search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Program"

    • கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கபட்டது.
    • 5 வகையான உணவுகள், இனிப்பு, பழங்களும் பரிமாறப்பட்டது.

    ஊட்டி,

    கேத்தி பேருராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வரவேற்றார். கேத்தி செயல் அலுவலர் நட்ராஜ், பேருராட்சி தலைவர் ஹேமாமாலினி ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள்(மஞ்சள், குங்குமம், வளையல், மங்கல பொருட்கள் தட்டு, ரவிக்கை) வழங்கபட்டது.

    கர்ப்பிணி பெண்களுக்கு தாய்வீட்டு சீதனமாக சமுதாய வளைகாப்பு சிறப்பாக நடத்தப்பட்டு 5 வகையான உணவுகள், இனிப்பு, பழங்களும் பரிமாறப்பட்டது. இதில் பேருராட்சி உறுப்பினர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா 6-ந் தேதி நடைபெறுகிறது.
    • அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை (செவ்வாய்கி ழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா அடுத்த மாதம் 7-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து 29-ந் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    அன்று 6 ஊர்களில் இருந்து சாமிகள் கோவி லுக்கு வந்து சன்னதிக்கு முன்பு சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறும். அடுத்த மாதம் 3-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா 6-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பி கையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்று த்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டி யூர், திருப்பூந்து ருத்தி ஆகிய ஊர்களுக்கு சென்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தா னத்தில் சங்கமிக்கிறது.

    7-ந் தேதி பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. விழழ ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • நகராட்சி சார்பில் நீர் வரத்து கால்வாய் கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

    திருமங்கலம்

    1970 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ந்தேதி அன்று சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி பகுதியில் நகராட்சி சார்பில் நீர் வரத்து கால்வாய் கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் ரம்யா முத்துக்குமார், துணைச்சேர்மன் ஆதவன் அதியமான் ஆகியோர் பங்கேற்று மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தனர். இதில் மகளிர் சுய உதவி குழுவினர், தூய்மை இந்தியா திட்ட சுகாதார ஆய்வாளர் ஜெயசீலன், சரவண பிரபு, கவுன்சிலர்கள் சின்னசாமி, திருக்குமார், வீரக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • தீ விபத்து தடுப்பு குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் ஒரு வாரம் தீ தொண்டு நாள் வாரம் அனுசரிக்கப்பட உள்ளது.தீயணைப்பு பணிகளின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்ப ட்டது.

    திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அதிகாரி சகாயராஜ், போக்குவரத்து அதிகாரி முருகன் ஆகியோர் தீயணைப்பு வீரர்கள் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார்கள் .

    இந்தநிகழ்ச்சியில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர்.வரும் 20 ம் தேதி வரை தீ விபத்து தடுப்பு குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

    • பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா மூன்று நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற்றது.

    முதல் நாள் மாலையில் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு பிலோமின் தாஸ் முன்னிலையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சிகள் மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது.

    2-வது நாள் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் காலை, மதியம், மாலை திருப்பலி மற்றும் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    இரவு கலை நிகழ்ச்சிகள் வான வேடிக்கை முழங்கிட மணங்கமலும் மலர்கள் மின்னொளி அலங்கார ஆடம்பர தேர் பவனே கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய சென்று பின்னர் கோவிலை வந்தடைந்தது.

    முன்னதாக பாபநாசம் மேல வீதியில் புனித செபஸ்தியாருக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    3வது நாள் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு அமிர்த சாமி முன்னிலையில் திருவிழா திருப்பலி மற்றும் திருப்பலி நடைபெற்றது மாலை கொடி இறக்கம் நடைபெற்றது திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய பங்கு தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் , இணை பங்கு தந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர் மற்றும் அருள் சகோதிரிகள் பங்கு பேரவை அன்பியங்கள் , பங்கு இறை மக்களை, பங்கு கிளை கிராம இறை மக்கள் செய்திருந்தனர்.

    • இரவு பசுபதிகோவில் குடமுருட்டி ஆற்றில் வாணவேடிக்கை நடந்தது.
    • சுவாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

    அய்யம்பேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த சக்கராப்பள்ளியில் உள்ள தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் கோவிலில் சப்தஸ்தான விழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து, தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

    அய்யம்பேட்டை சவுராஷ்டிரா சபைக்கு சொந்தமான கண்ணாடி பல்லக்கில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி ஏழூர் பல்லக்கு புறப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில்இருந்து புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டைஎல்லை வரை சென்று மாகாளி புரம், வழுத்தூர், சரபோஜிரா ஜபுரம், அரியமங்கை, சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதிகோவில் ஆகிய கிராமங்களில் வீதிஉலா சென்றது.

    இரவு பசுபதிகோவில் குடமுருட்டி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற்றது.

    தொடர்ந்து, இன்று இலுப்பக்கோரை கிராமத்திற்கு சென்று மீண்டும் பசுபதிகோவில், அய்யம்பேட்டை ஆகிய ஊர்களில் வீதிஉலா வந்தது.

