search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petta Audio Launch"

    ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ படத்தின் கதை என்னவென்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ‘பேட்ட’ சமூக பிரச்சனையை மையப்படுத்தி உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. #Petta #Rajinikanth
    ரஜினிகாந்த் தனது முந்தைய படங்களான ‘கபாலி’யில் மலேசிய தாதாவாகவும், ‘காலா’வில் மும்பை தாதாவாகவும் நடித்து இருந்தார். 2.0 படத்தில் எந்திரனாகவும், விஞ்ஞானியாகவும் இரு வேடங்களில் வந்தார். அவரது நடிப்பில் அடுத்தாக பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘பேட்ட’ படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் பற்றி பல்வேறு தகவல்கள் பரவுகின்றன.

    மதுரையில் நடக்கும் கதை என்றும், கல்லூரி விடுதி வார்டனாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. படம் மலைப்பகுதியில் நடக்கும் கதை என்று இசை வெளியீட்டில் ரஜினிகாந்த் கூறியிருந்தார். அத்துடன் மதுரை பின்னணியிலும் படம் உருவாகி இருக்கிறது. 

    வட இந்தியாவில் கல்லூரிகளில் படப்பிடிப்புகளை நடத்தினர். இமயமலை அடிவாரத்தில் படப்பிடிப்புகள் நடந்ததாலும் போலீஸ் வாகனத்தில் ரஜினிகாந்த் செல்வதுபோல் புகைப்படம் வெளியானதாலும் இது பயங்கரவாதிகளுடன் நடக்கும் மோதல் கதை என்றும் கூறினர்.



    இந்த நிலையில், தற்போது நாட்டையே உலுக்கும் ஆணவ கொலைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆணவ கொலைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. உடுமலைப்பேட்டை சங்கர் கொலையுண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுவரை 80-க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளதாக புள்ளி விவரம் சொல்கிறது.

    இந்த கொலைகளை பற்றிய படமாக பேட்ட தயாராகி உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் தகவல் பரவுகிறது. ரஜினிகாந்த் கல்லூரி வார்டன் என்பதால் அங்கு நடக்கும் காதல் மற்றும் கொலையை இந்த படம் அலசி இருப்பதாக கூறுகின்றனர். ஆனாலும் படக்குழுவினர் இதை உறுதிப்படுத்தவில்லை. #Petta #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘பேட்ட’ படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #Petta #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

    பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

    சமீபத்தில் வெளியாகிய பாடல் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் சர்வதேச திரையீட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ம்ஸ் கார்பரேஷன் நிறுவனம் வாங்கியிருக்கிறது.



    முன்னதாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகத்தின் சில பகுதிகளை கைப்பற்றியிருந்ததாக பார்த்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். #Petta #Rajinikanth

    ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது. #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், ரஜினி தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு பேட்ட படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    டீசரில், ரஜினி இளமை தோற்றத்தில் இரண்டு கெட்-அப்களில் மாஸ் தோற்றத்தில் வருகிறார். மேலும் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டீசரின் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

    பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். #Petta #Rajinikanth

    பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் என்பதை குறிப்பிட்டு சொன்னார். #Petta #PettaAudioLaunch #KarthickSubbaraj
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

    இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது,

    சின்ன வயதில் இருந்தே எனது வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்துள்ளார் தலைவர். இப்போ வரை நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. அவருடன் பணியாற்றியது ஒரு கனவு போல இருக்கிறது. எனக்கு சினிமா மேல் ஒரு ஆசை, வெறி வந்ததற்கு தலைவர் தான் காரணம். 

