search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puliangudi"

    • புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், பால நாகம்மன், நாககன்னி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
    • மாலை 6 மணி அளவில் கோவில் முழுவதும் கார்த்திகை தீபத்திருநாள் 1008 விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், பால நாகம்மன், நாககன்னி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    விழாவையொட்டி அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மாக்களுக்கு பால், தயிர், குங்குமம், தேன், சந்தனம் உள் பட 18 வகையான அபிஷேகம் செய்து சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் கார்த்திகை தீப திருநாள் குறித்து குருநாதர் சக்தியம்மா பக்தர்களுக்கு ஆன்மீக சொற் பொழிவாற்றினார். மாலை 6 மணி அளவில் கோவில் முழுவதும் கார்த்திகை தீபத்திருநாள் 1008 விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

    • புளியங்குடியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடையநல்லூர் கோட்டம் சார்பாக மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • நெல்லை மண்டல பாதுகாப்பு அதிகாரி பேச்சிமுத்து மின் விபத்துகள் நடக்கும் விதம் அதனை தவிர்த்திருக்க வேண்டிய வழி முறைகளை கோட்ட கள பணியாளர்களுக்கு எடுத்துரைத்தார்

    புளியங்குடி:

    புளியங்குடியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடையநல்லூர் கோட்டம் சார்பாக மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கடைய–நல்லூர் கோட்ட செயற் பொறியாளர் பிரேமலதா கலந்துகொண்டு கள பணியாளர்கள் பாதுகாப்பாக கவனமுடன் பணி புரிவதற்கு தேவையான வழி காட்டுதல்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நெல்லை மண்டல பாதுகாப்பு அதிகாரி பேச்சிமுத்து மின் விபத்துகள் நடக்கும் விதம் அதனை தவிர்த்திருக்க வேண்டிய வழி முறைகளை கோட்ட கள பணியாளர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் நிகழ்ச்சியில் உதவி செயற் பொறியாளர்கள் பூபாலன், முத்தையா, முத்துகுமார் மற்றும் உதவி பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் கள பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தங்கம் நேற்று முன்தினம் மாலை வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • போலீஸ் விசாரணையில் தங்கையா சொத்து பிரச்சினையில் தங்கத்தை கொலை செய்தது தெரியவந்தது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி தங்கம்(வயது 55).

    கொலை

    இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    சம்பவம் நடந்த நேரத்தில் அவரது வீட்டுக்கு வந்து சென்றவர்கள், அந்த தெரு வழியாக சென்றவர்கள் என ஏராளமானோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் நாகராஜின் அண்ணன் தங்கையா என்பவர் சொத்து பிரச்சினையில் தங்கத்தை கொலை செய்தது தெரியவந்தது.உடனே அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-

    இடப்பிரச்சினை

    தங்கத்தின் வீட்டின் எதிரே 2 செண்ட் இடம் உள்ளது. எங்கள் 2 பேர் குடும்பத்திற்கும் இடையே அந்த இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. நான் அந்த இடத்தில் என்னுடைய ஆடுகளை கட்டுவேன்.

    ஆனால் அதில் கட்ட விடாமல் தங்கம் இடத்தை சுற்றி கயிறு கட்டிவிட்டார். சமீபத்தில் அந்த கயிற்றில் சிக்கி எனது ஆடு ஒன்று இறந்துவிட்டது.

    கைது

    இதனால் ஆத்திரம் அடைந்த நான், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தங்கத்தை கொலை செய்தேன். சந்தேகம் வராமல் இருப்பதற்காக பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் நானும் கூடவே இருந்தேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார் அதனை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தங்கையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது.
    • ஓ.பி.எஸ். அணியினர் புளியங்குடி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    புளியங்குடி:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து புளியங்குடியில் ஓ.பி.எஸ். அணியினர் புளியங்குடி மெயின் ரோட்டில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். ஆதரவு மாவட்டச் செயலாளர் மூர்த்தி பாண்டியன் புளியங்குடி நகர நிர்வாகிகள் முருகன், துரைப்பாண்டியன், கணபதி, பம்பாய் மாடசாமி, மாரியப்பன், மகளிரணி மாவட்ட செயலாளர் சுவர்ணா, ராமலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்
    • புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் தலைமை தாங்கி பேசுகையில் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி போதை பொருட்களை முற்றிலும் தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது என்றார்.

    புளியங்குடி:

    புளியங்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஷாஜகான் வரவேற்றார்.

    புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் தலைமை தாங்கி பேசுகையில் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி போதை பொருட்களை முற்றிலும் தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் உள்ளது. கல்வி மட்டுமே உங்களுக்கு கைகொடுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது ஆகவே போதை பொருட்களை தவிர்த்து நன்கு படித்து சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நபராக வரவேண்டும் என்றார்.

    மாணவர்கள் முன்னிலையில் போதை தடுப்பு உறுதி மொழியை சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் வாசிக்க அனைவரும் உறுதி எடுத்து கொண்டனர். பேரணியானது பள்ளியில் இருந்து புறப்பட்டு மெயின் ரோடு வழியாக புளியங்குடி பேருந்து நிலையம் வந்தடைந்தது. மாணவர்கள் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் செல்வகுமார், சவுந்திராஜன் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

    ×