    பின்னர், மாலை அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு சுவாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் நிர்வாகிகள், அய்யம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஏழூர் கிராமமக்கள் செய்துள்ளனர்.

    • 17 பேர் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், சித்தமல்லி அருகே உள்ள புலவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார்.

    இவரது மனைவி நித்தியாவிற்கு நேற்று வளை காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு நித்தியாவை வாழ்த்தினர்.

    பின்னர் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அப்போது உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்ப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கும், 17 பேர் சீர்காழி அரசு மருத்துவமனைக்கும், மீதமுள்ளவர்கள் வைத்தீஸ்வரன்கோவில் ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதுகுறித்து சீர்காழி, மயிலாடுதுறை, மணல்மேடு போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இச்சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பெருமாள்- தாயாருக்கு காப்பு கட்டி மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோவில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் ஐந்தாவது தலமாகும்.

    இக்கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    7-ம் திருநாளின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான பரிமளரெங்கநாதர் பெருமாள், சுகந்தவனநாயகி தாயார் வசந்த மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர்.

    பெருமாள் தாயாருக்கு காப்பு கட்டி மாலை மாற்றுதல், சிறப்பும் பூரணாகுதி திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு தீபாரதனைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து பெருமாள் தாயார் திருமண கோலத்தில் வெள்ளி ரதத்தில் புறப்பாடு நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக செயலர் ரம்யா, அலுவலர் விக்னேஷ், நகர மன்ற துணை தலைவர் குமார், மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.

    • குருத்தோலை புனிதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை திரு இருதய பேரா லயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி இன்று தஞ்சை மறைமாவட்ட பரிபாலகரும் ஆயர் (பொ) சகாயராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் குருத்தோலைகளை ஏந்தியப்படி பவனியாக சென்றனர்.இதேபோல் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் புனித சேவியர் தொழிற்பயிற்சி பள்ளியின் தாளாளர் சூசைமாணிக்கம் அடிகளார் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது.

    தொடர்ந்து மறைமாவட்ட பரிபாலகர்சகாயராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை புனிதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பேராலய பங்குத்தந்தை பிரபகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலர் ஆன்ட்ரு செல்வகுமார், திருத்தொண்டர் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத்தலைவர் வின்சண்ட் தலைமையில் செயலர் குழந்தைராஜ், அன்பிய பொறுப்பாளர்கள், இளைஞர் மன்றத்தினர், பக்த சபையினர் செய்து இருந்தனர்.

    • உதவும் கரங்கள் குழுவில் உள்ளவர்கள் திரட்டினர்
    • மறைந்த காவலர் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது

    அரியலூர்:

    அரிலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த கலைச் செல்வம் உடல் நலக் குறைவால் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். இந்தநிலையில் அவரது குடும்பத்திற்கு உதவும் வகையில், காவலர் உதவும் கரங்கள் குழுவில் உள்ள காவலர்கள் 5,807 பேர் நிதி திரட்டினர். இதன்படி, திரட்டப்பட்ட ரூ.29,03,500-ஐ குவின் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள், திருமானூர் சென்று கலைச் செல்வன் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினர்.

    • வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெற்றது
    • 250க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில்,மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் உயர்க்கல்வி சார்ந்த வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் தலைமை வகித்து, உயர்க்கல்வி தொடர்பான தகவல்கள், அரசு கல்வி உதவித் தொகைகள், நுழைவுத் தேர்வுகள், அரசுத் துறை பணிகள், போட்டித் தேர்வில் எவ்வாறு வெற்றிப் பெறுவது, தனியார் துறை வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இலவச திறன் பயிற்சி தகவல்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.கல்வி நிலையச் செயலர் கொ.வி.புகழேந்தி முன்னிலை வகித்தார். முன்னதாக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள் ராஜா, சிவக்குமார் ஆகியோர் செய்தி ருந்தனர். இதில் மாணவ, மாணவிகள் 250 பேர் கலந்து கொண்டனர்.

    • கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது
    • மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது

    குன்னம், 

    கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா முதன் முறையாக நடைபெற்றது.பள்ளியின் தாளாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளியின் நிறுவனர் ஆர்.பரமசிவம், இயக்குனர் தனலட்சுமி முருகேசன், திருச்சி உறையூர் தயாநிதி மெமோரியல் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.சுதர்சன், அந்நிறுவனத்தின் முதல்வர் நர்மதா சுதர்சன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.பள்ளியின் துணை முதல்வர்கள் உமா, ஜாய், ஒருங்கிணைப்பாளர்கள் ஹபிபுனிஷா, குமரவேல் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக ஒன்றாம் வகுப்பு மாணவி பாரதி அனைவரையும் வரவேற்று பேசினார். இறுதியில் ஒன்றாம் வகுப்பு மாணவி ஆராதனா அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில், பேச்சு, இசை, நடனம், நாடகம் என்று மாணவ-மாணவிகளின் வண்ணமிகு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    ×