    சின்ன வயதில், தலைவரை திரையில் பார்க்க தான் தியேட்டருக்கே போவோம். நான் படம் எடுத்தால், அதை தலைவர் பார்ப்பாரா, பாராட்டுவாரா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இந்திய சினிமாவிலேயே மனதார பாராட்டுபவர் ரஜினி சார் தான். பாராட்டனும்னு அவசியமே இருக்காது. ஆனாலும் பாராட்டுவார். 2.0 படத்தில் சொல்வது போது பாசவிட்டிங் ஆரா தலைவர் தான். 2.0 படத்தில் முனிவருக்கு தான் அதிகமான பாசிட்டிங் ஆரா இருக்குனு சொல்லிருப்பாங்க, ஆனால் அதைவிட தலைவருக்கு நிறைய பாசிட்டிவ் ஆரா இருக்குது.



    பீட்சா படம் ரிலீசான போது ரஜினி சார் வீட்டில் இருந்து போன் வந்த போது நம்பவில்லை. அவர் பேசிய பிறகு தான் நம்பினேன். சூப்பரா பண்ணியதாக சொன்னார். நாம் படம் பண்ணியதற்கான பலன் கிடைத்துவிட்டது என்று நினைத்தேன். அவருடன் படம் பண்ணுவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஜிகர்தண்டா படம் பண்ணிய போது எப்படியாவது இந்த முறை தலைவரை நேரில் பார்த்து விட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் கருணாகரன் தலைவருடன் லிங்கா படத்தில் நடித்து வந்தார். அவர் மூலமாக நேரில் பார்த்துவிட வேண்டும் என்று பிளான் பண்ணோம். பார்த்துவிட்டோம். 

    நான் என்ன எழுதினாலும், உங்களை நினைத்து தான் சார் எழுதுவேன் என்றேன். அப்போ என்கிட்டையே சொல்லியிருக்கலாமே என்றார். அடுத்ததாக அவரை சந்திக்கும் போது ஏதாவது கதை இருந்தால் சொல்ல சொன்னார். பின்னர் சில மாதங்கள் கழித்து அவரிடம் கதை சொன்னேன்.

    படப்பிடிப்பில் இயக்குநரான எனக்கு நிறைய வேலைகள் இருக்கும். இருந்தாலும், தலைவர் என்ன செய்கிறார் என்பதை பார்த்து ரசித்துக் கொண்டே இருப்பேன். பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் தான். இந்த கதை பண்ணால் நான் மட்டும் தான பண்ண முடியும். கண்டிப்பாக பண்ணுவோம் என்றார். பாபியும், நானும் பெரிய தலைவர் ரசிகர்கள். பேட்ட படத்தில் பாபியோட கதாபாத்திரத்தை அவரே தேர்வு செய்துவிட்டார். ரஜினி சாரை வைச்சு நான் ஒரு படம் பண்ணுவேன்னும், அதில் நான் வில்லனாக நடிப்பேன் என்றும் விஜய் சேதுபதி சொன்னார். அது நிறைவேறிவிட்டது. எங்க அப்பா பெரிய ரஜினி ரசிகர். அவரை பார்த்து தான் நானும் பெரிய ரசிகனானேன். #Petta #PettaAudioLaunch #KarthickSubbaraj

    விஜய் சேதுபதி சாதாரண நடிகன் இல்லை, மகா நடிகன். ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் கிடைத்தது என்று ரஜினிகாந்த் பேசினார். #Petta #PettaAudioLaunch #Rajinikanth
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

    இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது,

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் அனைவரும் கைகோர்ப்போம். 2.0 படத்திற்கு உலகளவில் பெரிய வெற்றி கிடைச்சுருக்கு. படத்தை வெற்றி பெற வைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி. 2.0 வெற்றி, அதற்கான பாராட்டு இயக்குநர் ஷங்கர், தயாரிப்பு நிறுவனத்திற்கு உரியது. அந்த படத்தில் வேலை செஞ்ச தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டினால் பத்தாது. 2.0 படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே கலாநிதி மாறன் தான்.



