search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Up Yodha"

    புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபையர் சுற்றில் உ.பி. அணியை 38 -31 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #ProKabaddiLeague #GujaratFortunegiants #UpYodha
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்ஸ் சுற்று) முன்னேறின.
     
    கடந்த 31ம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் மூன்றாவது சுற்றுக்கான போட்டியில் தபாங் டெல்லி மற்றும் உபி யோதா அணிகள் மோதின. இதில், உ.பி. யோதா அணி 45 - 33  என்ற புள்ளிக்கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. இதனால் உபி யோதா அணி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில், உ.பி. யோதா அணி குஜராத் அணியை இன்று எதிர்கொண்டது. முதலில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

    ஆனாலும், முதல் பாதியில் குஜராத் அணி 19 -14 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து, குஜராத் அணி வீரர்கள் இரண்டாவது பாதியிலும் அதிரடியாக ஆடினர். அவர்களது ஆட்டத்துக்கு முன்னால் உ.பி. அணி வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில், குஜராத் அணி 38 - 31 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    முதல் தகுதிச்சுற்றுபோட்டியில் குஜராத் அணி பெங்களூரு புல்ஸ் அணியிடம் தோற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddiLeague #GujaratFortunegiants #UpYodha 
    புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் மூன்றாவது சுற்றில் டெல்லி அணியை 45 - 33 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி உபி யோதா அணி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது. #ProKabaddiLeague #UpYodha #DabangDelhi
    கொச்சி:

    6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்ஸ் சுற்று) முன்னேறின.
     
    நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் உ.பி. யோதா 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில யு மும்பாவை தோற்கடித்தது. மற்றொரு சுற்றில் தபாங் டெல்லி 39 - 28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை விரட்டியது. அதன்மூலம் யு மும்பா, பெங்கால் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    இந்நிலையில், எலிமினேட்டர் மூன்றாவது சுற்றுக்கான போட்டியில் தபாங் டெல்லி மற்றும் உபி யோதா அணிகள் மோதின.

    இதில், ஆட்டத்தின் முதலில் இருந்தே உபி யோதா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதியில் 27 - 13 என்ற புள்ளிக்கணக்கில் உபி யோதா அணி முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து, இரண்டாவது பாதியிலும் உபி யோதா அணி அபாரமாக ஆடியது. இதனால் ஆட்டத்தின் முடிவில் 45 - 33  என்ற புள்ளிக்கணக்கில் டெல்லியை வீழ்த்தியது.

    இந்த வெற்றி மூலம் உபி யோதா அணி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதில் உபி யோதா அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது. #ProKabaddiLeague #UpYodha #DabangDelhi
    புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் 1 சுற்றில் மும்பை அணியை 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது உ.பி. யோதா அணி. #ProKabbadi #UMumba #UpYodha
    கொச்சி:

    6-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டி கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும் 22 லீக் ஆட்டங்களில் மோதின. 12 நகரங்களில் ‘லீக்‘ ஆட்டங்கள் முடிவடைந்தன.

    இதில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்சுன் (93 புள்ளி), மும்பை (86 புள்ளி), தபாங் டெல்லி (68 புள்ளி) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களை பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

    இதேபோல், ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ் 78 புள்ளியுடன் முதல் இடத்தையும், பெங்கால் வாரியர்ஸ் 69 புள்ளியுடன் 2-வது இடத்தையும், உ.பி. யோதா 57 புள்ளியுடன் 3-வது இடத்தையும் பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், கொச்சியில் இன்று இரவு 8 மணிக்கு எலிமினேட்டர் 1 ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஏ பிரிவில் 2வது இடம் பிடித்த மும்பையும், ‘பி’ பிரிவில் 3-வது இடம் பிடித்த உ.பி. யோதா அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே உ.பி. யோதா அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அவர்களுக்கு ஈடுகொடுத்து யு மும்பா அணியும் விளையாடியது. ஆனாலும், ஆட்டத்தின் முதல் பாதியில் 18 - 15 என்ற புள்ளிக்கணக்கில் உபி யோதா அணி முன்னிலை பெற்றது. 

    இறுதியில், உ.பி. யோதா அணி 34 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    இதில் வெற்றி பெற்ற உ.பி. அணி ‘எலிமினேட்டர் 3’ ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. தோற்ற மும்பை அணி போட்டியில் இருந்து வெளியேறியது. #ProKabbadi #UMumba #UpYodha
    புரோ கபடி ‘லீக்’ போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யை யோதை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. #Prokabbadi #tamilthalaivas
    சென்னை:

    6-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

    ஜனவரி 5-ந்தேதிவரை நடைபெறும் இந்த புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் 12 அணிகள் பங்கேற்றன.

    அவை 2 பிரிவாக பிரிக் கப்பட்டுள்ளது. ‘ஏ’  பிரிவில் புனே பில்தான், யு மும்பா, அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெய்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ், நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், உ.பி. யோதா, தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ‘லீக்‘ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும், ஒவ்வொரு அணியும் 22 ‘லீக்‘ ஆட்டத்தில் விளையாடும்.

    தொடக்க ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ்- பர்தீப் நார்வால் தலைமையிலான பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. 42-20 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னாவை எளிதில் வீழ்த்தியது.

    தமிழ் தலைவாஸ் அணியில் அஜய் தாகூர் 14 புள்ளிகளும், காஜித்சிங் 7 புள்ளிகளும், அமித் ஹோடா 7 புள்ளியும், ஜஸ்விர்சிங், மன்ஜித்சில்லார் தலா 3 புள்ளியும் எடுத்தனர். பாட்னா அணியில் பிர்தீப் நார்வால் 11 புள்ளியும், மன்ஜித் 8 புள்ளியும் பெற்றனர்.

    புனே- மும்பை அணிகள் மோதிய 2-வது ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்த ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டையில் முடிந்தது.

    தமிழ் தலைவாஸ் அணி 2-வது ஆட்டத்தில் உ.பி.யோதாவை இன்று எதிர்கொள்கிறது. இரவு 9 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது.

    இந்த சீசனில் முற்றிலும் மாறுபட்ட அணியாக திகழும் தமிழ் தலைவாஸ் தொடக்க ஆட்டத்தில் அபாரமான திறமையை வெளிப்படுத்தியது. ரெய்டில் கேப்டன் அஜய் தாகூர், சர்ஜித்சிங் ஆகியோரை மடக்கி பிடிப்பதில் அமித் ஹூடா, மன்ஜித், தர்‌ஷன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    உ.பி. யோதா அணியில் கேப்டன் ரிஷாங்க் தேவதிகா, சாகர் கிருஷ்ணா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளார்.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கிரிஷ் தலைமையிலான புனே- சுரேந்தர் நாடா தலைமையிலான அரியானா அணிகள் மோதுகின்றன. #Prokabbadi #tamilthalaivas
    ×