புரோ கபடி லீக்: மும்பை அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது தெலுங்கு டைட்டன்ஸ்

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்தது.
புரோ கபடி லீக்: மும்பை அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது தெலுங்கு டைட்டன்ஸ்
Published on

நொய்டா:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

இதில் முதலில் நடந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 31-29 என்ற புள்ளிக்கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 39-39 என சமனில் முடிந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com