என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக்: டைபிரேக்கரில் அரியானாவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றை உறுதி செய்தது யு மும்பா
    X

    புரோ கபடி லீக்: டைபிரேக்கரில் அரியானாவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றை உறுதி செய்தது யு மும்பா

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி தோல்வி அடைந்தது.

    புதுடெல்லி:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

    இன்று நடந்த போட்டியில் யு மும்பா, அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இதில் சிறப்பாக ஆடிய இரு அணிகளும் புள்ளிகளைக் குவித்தன. 37-37 என சமனிலை பெற்றதால் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.

    இதில் யு மும்பா அணி 7-4 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்றையும் உறுதி செய்துள்ளது.

    மற்றொரு போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி 38-27 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது.

    Next Story
    ×