செச்சினடோ முதல் இரண்டு சுற்றுகளை 6-3, 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து, மூன்றாம் சுற்றை 1-6 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார்.

    தொடர்ந்து நடைபெற்ற நான்காவது சுற்றில் செச்சினடோ அபாரமாக விளையாடி 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இறுதியில், இத்தாலி வீரர் மார்கோ செச்சினடோ 6-3 7-6(4) 1-6 7-6(11) என்ற கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். #FrenchOpen #MarcoCecchinato
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இத்தாலி வீரரை போராடி வென்ற சிலிச் கால் இறுதிக்கு முன்னேறினார். #frenchopen #cilic
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 3-ம் நிலை வீரரான மரீன் சிலிச் (குரோஷியா) 4-வது சுற்றில் பேபியோ பாக்னியை (இத்தாலி) எதிர்கொண்டார்.

    இதன் முதல் இரண்டு செட்டை சிலிச் எளிதில் கைப்பற்றினார். ஆனால் 3-வது மற்றும் 4-வது செட்களை இத்தாலி வீரர் 6-3, 7-6 (7-4) என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால் வெற்றியை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி செட் பரபரப்பாக இருந்தது.

    இந்த செட்டை சிலிச் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி கால் இறுதிக்கு முன்னேறினார். ஸ்கோர் 6-4, 6-1, 3-6, 6-7 (4-7), 6-3.

    3 மணி 37 நிமிட நேர போராட்டத்துக்கு பிறகே சிலிச்சால் இந்த வெற்றியை பெற முடிந்தது. அவர் கால்இறுதியில் 5-ம் நிலை வீரர் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) சந்திக்கிறார்.

    உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் ஜெர்மனி வீரர் மார்ட்டெரரை 6-3, 6-2, 7-6 (7-4) என்ற கணக்கில் வென்று கால்இறுதியில் நுழைந்தார்.

    சர்வதேச போட்டிகளில் அவர் பெற்ற 900-வது வெற்றியாகும். நடால் கால்இறுதியில் அர்ஜென்டினா வீரர் டியோகோவை எதிர்கொள்கிறார்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ஜோகோவிச் (செர்பியா)- மார்கோ (இத்தாலி), ஸ்வேரேவ் (ஜெர்மனி)- டொமினிக் தியம் (ஆஸ்திரியா) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனை ஷிமோனா ஹெலப் (ரூமேனியா) 3-வது இடத்தில் இருக்கும் முருகுஜா (ஸ்பெயின்), ‌ஷரபோவா, டாரியா கசாட்சினா (ரஷியா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு நுழைந்தனர்.

    இன்று நடைபெறும் கால்இறுதியில் மேட்சன் கீஸ் (அமெரிக்கா)- புதின் சேவா (கஜகஸ்தான்) ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா)- கசாட்சினா மோதுகிறார்கள்.#frenchopen #cilic
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். #FrenchOpen #RafaelNadal #SimonaHalep
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில், உலகின் நம்பர் ஒன் வீரரும், 10 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-2, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் 70-ம் நிலை வீரர்மேக்ஸ்மிலன் மார்ட்ரெரை (ஜெர்மனி) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) 1-6, 2-6, 7-5, 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து 7-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனை (தென்ஆப்பிரிக்கா) சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் ரபெல் நடால்-டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் மோதுகிறார்கள்.

    இன்னொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ 6-4, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னரை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் 16-ம் நிலை வீராங்கனை எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-7 (5-7), 3-6 என்ற நேர்செட்டில் 14-ம் நிலை வீராங்கனை டாரியா கசட்கினாவிடம் (ரஷியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். வெற்றி பெற்ற டாரியா கசட்கினா கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 7-வது இடத்தில் உள்ள கரோலின் கார்சியாவை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி கண்டார்.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா, உக்ரைன் வீராங்கனை லிசி சுரெங்கோவை சந்தித்தார். இதில் முகுருஜா முதல் செட்டில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது லிசி சுரெங்கோ காயம் காரணமாக விலகினார். இதனால் முகுருஜா வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். #FrenchOpen #RafaelNadal #SimonaHalep
    ×