search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
    X

    பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு

    பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் என்பதை குறிப்பிட்டு சொன்னார். #Petta #PettaAudioLaunch #KarthickSubbaraj
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

    இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

    நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது,

    சின்ன வயதில் இருந்தே எனது வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்துள்ளார் தலைவர். இப்போ வரை நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. அவருடன் பணியாற்றியது ஒரு கனவு போல இருக்கிறது. எனக்கு சினிமா மேல் ஒரு ஆசை, வெறி வந்ததற்கு தலைவர் தான் காரணம். 

    சின்ன வயதில், தலைவரை திரையில் பார்க்க தான் தியேட்டருக்கே போவோம். நான் படம் எடுத்தால், அதை தலைவர் பார்ப்பாரா, பாராட்டுவாரா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இந்திய சினிமாவிலேயே மனதார பாராட்டுபவர் ரஜினி சார் தான். பாராட்டனும்னு அவசியமே இருக்காது. ஆனாலும் பாராட்டுவார். 2.0 படத்தில் சொல்வது போது பாசவிட்டிங் ஆரா தலைவர் தான். 2.0 படத்தில் முனிவருக்கு தான் அதிகமான பாசிட்டிங் ஆரா இருக்குனு சொல்லிருப்பாங்க, ஆனால் அதைவிட தலைவருக்கு நிறைய பாசிட்டிவ் ஆரா இருக்குது.



    பீட்சா படம் ரிலீசான போது ரஜினி சார் வீட்டில் இருந்து போன் வந்த போது நம்பவில்லை. அவர் பேசிய பிறகு தான் நம்பினேன். சூப்பரா பண்ணியதாக சொன்னார். நாம் படம் பண்ணியதற்கான பலன் கிடைத்துவிட்டது என்று நினைத்தேன். அவருடன் படம் பண்ணுவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஜிகர்தண்டா படம் பண்ணிய போது எப்படியாவது இந்த முறை தலைவரை நேரில் பார்த்து விட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் கருணாகரன் தலைவருடன் லிங்கா படத்தில் நடித்து வந்தார். அவர் மூலமாக நேரில் பார்த்துவிட வேண்டும் என்று பிளான் பண்ணோம். பார்த்துவிட்டோம். 

    நான் என்ன எழுதினாலும், உங்களை நினைத்து தான் சார் எழுதுவேன் என்றேன். அப்போ என்கிட்டையே சொல்லியிருக்கலாமே என்றார். அடுத்ததாக அவரை சந்திக்கும் போது ஏதாவது கதை இருந்தால் சொல்ல சொன்னார். பின்னர் சில மாதங்கள் கழித்து அவரிடம் கதை சொன்னேன்.

    படப்பிடிப்பில் இயக்குநரான எனக்கு நிறைய வேலைகள் இருக்கும். இருந்தாலும், தலைவர் என்ன செய்கிறார் என்பதை பார்த்து ரசித்துக் கொண்டே இருப்பேன். பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் தான். இந்த கதை பண்ணால் நான் மட்டும் தான பண்ண முடியும். கண்டிப்பாக பண்ணுவோம் என்றார். பாபியும், நானும் பெரிய தலைவர் ரசிகர்கள். பேட்ட படத்தில் பாபியோட கதாபாத்திரத்தை அவரே தேர்வு செய்துவிட்டார். ரஜினி சாரை வைச்சு நான் ஒரு படம் பண்ணுவேன்னும், அதில் நான் வில்லனாக நடிப்பேன் என்றும் விஜய் சேதுபதி சொன்னார். அது நிறைவேறிவிட்டது. எங்க அப்பா பெரிய ரஜினி ரசிகர். அவரை பார்த்து தான் நானும் பெரிய ரசிகனானேன். #Petta #PettaAudioLaunch #KarthickSubbaraj

    Next Story
    ×