search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pro Kabaddi 2018"

    புரோ கபடி லீக் போட்டியில் மும்பையில் நேற்றிரவு நடந்த மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 38-36 என்ற புள்ளி கணக்கில் திரில் வெற்றி பெற்றது. #ProKabaddi
    மும்பை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்றிரவு நடந்த 57-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் யு மும்பா (மும்பை அணி) அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி 5 நிமிடங்கள் எஞ்சி இருந்தபோது 30-26 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

    அந்த சமயத்தில் குஜராத் மாற்று ஆட்டக்காரர் மகேந்திர ராஜ்புத் ஒரே ரைடில் 5 பேரை அவுட் ஆக்கி, ஆல்-அவுட்டும் செய்ததால், ஆட்டம் குஜராத் பக்கம் திரும்பியது. முடிவில் குஜராத் அணி 38-36 என்ற புள்ளி கணக்கில் திரில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 50-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்து 5-வது வெற்றியை பெற்றது.

    இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் -தபாங் டெல்லி (இரவு 8 மணி), யு மும்பா-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன. 
    புரோ கபடியின் 52-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 39-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை சாய்த்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. #ProKabaddi2018 #HaryanaSteeler #DabangDelhi
    நொய்டா:

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்றிரவு நடந்த 52-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) தபாங் டெல்லி அணி 39-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை சாய்த்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. 11-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணிக்கு இது 8-வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் (பி பிரிவு) பெங்களூரு புல்ஸ் அணி 37-27 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச யோத்தாவை வீழ்த்தி 6-வது வெற்றியை ருசித்தது.

    மும்பையில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் யு மும்பா (மும்பை அணி)- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), பெங்கால் வாரியர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன. 
    புரோ கபடி தொடரில் நேற்றைய ஆட்டங்களில் அரியானா, உ.பி. யோத்தா அணிகள் வெற்றி பெற்றன. #ProKabaddi2018 #PKL2018 #Haryana #Patna
    பாட்னா:

    6-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

    இந்த நிலையில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா -தபாங் டெல்லி அணிகள் மோதின. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை சேர்த்ததால் 3 நிமிடங்கள் இருக்கும் போது 35-35 என்ற புள்ளி கணக்கில் சமநிலை ஏற்பட்டது. அதன் பிறகு கடைசி நிமிடங்களில் அபாரமாக ஆடிய உ.பி.யோத்தா அணி 38-36 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. உ.பி. அணியில் ஸ்ரீகாந்த் ஜாதவ் 12 புள்ளிகளும், பொறுப்பு கேப்டன் பிரசாந்த் குமார் ராய் 11 புள்ளிகளும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். 7-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பதிவு செய்த 3-வது வெற்றி இதுவாகும்.

    இதைத் தொடர்ந்து நடந்த இன்னொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 43-32 என்ற புள்ளி கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாட்னா பைரட்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. பாட்னா கேப்டன் பர்தீப் நார்வால் ரைடு மூலம் 14 புள்ளிகள் சேர்த்த போதிலும் பலன் இல்லை. பாட்னாவுக்கு விழுந்த 4-வது அடி இதுவாகும்.

    போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளைய ஆட்டங்களில் புனேரி பால்டன்-குஜராத் பார்ச்சுன் (இரவு 8 மணி), பாட்னா பைரட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் போட்டியில் 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி, நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது. #ProKabaddi #UMumbai #PatnaPirates
    பாட்னா:

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த பரபரப்பான 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி (யு மும்பா) 40-39 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது. 7-வது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது 5-வது வெற்றியாகும். முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 39-28 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வென்றது. இன்றைய ஆட்டங்களில் டெல்லி-உ.பி.யோத்தா (இரவு 8 மணி), பாட்னா-அரியானா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. 
    புனேரி பல்டான் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் 12 பாயிண்டுகளை எடுத்ததன் மூலம் அஜய்தாகூர் புரோ கபடி சீசனில் ரைடு மூலம் 600 புள்ளிகளை தொட்டு முத்திரை பதித்தார். #ProKabaddi2018 #AjayThakur
    புனே:

    அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி 7-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் புனேரி பல்டானை நேற்று எதிர்கொண்டது.

    இதில் தமிழ் தலைவாஸ் அணி 36-31 என்ற புள்ளிக்கணக்கில் புனேயை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அஜய் தாகூர் அபாரமாக விளையாடி ரைடு மூலம் 12 புள்ளிகளை குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இதேபோல அனுபவம் வாய்ந்த ஜஸ்வர்சிங்கும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார். அவர் 8 புள்ளிகள் எடுத்தார். வீரர்களை மடக்கி பிடிப்பதில் மஞ்சித் சில்லார் நன்றாக செயல்பட்டார்.

