search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "u mumba"

    புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் 1 சுற்றில் மும்பை அணியை 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது உ.பி. யோதா அணி. #ProKabbadi #UMumba #UpYodha
    கொச்சி:

    6-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டி கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும் 22 லீக் ஆட்டங்களில் மோதின. 12 நகரங்களில் ‘லீக்‘ ஆட்டங்கள் முடிவடைந்தன.

    இதில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்சுன் (93 புள்ளி), மும்பை (86 புள்ளி), தபாங் டெல்லி (68 புள்ளி) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களை பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

    இதேபோல், ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ் 78 புள்ளியுடன் முதல் இடத்தையும், பெங்கால் வாரியர்ஸ் 69 புள்ளியுடன் 2-வது இடத்தையும், உ.பி. யோதா 57 புள்ளியுடன் 3-வது இடத்தையும் பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், கொச்சியில் இன்று இரவு 8 மணிக்கு எலிமினேட்டர் 1 ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஏ பிரிவில் 2வது இடம் பிடித்த மும்பையும், ‘பி’ பிரிவில் 3-வது இடம் பிடித்த உ.பி. யோதா அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே உ.பி. யோதா அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அவர்களுக்கு ஈடுகொடுத்து யு மும்பா அணியும் விளையாடியது. ஆனாலும், ஆட்டத்தின் முதல் பாதியில் 18 - 15 என்ற புள்ளிக்கணக்கில் உபி யோதா அணி முன்னிலை பெற்றது. 

    இறுதியில், உ.பி. யோதா அணி 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    இதில் வெற்றி பெற்ற உ.பி. அணி ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. தோற்ற மும்பை அணி போட்டியில் இருந்து வெளியேறியது. #ProKabbadi #UMumba #UpYodha
    புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-32 என்ற புள்ளி கணக்கில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 7-வது வெற்றியை ருசித்தது. #ProKabaddi #UPYoddha #UMumba
    கொல்கத்தா:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 124-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, முன்னாள் சாம்பியன் யு மும்பாவை (மும்பை அணி) எதிர்கொண்டது. திரிலிங்கான இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-32 என்ற புள்ளி கணக்கில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 7-வது வெற்றியை ருசித்தது. இதில் ஒரு கட்டத்தில் 32-32 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் உ.பி.யோத்தா வீரர் பிரசாந்த் குமார் ராய் 2 பேரை அவுட் செய்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். தங்களது கடைசி லீக்கில் ஆடிய மும்பை அணி 22 ஆட்டங்களில் 15 வெற்றி, 5 தோல்வி, 2 டை என்று 86 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 39-23 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை சாய்த்தது. 10-வது வெற்றியை பதிவு செய்த பெங்கால் அணி இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabaddi  #UPYoddha #UMumba

    புரோ கபடி லீக் போட்டியில் ஆந்திராவில் நேற்றிரவு நடைபெற்ற இண்டர்ஜோன் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியை 44 - 19 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வீழ்த்தியது மும்பை அணி. #ProKabaddi #UMumba #DabangDelhi
    விசாகப்பட்டினம்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பை அணியும் தபாங் டெல்லி அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மும்பை அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதியின் முடிவில் 19 - 11 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணி முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் மும்பை அணி அபாரமாக விளையாடினர். மும்பை அணி வீரர்கள் ஆட்டத்தின் முன் தபாங் டெல்லி அணியினர் போராட்டம் எடுபடவில்லை.

    இறுதியில், தபாங் டெல்லி அணியை 44 - 19 என்ற கணக்கில் மும்பை அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. #ProKabaddi #UMumba #DabangDelhi
    புரோ கபடி லீக் போட்டியில் ஆந்திராவில் இன்று நடைபெற்ற இண்டர்ஜோன் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை 30 - 21 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது மும்பை அணி. #ProKabaddi #UMumba #BengalWarriors
    விசாகப்பட்டினம்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற இண்டர்ஜோன் ஆட்டத்தில் யு மும்பை அணியும் பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து மும்பை அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதியின் முடிவில் 14 - 9 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணி முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி வீரர்கள் போராடினர். ஆனாலும், மும்பை அணி வீரர்கள் அபாரமாக ஆடினர்.

    இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணியை 30 - 21 என்ற கணக்கில் மும்பை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. #ProKabaddi #UMumba #BengalWarriors
    புரோ கபடி லீக் போட்டியில் டெல்லியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணியை 36 - 26 என்ற கணக்கில் வீழ்த்திய மும்பை அணி வெற்றி பெற்றது. #ProKabaddi #UMumba #GujaratFortuneGiants
    புதுடெல்லி:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

    புதுடெல்லியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் யு மும்பை அணியும், குஜராத் பார்சுன் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 17 - 14 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணி முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் மும்பை அணிக்கு குஜராத் அணி வீரர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.

    இறுதியில், பரபரப்பான கட்டத்தில் மும்பை அணி 36 - 26 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது.

    இந்த வெற்றி மூலம் மும்பை அணி பதிமூன்றாவது வெற்றியை பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. #ProKabaddi #UMumba #GujaratFortuneGiants
    புரோ கபடி லீக் போட்டியின் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதுகின்றனர். #ProKabbadi
    புதுடெல்லி:

    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. தமிழ் தலைவாஸ் அணி நேற்றைய 16-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்சை எதிர் கொண்டது.

