search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public strike"

    சேலம் அருகே சாக்கடை நீர் தெருக்களில் ஓடி வீட்டுக்குள் புகுவதால் அதனை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    சேலம் வீராணூரை அடுத்த சின்னனூர் பகுதியில் 100-க்கும்  மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள சாக்கடை கால்வாய்கனை தூர்வாராததால் சாக்கடை நீர் தெருக்களில் ஓடி வீட்டுக்குள் புகுவதாகவும், அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேலும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று சின்னனூர் மெயின் ரோட்டில் திரண்டனர். பின்னர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக சேலம் வரும் பஸ்கள், வாகனங்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன. 

    தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ  இடத்திற்கு விரைந்து  சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய  அதிகாரிகளிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
    ஆரணிஅருகே பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஆரணி:

    ஆரணி முனுகப்பட்டு அருகே உள்ள பள்ளாபட்டு கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முனுகப்பட்டு ஊராட்சியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கப்பட வில்லை. இதனால் குடிநீருக்காக வெகுதூரம் சென்று வர நேரிட்டுள்ளது.

    இது குறித்து முனுகப்பட்டு ஊராட்சியில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஆரணியில் இருந்து வாழபந்தல் செல்லும் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்து வந்த முனுகப்பட்டு முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் முறையாக குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம் அருகே பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள தணிகை போளூர் இச்சிப்புத்தூர் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் ஒரு குடம் நீருக்காக அப்பகுதி மக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    குடிநீர் பிரச்சினையை போக்கக்கோரி அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் தணிகை போளூர் பஸ் நிறுத்தத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.

    தகவலறிந்து வந்த, அரக்கோணம் தாலுகா போலீசார் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரசப்படுத்தினர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வ.சின்னக்குப்பம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊர் 2 பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியாக உள்ளது. இதில் பாகூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இதில் ஆழ்துளை கிணறு உள்ள பாகூர் பஞ்சாயத்துக்குட்ட பகுதிக்கு 2 மணி நேரமும், சேந்தமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிக்கு 1 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக சேந்தமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் அவதியடைந்தனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த சேந்தமங்கலம் பகுதி பொதுமக்கள் இன்று காலை அந்த பகுதியில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சேலத்தில் கொட்டநத்தம் ஏரியை தூர் வார கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் நெய்க்காரப்பட்டி கோணங்காடு பகுதியில் கொட்டநத்தம் ஏரி உள்ளது . இந்த ஏரியை நம்பி ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர்.

    300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. சாயக்கழிவு நீர் மற்றும் சாக்கடை நீரும் சமீப காலமாக இந்த ஏரியில் கலந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏரியில் மீன்கள் செத்து மிதந்தது. விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் சாயக்கழிவு மற்றும் சாக்கடை நீரை ஏரியில் விடக்கூடாது , ஏரியை தூர்வார வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏரியை தூர் வார கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏரியில் சாயக்கழிவு ரசாயனம் மற்றும் சாக்கடை நீர் அதிகமாக கலப்பதால் ஏரி முற்றிலும் மாசடைந்துள்ளது. இதனால் நிலத்தடி நீரிலும் மாசு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு உடனே நடவடிக்கை எடுத்து இந்த பகுதி மக்களை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

    குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஏற்பட்டது. இதனால் ரோட்டில் இரு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    பு.புளியம்பட்டி, மே.21-

    புஞ்சை புளியம்பட்டி அருகே பவானிசாகர் ரோட்டில் தாசம்பாளையம் காலனி உள்ளது. இங்கு 100 வீடுகள் உள்ளன.

    இந்த பகுதி மக்களுக்கு பவானிசாகர்-தொட்டம்பா ளையம் கூட்டு குடிநீர் திட் டத்தின் கீழ் குடிநீர் வழங்கப் படுகிறது. ஆனால் சீரான குடிநீர் விநியோகம் இல்லா மல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்களாம்.

    இந்த பகுதி மக்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் தண்ணீர் வழங்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப் பட்டது. 6 வருடம் ஆகியும் அந்த தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி குடிநீர் விநியோகிக்கப் படவில்லை.இதனால் மக்களுக்கு சீரான விநியோகம் கிடைக்க வில்லை. இது குறித்து பல முறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

    எனவே அந்த பகுதி மக்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை 7.30 மணி அளவில் புஞ்சைபுளியம்பட்டி- பவா னிசாகர் ரோட்டில் தாசம் பாளையம் காலனியில் குவிந்தனர்.

    காலி குடங்களுடன் வந் திருந்த அவர்கள் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் கேட்டு அவர்கள் கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புஞ்சைபுளிம்பட்டியில் இருந்து பவானிசாகருக்கு செல்லும் மெயின் ரோட்டில் இந்த சாலைமறியல் போராட் டம் நடந்ததால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ரோட்டில் இரு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது பற்றி புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரி யவந்தது.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மறி யல் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சீர் செய்யும் நட வடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.

    அதன்படி மாற்று வழி யில் வாகனங்கள் இயக்க நட வடிக்கை எடுக்கப்பட்ட.து. இதற்கிடையே பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் அங்கு வந் தார்.

    போலீசாருடன் இணைந்து அவர் போராட் டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். * * * பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் 3 நாட்கள் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின்சார வசதி கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மரம் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சார வினியோகம் தடைபட்டது.

    குறிப்பாக கடந்த சனிக்கிழமை மாலை பலத்த சூறாவளியுடன் 2 மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் மரங்கள், மின்சார கம்பங்கள் முறிந்தன. இதனையடுத்து மின்தடை ஏற்பட்டது.

    இந்நிலையில் திருப்பூர் மங்கலம் குள்ளேகவுண்டன் பாளையம் பிரிவு பகுதியில் 100-க்கணக்கான மரம் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் தடை ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குறை கூறினர். இந்நிலையில் பொதுமக்களே மரங்களை வெட்டி அகற்றினர். ஆனால் மின்சாரம் இன்று காலை வரை வினியோகம் செய்யப்படவில்லை.

    இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக மின்தடையை சரிசெய்ய வில்லை எனக்கூறி இன்று காலை மங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அதிகாரிகள் பொதுமக்களிடம் கூறும்போது. இங்கு மட்டுமல்ல. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரம் மற்றும் மின் கம்பங்கள் முறிந்ததால் மின் வினியோகம் தடை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொன்றாக சரிசெய்து வருகிறோம். இன்டைக்குள் இந்த பகுதிக்கு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ×