search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Patta"

    • பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிட்டில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினார்.
    • தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு ரூ. 22 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் இடுபொருட்கள் வழங்கினார்.

    திருத்துறைப்பூண்டி :

    திருத்துறைப்பூண்டி தாலுகா பாமினி ஊராட்சி, அத்திமடை கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாமில் 162 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 87 ஆயிரத்து 10 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். இதற்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இம்முகாமில் பாமினி, தேசிங்குராஜபுரம், கொக்கலாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுமக்கள் துறைகளின் நலதிட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெறுவதற்கு இம்முகாம் மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்த மக்கள் நேர்காணல் முகாமில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிட்டில்; வீடு கட்டுவதற்கான ஆணையும்; வருவாய்துறையின் சார்பில் 13 நபர்களுக்கு உட்பிரிவு பட்டாவும், 11 நபர்களுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையும், 19 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 84 நபர்களுக்கு ரூ.84 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 11 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாவும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் பேட்டரி தெளிப்பானும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 05 நபர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் இடுபொருட்களும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.29 ஆயிரத்து 250 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரமும் என மொத்தம் 162 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 87 ஆயிரத்து 10 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சித்ரா, தாசில்தார் அலெக்ஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு நிரந்தர பட்டா பல்வேறு காரணங்களால் 20 வருடமாக வழங்காமல் இருந்துள்ளது.
    • தற்போது முதற்கட்டமாக கீழமூவர்கரை கிராமத்தில் அனைவருக்கும் நிரந்தர பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கீழ மூவர்கரை மீனவ கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிரந்தர பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை வகித்தார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, மயிலாடுதுறை டி.ஆர்.ஒ. முருகதாஸ், சீர்காழி ஆர்.டி.ஓ அர்ச்சனா, சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல்ஜோதி தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

    கலெக்டர் லலிதா மீனவ குடும்பங்களுக்கு 122 பட்டாக்களை வழங்கி பேசுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு நிரந்தர பட்டா பல்வேறு காரணங்களால் 20 வருடமாக வழங்காமல் இருந்துள்ளது.தற்போது முதற்கட்டமாக கீழமூவர்கரை கிராமத்திற்கு அனைவருக்கும் நிரந்தர பட்டா வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு இன்னும் இரண்டு மாதத்திற்குள் சிறப்பு முகாம்கள் நடத்தி பட்டா விரைவில் முழுமையாக வழங்கப்படும் என்றார்.

    விழாவில் சீர்காழி வட்ட வழங்கல் தனி தாசில்தார் சபிதா தேவி, தனிமண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் சசிகலா, ஊராட்சித் தலைவர் சரளா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தலைமை சர்வேயர் முருகானந்தம் நில அளவை குறித்து பயிற்சி அளித்தார்.
    • மாவட்ட அளவில் பட்டா மாற்றம் அதிக அளவில் தேக்கம் உள்ளதால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி அளித்து பட்டா மாற்றம் விரைந்து நடைபெற இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான நில அளவை குறித்து பயிற்சி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சியினை வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தார். கூடுதல் தாசில்தார்கள் வேதையன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியினை வேதாரண்யம்கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின் பார்வையிட்டார். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தலைமை சர்வேயர் முருகானந்தம் நில அளவை குறித்து பயிற்சி அளித்தார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 18 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், திருக்குவளையில் 9 பேருக்கும், கிவளுரில் 14 பேருக்கும், நாகையில் 26 பேருக்கும் என மொத்தம் 67 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட அளவில்பட்டா மாற்றம் அதிக அளவில் தேக்கம் உள்ளதால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி அளித்து பட்டா மாற்றம் விரைந்து நடைபெற இப்பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • நிலஅளவை தேவைகளுக்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
    • பட்டா மாறுதல் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய பயிற்சி வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    நில அளவைத்துறையில் பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும், செம்மைப்படுத்தவும், இணையதள உட்பிரிவு பட்டா மாறுதல் (ஓ.பி.டி.-ஐ.எஸ்.டி.) மனுக்களில் கிராம நிர்வாக அதிகாரிகளை ஈடுபடுத்தி உட்பிரிவு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு இணையதள உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய பயிற்சி வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 1-4-2021 முதல் 31-3-2022 வரை கீழ்க்கண்ட தாலுகா மற்றும் கிராமங்களில் கிரையம் பெற்ற பொதுமக்கள், இணையதள உட்பிரிவு பட்டா மாறுதல் தொடர்பான நிலஅளவை தேவைகளுக்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

    இதன்படி அவினாசி தாலுகாவில் புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம், பட்டம்பாளையம் கிராமம், பல்லடம் தாலுகாவில் பொங்கலூர் கிராமம், தாராபுரம் தாலுகாவில் தாராபுரம் வடக்கு, வீராச்சிமங்கலம், கொளிஞ்சிவாடி, தாராபுரம் தெற்கு, தூரம்பாடி, சின்னமருதூர், காளிபாளையம், கண்ணங்கோவில், சங்கராண்டம்பாளையம், புங்கன்துறை, மாம்பாடி, நாதம்பாளையம், காங்கயம்பாளையம், செலாம்பாளையம், பொம்மநல்லூர், முளையாம்பூண்டி, எரிசனம்பாளையம், புஞ்சைத்தலையூர், நஞ்சைத்தலையூர், சேனாபதிபாளையம், வேலாம்பூண்டி, சுண்டக்காம்பாளையம், அரிக்காரன் வலசு, எடக்கல்பாடி, நாரணாபுரம், தொப்பம்பட்டி, மடத்துப்பாளையம், கொக்கம்பாளையம், மானூர்பாளையம், முத்தையம்பட்டி, பெரியகொமாரபாளையம், கெத்தல்ரேவ், ஜோதியம்பட்டி கிராமங்கள்.

    காங்கயம் தாலுகாவில் தம்மரெட்டிப்பாளையம், வடசின்னாரிபாளையம்,சம்பந்தம்பாளையம், குருக்கம்பாளையம், மரவபாளையம், கீரனூர், மருதுறை, பழையகோட்டை, மங்கலப்பட்டி, பூமாண்டம்வலசு, ராசாத்தாவலசு, உத்தமபாளையம், லக்கமநாயக்கன்பட்டி கிராமங்கள்.

    உடுமலை தாலுகாவில் குறுஞ்சேரி, அந்தியூர், வெனசப்பட்டி, கணபதிபாளையம், வேலூர், வடபூதிநத்தம், தென்பூதிநத்தம், லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னக்குமாரபாளையம், குறிச்சிக்கோட்டை, போகிகவுண்டன்தாசரிபட்டி, ஆலம்பாளையம், குருவப்பநாயக்கனூர், தும்பலப்பட்டி, கல்லாபுரம், சின்னபாப்பனூத்து, பெரியபாப்பனூத்து, உடுக்கம்பாளையம், ராவணாபுரம், வலையபாளையம், எரிசனம்பட்டி, தின்னப்பட்டி, பெரியவாளவாடி, சின்னவாளவாடி, சர்க்கார்புதூர், ரெட்டிப்பாளையம், ஜில்லோபநாயக்கன்பாளையம், அரசூர், கிருஷ்ணாபுரம், தீபாலப்பட்டி, மொடக்குப்பட்டி, பூளவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி, குப்பம்பாளையம், மூங்கில்தொழுவு, கொசவம்பாளையம், வாகைத்தொழுவு, வீதம்பட்டி, புதுப்பாளையம், தொட்டம்பட்டி, பண்ணைக்கிணர் கிராமங்கள்.