    அந்த படத்தை முடிக்க முடியாம தவிச்ச போது, கலாநிதி தான், எனக்காகவும், ஷங்கருக்காகவும் அந்த படத்தை வாங்கி தயாரித்தார். அந்த படம் வெற்றியடைஞ்ச பிறகும் எனக்கு ரூ.1 கோடி ரூபாய் கொடுத்தார். 2.0 படம் எடுக்க முடிவு செய்த போது, சன் பிக்சர்ஸ் தயாரிக்க முடியாததால் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது.

    திரும்பவும் தயாரிப்பில் இறங்கிய பிறகு படம் பண்ணலாம்னு சொன்னாங்க. மகிழ்ச்சி, பண்ணலாம்னு சொன்னேன். சில இயக்குநர்களிடம் கதை கேட்டோம். எதுவும் செட்டாகவில்லை. அப்போ கார்த்திக் ஒரு கதை சொன்னது ஞாபகம் வந்தது. அவரிடம் பேசினோம். அவரிடம் கேட்ட போது எனக்கு ரொம்ப பிடிச்சது. அதை தயாரிப்பாளரிடம் சொல்ல சொன்னேன். பின்னர் தான் படம் ஓகே ஆச்சு. 

    பேட்ட படத்தை தமிழ்நாட்டில் எடுக்க முடியாது. அன்பு தொல்லை. வெளி மாநிலத்தில் பண்ணோம். கார்த்திக் என்னுடைய மிகப்பெரிய ரசிகர். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுத்தார்.

    சரி வில்லன் கதாபாத்திரத்தை பண்ணப்போவது யார்  என்று கேட்டேன். விஜய் சேதுபதி பண்ணுவார் என்று கார்த்திக் கூறினார். எனக்கு சந்தேகம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கார்த்திக் சொன்னார். பின்னர் விஜய் சேதுபதி ஒத்துக்கிட்டதாக அடுத்த நாளே சொன்னார்.



    விஜய் சேதுபதியோட படம் பார்த்திருக்கிறேன். அவர் நல்ல நடிகர். அதைவிட அவர் நல்ல மனிதர். அவர் சாதாரண நடிகன் இல்லை. மகா நடிகன். ஒவ்வொரு ஷாட்டுக்கும் என்ன செய்யனும், எப்படி செய்தால் நல்லா இருக்கும், அப்படி செய்யலாமா, இப்படி செய்யலாமா என்று கேள்வி மேலலே கேள்வி கேட்டு புதுசா யோசிச்சு செய்வார். நல்ல மனிதர், பொறுமையான மனிதர். அவருடைய பேச்சு, சிந்தனை, கற்பனை வித்தியாசமானது. அவர் ஒரு மனநல மருத்துவர் மாதிரி. ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம்.

    பிளாஷ்பேக் ஹீரோயினான திரிஷா நடிச்சிருக்காங்க. அந்த கதாபாத்திரம் பண்ண திரிஷாவே தயாராக இருந்தார். சிம்ரனுடன் டூயட் பாடும் போது கூச்சமாக இருந்தது. சிம்ரன் நடிக்கிறார் என்றதும் படக்குழு சந்தோஷமாக இருந்தார்கள்.

    சசிகுமாரின் கதாபாத்திரம் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை சிறப்பாக இருக்கும்படியான கதாபாத்திரம். 42 ஆண்டுகளில் நான் பார்த்த மனிதர்களில் சிறந்த மனிதர் சசிகுமார். நவாசுதீன் சித்திக் எது செய்தாலும் வித்தியாசமாக இருக்கும்.



    என்னோட ஒவ்வொரு ரசிகரும் எப்படி ஆசைப்படுவாங்களோ அதை யோசித்து, பேசி கேட்டு கேட்டு பண்ண வைத்தார் கார்த்திக். யூனிட் முழுவதும் எனது ரசிகர்களாக இருந்ததால் ரசித்து எடுத்துள்ளார்கள். 

    ஷங்கர் எப்படி பிரம்மாண்டமோ, அதேபோல கார்த்திக்னா ஸ்டோரி கில்லிங் தான். 

