என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
- கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது
- மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது
குன்னம்,
கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா முதன் முறையாக நடைபெற்றது.பள்ளியின் தாளாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளியின் நிறுவனர் ஆர்.பரமசிவம், இயக்குனர் தனலட்சுமி முருகேசன், திருச்சி உறையூர் தயாநிதி மெமோரியல் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.சுதர்சன், அந்நிறுவனத்தின் முதல்வர் நர்மதா சுதர்சன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.பள்ளியின் துணை முதல்வர்கள் உமா, ஜாய், ஒருங்கிணைப்பாளர்கள் ஹபிபுனிஷா, குமரவேல் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக ஒன்றாம் வகுப்பு மாணவி பாரதி அனைவரையும் வரவேற்று பேசினார். இறுதியில் ஒன்றாம் வகுப்பு மாணவி ஆராதனா அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில், பேச்சு, இசை, நடனம், நாடகம் என்று மாணவ-மாணவிகளின் வண்ணமிகு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