    இந்தப்போட்டியில் 12 பாயிண்டுகளை எடுத்ததன் மூலம் அஜய்தாகூர் புரோ கபடி சீசனில் ரைடு மூலம் 600 புள்ளிகளை தொட்டு முத்திரை பதித்தார். அவர் 87 ஆட்டத்தில் 609 ரைடு புள்ளிகளை எடுத்து 3-வது இடத்தில் உள்ளார். ராகுல் சவுத்ரி 700 புள்ளிகளும், பர்தீப் நர்வால் 671 புள்ளிகளும் ரைடு மூலம் எடுத்தனர்.

    ஒட்டு மொத்தமாக டேக்கிள் பாயண்டையும் சேர்த்து 630 புள்ளிகளை பெற்றுள்ளார். இந்த சீசனில் அவர் ரைடு மூலம் 81 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தில் உள்ளார்.

    தமிழ்தலைவாஸ் அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று ‘பி’ பிரிவில் 3-வது இடத்தில் இருக்கிறது.அந்த அணி 8-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்சுடன் வருகிற 26-ந்தேதி மோதுகிறது.

    இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- அரியானா ஸ்டீலாஸ் (இரவு 8 மணி), புனேரி பில்டான்- உ.பி.யோதா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabaddi2018 #AjayThakur
    புரோ கபடி போட்டியின் உ.பி.யோத்தா-பெங்கால் வாரியர்ஸ் இடையேயான 25வது லீக் ஆட்டம் 40-40 என்ற புள்ளி கணக்கில் டையில் முடிந்தது. #ProKabaddi #UPYoddha #BengalWarrior
    புனே:

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேயில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா-பெங்கால் வாரியர்ஸ் (பி பிரிவு) அணிகள் மல்லுக்கட்டின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் சேர்த்தன.

    முதல் பாதியில் 18-15 என்ற கணக்கில் முன்னிலை வகித்த உ.பி.யோத்தா அணியால் கடைசி வரை அந்த முன்னிலையை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. முடிவில் இந்த ஆட்டம் 40-40 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது. மற்றொரு திரிலிங்கான ஆட்டத்தில் புனேரி பால்டன் 33-32 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் யு மும்பா அணியை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது.  #ProKabaddi #UPYoddha #BengalWarrior

    நேற்றிரவு நடந்த புரோ கபடி லீக் போட்டியில் அரியானா குஜராத்தை வென்றது. இன்று நடக்கும் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- உ.பி.யோத்தா, அரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா ஆகிய அணிகள் மோதுகின்றன. #ProKabaddi
    சோனிபட்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் அரியானா மாநிலம் சோனிபட்டில் நேற்றிரவு நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அசத்தலாக ஆடிய அரியானா அணி 32-25 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை சாய்த்து முதலாவது வெற்றியை சுவைத்தது. மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 41-37 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்தது.

    இதே மைதானத்தில் இன்று நடக்கும் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- உ.பி.யோத்தா (இரவு 8 மணி), அரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா (இரவு 9 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன. #ProKabaddi

    புரோ கபடி லீக் சீசன் 6-ல் தமிழ் தலைவாஸ் இன்றைய 4-வது ஆட்டத்தில் பெங்களூரை புல்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறுமா? என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள். #ProKabaddi
    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 42-26 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்சை வீழ்த்தியது.

    அதை தொடர்ந்து நடந்த ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் அணி 32-37 என்ற கணக்கில் உபி யோதாவிடமும், 28-33 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்சிடமும் போராடி தோற்றது.

    தமிழ் தலைவாஸ் அணி 4-வது லீக் ஆட்டத்தில் இன்று பெங்களூர் புல்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.

    தொடர்ந்து 2 போட்டிகளில் வீழ்ந்த தமிழ் தலைவாஸ் ‘ஹாட்ரிக்‘ தோல்வியை தவிர்த்து 2-வது வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். உபி-யிடமும், தெலுங்கு டைட்டன்சிடமும் கடுமையாக போராடியே தோற்றது. கடைசி கட்டங்களில் செய்யும் தவறு பாதகமாகி விடுகிறது.