    சிறிய வயதில் இருந்தே அனிருத்தை பார்க்கிறேன். அப்போவே இவருக்குள் ஏதோ இருக்கு. பெரிய ஆளா வருவார் என்று நினைத்தேன். 3 படம் பண்ணும் போது, அனிருத் தான் அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் என்று தனுஷ் சொன்னாரு. பொங்கலுக்கு நல்ல பொழுதுபோக்கு படமாக பேட்ட படத்தை பார்க்க போறீங்க.

    கார்த்திக் சுப்புராஜை பார்க்கும் போது ஏ.சி.சுலோக் சந்தர் ஞாபகம் வருகிறது.

    அப்பறம் பிறந்தநாள் வரப்போகுது. பிறந்நாளுக்கு இங்கே இருக்க மாட்டேன். தவறாக நினைக்க வேண்டாம். வீட்டிற்கு வந்து ஏமாற வேண்டாம். என்ன நடிக்க வைத்த கார்த்திக், சண்டை போட வைத்த பீட்டர் ஹெய்ன் உள்ளிட்ட படக்கழு அனைவருக்கும் நன்றி என்றார். #Petta #PettaAudioLaunch #Rajinikanth

    ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறிவிட்டது, நான் தான் அவருக்கு சரியான ஜோடி என்று நடிகை சிம்ரன் பேசினார். #Petta #PettaAudioLaunch #VijaySethupathi
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

    இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் சிம்ரன் பேசியதாவது,

    இது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. 15 வருடத்திற்கு முன்பே ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை தவறவிட்டுவிட்டேன். அதற்காக வருத்தப்பட்டேன். தற்போது எனது ஆசை நிறைவேறிவிட்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மீனா, குஷ்பு, சிம்ரன் மூன்று பேரில் ரஜினிக்கு யார் சரியான ஜோடி என்று கேட்டதற்கு, சிம்ரன் தான் என்றார்.



    திரிஷா பேசும் போது,

    தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் போல் இன்னொருவர் இருக்க முடியாது. அவரிடம் இருந்து ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் படப்பிடிப்புக்கு காலை 6 மணிக்கு வந்து விடுவார். என்னுடைய கனவை நினைவாக்கிய கார்த்திக் சுப்பராஜ்க்கு நன்றி என்றார். #Petta #PettaAudioLaunch #VijaySethupathi

    பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும், படத்தில் நான் தான் வில்லன் என்று பேட்ட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி தெரிவித்தார். #Petta #PettaAudioLaunch #VijaySethupathi
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

    இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது,

    எல்லாரும் கனவு காணுவாங்க, ஆனா நான் காணாத ஒரு கனவு நடந்தது, ரஜினி சாருடன் இணைந்து நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. அவர் கூட நடிச்சதே பெரிய விஷயம். அவர் கேமரா முன் வந்து நின்றால், அவரை பார்கக நிறைய பேர் இருக்காங்க. ரசிகர்களுக்காக இப்போ வரை அவர் பொறுப்புடன் நடிக்கிறார். அவரைப் போல பொறுப்பான நடிகராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.



    கார்த்திக் சுப்புராஜை ஷார்ட் பிலிம் பண்ணும் போதுல இருந்து தெரியும். ஷார்ட் பிலிம்லயே நிறைய சஸ்பென்ஸ் வைப்பாரு, அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமா இருக்கும். இந்த படத்துலயும் அதே மாதிரியான காட்சிகள் நிறையவே இருக்கு. கடைசி காட்சி வரை எல்லாரையும் பிரமிக்க வைப்பாரு. பேட்டை படத்திலும் எல்லாம் இருக்கு, கடைசி வரை சுவாரஸ்யம் இருக்கு.

    எப்பையமே பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும். நான் படத்தில் வில்லன் தான். மறுபடியும் ஜானுவ இங்கே பார்க்கிறேன். 