    இந்த ஆட்டம் 35-35 என்ற கணக்கில் ‘டை’யில் முடிந்தது. தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 9 தோல்வி, 2 டையுடன் 33 புள்ளிகள் பெற்று ‘பி’ பிரிவில் 4-வது இடத்தில் உள்ளது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி 48-35 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூரை வீழ்த்தியது.

    புரோ கபடி போட்டியின் 91-வது ‘லீக்’ ஆட்டம் டெல்லியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் மும்பை அணி 12-வது வெற்றியை பெற்று ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளது. டெல்லி அணி 7-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    இந்த சீசனில் இரு அணிகளும் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் மும்பை அணி 39-23 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. அதே நேரத்தில் மும்பைக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் டெல்லி அணி உள்ளது. #ProKabbadi
    புரோ கபடி லீக் போட்டியில் மும்பையில் நேற்றிரவு நடந்த மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 38-36 என்ற புள்ளி கணக்கில் திரில் வெற்றி பெற்றது. #ProKabaddi
    மும்பை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்றிரவு நடந்த 57-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் யு மும்பா (மும்பை அணி) அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி 5 நிமிடங்கள் எஞ்சி இருந்தபோது 30-26 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

    அந்த சமயத்தில் குஜராத் மாற்று ஆட்டக்காரர் மகேந்திர ராஜ்புத் ஒரே ரைடில் 5 பேரை அவுட் ஆக்கி, ஆல்-அவுட்டும் செய்ததால், ஆட்டம் குஜராத் பக்கம் திரும்பியது. முடிவில் குஜராத் அணி 38-36 என்ற புள்ளி கணக்கில் திரில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 50-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்து 5-வது வெற்றியை பெற்றது.

    இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் -தபாங் டெல்லி (இரவு 8 மணி), யு மும்பா-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன. 
    புரோ கபடி லீக் போட்டியில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்திய மும்பை அணி தனது ஏழாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
    மும்பை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் யு மும்பா அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மும்பை அணி அபாரமாக ஆடியது. இதனால் அந்த அணி மளமளவென புள்ளிகளை குவிக்க தொடங்கியது. இதனால் முதல் பாதியில் 26- 8 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணி முன்னிலை வகித்தது.



    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் மும்பை அணி சிறப்பாக விளையாடியது. இறுதியில், ஜெய்ப்பூர் அணியை 48 - 24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு கிடைத்த ஏழாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddi 
    புரோ கபடி லீக் போட்டியில் உபியில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்திய மும்பை அணி தனது ஆறாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
    லக்னோ:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் உபி மாநிலத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனேரி பல்டன் அணியும், யு மும்பா அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மும்பை அணி சிறப்பாக விளையாடியது. இதனால் முதல் பாதியில் அந்த அணி 19 - 10 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் மும்பை அணி அபாரமாக ஆடியது.

    இறுதியில், புனே அணியை 31 - 22 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இது மும்பை அணிக்கு கிடைத்த ஆறாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddi 
    புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பா அணி அபார வெற்றி பெற்றது. #ProKabaddi #UMumba #TeluguTitans
    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், யு மும்பா அணியும் மோதின. 

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே யு மும்பா அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அந்த அணியின் புள்ளிகள் உயர்ந்து வந்தது.

    யு மும்பா அணியினரின் ஆட்டத்துக்கு முன்னால் தெலுங்கு டைட்டன்ஸ் அணியினர் திணறினர். ஆட்டத்தின் இறுதியில் யு மும்பை அணி சிறப்பாக செயல்பட்டதால், 41- 20 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைடன்சை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்த தொடரில் யு மும்பா அணி தனது 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. #ProKabaddi #UMumba #TeluguTitans
    புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை புனேரி படான் அணி வீழ்த்தியது. #ProKabaddi #PuneriPaltan #UMumba
    சோனிபட்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் அரியானா மாநிலம் சோனிபட்டில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணியும், புனே அணியும் மோதின. 

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே புனே அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இதனால் மும்பை அணியை விட கூடுதலாக புள்ளிகளை பெற்று முன்னிலையில் இருந்து வந்தது.

    ஆட்டத்தின் இறுதியில் புனே அணி சிறப்பாக செயல்பட்டது. இதையடுத்து, புனே அணி 33 - 32 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. புனே அணிக்கு இது 4-வது வெற்றியாகும். #ProKabaddi #PuneriPaltan #UMumba
    புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை யு மும்பா அணி வீழ்த்தியது. #ProKabaddi
    சோனிபட்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் அரியானா மாநிலம் சோனிபட்டில் நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் யு மும்பா அணியும் மோதின. 

    ஆட்டத்தின் தொடக்கத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியினர் சிறப்பாக விளையாடினர். ஆனாலும், சுதாரித்துக் கொண்ட யு மும்பா அணியினர் முதல் பாதியில் 24 -13 என்ற புள்ளியில் முன்னிலை வகித்தனர்.

    யு மும்பா அணியின் சித்தார்த் தேசய் 15 ரெய்டு பாய்ண்ட் எடுத்தார். இதனால் யு மும்பா அணி 42 -32 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    அரியானா அணிக்கு இது 5-வது தோல்வியாகும். யு மும்பா அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். #ProKabaddi 
    ×