    அஜய் தாகூரை அதிகமாக நம்பி அணி இருக்கிறது. அவர் ஆட்டம் இழந்தால் அணியின் நிலைமை மாறி விடுகிறது. மோசமாக விளையாடும் ஜஸ்பீர்சிங் இன்றைய ஆட்டத்திலாவது மாற்றம் செய்யப்படுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெய்டு மற்றும் எதிர் அணி வீரர்களை மடக்கி பிடிப்பதில் மேம்படுவது அவசியமாகிறது.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் புனேரி பல்தானுடன் 32-32 என்ற கணக்கில் ‘டை’ செய்தது. ஜெய்ப்பூர் அணி முதல் போட்டியில் இன்றுதான் ஆடுகிறது.
    புரோ கபடி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்சிடமும் போராடி வீழ்ந்தது. #ProKabaddi #TeluguTitan #TamilThalaivas
    சென்னை:

    6-வது புரோ கபடி லீக் திருவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் சென்னையில் நேற்றிரவு அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்சுடன் பலப்பரீட்சை நடத்தியது. தொடக்கத்தில் சற்று ஆதிக்கம் செலுத்திய தமிழ்தலைவாஸ் அணி அதன் பிறகு தனது பிடியை தளரவிட்டது. 8-8 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்த பிறகு தெலுங்கு அணியின் கை மேலோங்கியது. எதிராளியை மடக்கி பிடிக்கும் யுக்தியில் தமிழ் தலைவாசை விட தெலுங்கு டைட்டன்ஸ் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.



    முதல் பாதியில் 17-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் அணி அந்த முன்னிலையை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது. இத்தனைக்கும் அந்த அணி இரண்டு முறை ஆல்-அவுட் ஆன போதிலும், அவர்களின் வீறுநடையை தடுக்க முடியவில்லை. முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 28-33 என்ற புள்ளி கணக்கில் பணிந்தது. அதிகபட்சமாக அஜய் தாகூர் (தலைவாஸ்), ராகுல் சவுத்ரி (தெலுங்கு) ஆகியோர் ரைடு மூலம் தலா 9 புள்ளிகள் சேகரித்தனர்.

    தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை வென்று இருந்த தமிழ் தலைவாஸ் அணி, அடுத்த ஆட்டத்தில் உ.பி. யோத்தாவிடம் தோல்வி அடைந்திருந்தது.

    முன்னதாக தபாங் டெல்லி-குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் (டை) முடிந்தது. ஒரு கட்டத்தில் 28-24 என்ற கணக்கில் குஜராத் முன்னிலை வகித்த நிலையில் கடைசி 5 நிமிடங்களில் டெல்லி அணியினர் நெருக்கடி கொடுத்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தனர்.

    சென்னையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் மும்பை-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.  #ProKabaddi #TeluguTitan #TamilThalaivas
    புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சன் ஜெய்ன்ட்ஸ்- தபாங் டெல்லி அணிகளும் மற்றோரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. #ProKabbadi #tamilthalaivas
    சென்னை:

    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    சென்னை நகரை மையமாக கொண்ட அஜய் தாகூர் தலைமையிலான தமிழ்தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோதா, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 42-26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. நேற்றைய 2-வது ஆட்டத்தில் 32-37 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதாவிடம் போராடி தோற்றது.

    ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளியுடன் இருக்கும் தமிழ் தலைவாஸ் 3-வது ‘லீக்’ ஆட்டத்தில் விஷால் பரத்வாஜ் தலைமையிலான தெலுங்கு டைட்டன்சை சந்திக்கிறது. இன்று இரவு 9 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள சுனில்குமார் தலைமையிலான குஜராத் பார்ச்சன் ஜெய்ன்ட்ஸ்- ஜோகீந்தர் சிங்நர்வால் தலைமையிலான தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. #ProKabbadi #tamilthalaivas
    புரோ கபடி ‘லீக்’ போட்டியின் முதல் ஆட்டத்தில் அஜய்தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. #Prokabaddi2018
    சென்னை:

    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

    இந்தப்போட்டியில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ‘ஏ’ பிரிவில் தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, புனேரி பல்தான், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், தமிழ் தலைவாஸ், உ.பி.யோதா, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி வரை சென்னை, சோனிபட், புனே, பாட்னா, கிரேட்டர் நொய்டா (உ.பி.), மும்பை, அகமதாபாத், பெங்களூர், டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடக்கிறது.

    புரோ கபடி ‘லீக்’ போட்டியின் முதல் ஆட்டம் சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் அஜய்தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அஜய் தாக்கூர், மன்ஜித் ‌ஷலாங், அமித் ஹூடா, ஜஸ்விர்சிங் தர்‌ஷன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணி தொடர்ந்து 3 முறை பட்டம் வென்றுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரராக கேப்டன் பர்தீப் நார்வால் உள்ளார்.

    மேலும் தீபக் நார்வால் ஜெய்தீப், விகாஸ் காலே போன்ற வீரர்கள் உள்ளனர். பலம் வாய்ந்த பாட்னாவுக்கு எதிராக தமிழ் தலைவாஸ் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இரவு 9 மணிக்கு மற்றொரு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை- புனேரி பல்தான் மோதுகின்றன. #Prokabaddi2018
    ×