    இவ்வாறு பேசினார். #Petta #PettaAudioLaunch #VijaySethupathi

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடித்துள்ள `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக துவங்கியது. #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. படத்தில் இருந்து மரண மாஸ், உலாலா என இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் அனைத்து பாடல்களும் இன்று வெளியாகிறது.



    இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். #Petta #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவிருக்கும் நிலையில், இந்த படத்தின் மூலம் தனுஷ் - அனிருத் மீண்டும் இணைந்துள்ளனர். #PettaAudioLaunch #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. ஏற்கனவே படத்தில் இருந்து மரண மாஸ், உலாலா என இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் அனைத்து பாடல்களும் இன்று வெளியாகிறது.

    முன்னதாக படத்தில் இடம்பெறும் பாடல்களின் விவரத்தை படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி படத்தில் 6 பாடல்களும், 5 தீம் மியூசிக்கும் இடம்பெறுகிறது. அதில் `இளமை திரும்புதே' என்ற பாடலை தனுஷ் எழுதியிருக்கிறார். இதன்மூலம் சிறய இடைவேளைக்கு பிறகு அனிருத் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது இருவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர விவேக் மூன்று பாடல்களையும், கார்த்திக் சுப்புராஜ் ஒரு பாடலையும், கு.கார்த்திக் ஒரு பாடலையும் எழுதியிருக்கின்றனர்.



    பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். #PettaAudioLaunch #Petta #Rajinikanth

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடித்துள்ள பேட்ட படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. 2019 பொங்கல் தினத்தன்று இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.

    மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    படத்தில் இருந்து மரண மாஸ், உலாலா என இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் அனிருத்தின் இசை கச்சேரியும் இடம்பெறுகிறது.


    இந்த நிலையில், பேட்ட படத்தின் வடக்கு ஆற்காடு,தெற்கு ஆற்காடு, செங்கல்பட்டு, மதுரை, சேலம் பகுதிகளின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியிருக்கிறது. 2013-ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப்புலி படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி வைத்ததில் மகிழ்ச்சி என்று உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Petta #Rajinikanth

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்க இருக்கிறார்கள். #PettaAudioLaunch #Rajinikanth #VijaySethupathi
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. வரும் பொங்கல் தினத்தன்று இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.

    மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இதுவரை இந்தப் படத்தின் 3 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. பேட்ட படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் ரஜினியின் அறிமுக காட்சியான மரண மாஸ் பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. அடுத்த பாடல் ஊலலலா இன்று மாலை இணையத்தில் வெளியாக இருக்கிறது.



    பேட்ட படத்தின் முழு பாடல்கள் வெளியீடு வருகிற 9-ந் தேதி (ஞாயிறு) அன்று தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. விழாவில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி உள்பட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் இதை படக்குழு அறிவிக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சி நடக்க இருக்கும் தனியார் கல்லூரி தரப்பில் இருந்து இது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #PettaAudioLaunch #Rajinikanth #VijaySethupathi

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தில் விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. #Petta #Rajinikanth #VijaySethupathi
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் 2019 பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்தில் ரஜினி காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியின் பல்வேறு போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது.

    அதில் விஜய் சேதுபதி தன் உடலை போர்வையால் மூடியபடி உட்கார்ந்து கொண்டு, கையில் துப்பாக்கி வைத்தபடி இருக்கிறார். அவருக்கு பின்னால் ரஜினி நடந்து வருவது போன்று நிழலுருவமும் போஸ்டரில் இடம்பெற்றிருக்கிறது. மேலும் படத்தில் அவரது பெயர் ஜித்து என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது.

    முன்னதாக அனிருத் இசையில் `மரண மாஸ்' என்ற சிங்கிள் நேற்று 
    வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இரண்டாவது சிங்கிள் 7-ஆம் தேதியும், படத்தின் முழு இசையும் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 9-ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது.

    பேட்ட படத்தில் ரஜினியோடு விஜய்சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Petta #PettaAlbumParaak #Rajinikanth

    ×