search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drain water"

    • சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
    • நிலத்தடி நீர் உயர்ந்தும், விவசாயக் கிணறுகளில் நிலத்தடி நீர் உயர்ந்தும் உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீர் பயன்படுகிறது. பி.ஏ.பி வாய்க்கால் மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி காளிநாதம்பாளையம் பகுதியில், பி.ஏ.பி. வாய்க்காலில் வந்த உபரி தண்ணீரை அருகே உள்ள குளத்தில் சேமித்து வைத்துள்ளனர். இதனால் அங்கு அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்தும், விவசாயக் கிணறுகளில் நிலத்தடி நீர் உயர்ந்தும் உள்ளது. இதே போல பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் வரும் உபரி தண்ணீரை, அருகே உள்ள குளங்களில் சேமித்தால் தண்ணீர் தட்டுப்பாடு வராது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    சேலம் அருகே சாக்கடை நீர் தெருக்களில் ஓடி வீட்டுக்குள் புகுவதால் அதனை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    சேலம் வீராணூரை அடுத்த சின்னனூர் பகுதியில் 100-க்கும்  மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள சாக்கடை கால்வாய்கனை தூர்வாராததால் சாக்கடை நீர் தெருக்களில் ஓடி வீட்டுக்குள் புகுவதாகவும், அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேலும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று சின்னனூர் மெயின் ரோட்டில் திரண்டனர். பின்னர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக சேலம் வரும் பஸ்கள், வாகனங்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன. 

    தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ  இடத்திற்கு விரைந்து  சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய  அதிகாரிகளிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
    ×