    மடத்துக்குளம் தாலுகாவில் கொழுமம், சோழமாதேவி, சர்க்கார் கண்ணாடிபுத்தூர், கொமரலிங்கம் கிழக்கு, சங்கராமநல்லூர் வடக்கு, கடத்தூர், கணியூர் கிராமங்கள். ஊத்துக்குளி தாலுகாவில் அ.பல்லகவுண்டன்பாளையம், ரெட்டிபாளையம், வடமுகம் காங்கயம்பாளையம், பல்லவராயன்பாளையம், அக்ரகார கந்தாங்கண்ணி, சர்க்கார் கந்தாங்கண்ணி, கொமரகவுண்டன்பாளையம், நல்லி கவுண்டன்பாளையம், மேட்டுப்பாளையம், புதுப்பாளையம், நெட்டிச்சிப்பாளையம், கம்மாளக்குட்டை, குன்னத்தூர், செட்டிக்குட்டை, சின்னியம்பாளையம், நவக்காடு, செங்காளிபாளையம், எருமைக்காரம்பாளையம் கிராமங்களை சேர்ந்தவர்கள் இணையதள உட்பிரிவு பட்டா மாறுதல் தொடர்பான நில அளவை தேவைகளுக்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து வீட்டுமனைப் பட்டா வழங்க கோரிக்கை
    • 30-க்கும் மேற்பட்டோர் மனு

    நெல்லை:

    நெல்லை மாவட்ட தாலுகா அலுவகங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அதன்படி நெல்லை தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு வழங்கினர்.

    கொண்டாநகரம் கிராமப்புற தொழி லாளர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு இன்று மனு கொடுக்க வந்தனர். அனைத்து இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்க பொறுப்பாளர் வேலு என்பவர் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக கொண்டாநகரம் பகுதியை சேர்ந்த ஏழை தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், கலெக்டர் உள்ளிட்டவர்களிடம் மனு கொடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே இன்றைய ஜமாபந்தி நிகழ்ச்சியிலேயே விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    பட்டா மாறுதல் செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்த லாரி டிரைவர், குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட முயற்சி செய்ததால் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    மோகனூர் அருகே உள்ள செவந்திப்பட்டி பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். லாரி டிரைவர். இவர் நேற்று தனது மனைவி சுமதி மற்றும் மகளுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்த கிருஷ்ணன், திடீரென 25 ஆண்டுகளாக பட்டா மாறுதல் செய்து தராமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக கூறி கோஷம் எழுப்பினர். இதனால் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கிருஷ்ணனை குடும்பத்துடன் வெளியேற்ற போலீசாருக்கு உத்தரவிட்டனர். இருப்பினும் பட்டா மாறுதல் வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு வந்த அவர்கள் கலெக்டர் அலுவலக பிரதான வாயில் அருகே படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து விசாரணைக்காக ஜீப்பில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே கிருஷ்ணன் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை பழனியப்பன், தாத்தா பெரியண்ணன் ஆகியோர் கடந்த 1982-ம் ஆண்டு ராமனுஜம் வகையறாகளிடம் இருந்து கிரையம் பெற்று, தங்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்து அனுபவித்து வந்த சுமார் 8 ஏக்கர் நிலம், 1986-ம் ஆண்டு நிலஅளவை மேம்பாட்டு திட்டத்தில் குட்டை என மாறுதல் செய்யப்பட்டதால், எங்கள் வாழ்வாதாரம் முடங்கி விட்டது.

    எனது தந்தை பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், பட்டா மாறுதல் செய்யாததால், நாமக்கல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டது. இந்த தீர்ப்புக்கு பிறகும் அதிகாரிகள் எங்கள் பெயரில் நிலங்களை பட்டா மாறுதல் செய்யாமல் காலம் கடத்தி வருகிறார்கள். நானும் பலமுறை மனு கொடுத்தும் பட்டா மாறுதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி செவிந்திப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் என்னிடம் அந்த நிலங்களை எனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய இயலாது என்றும், சிவில் நீதிமன்றத்தில் தாங்கள் பெற்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளதாகவும் கூறினார்.

    நாங்கள் சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று 25 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்த நிலையில் இவ்வழக்கை அரசு அப்பீல் செய்ய உள்ளதால், தொடர்ந்து வழக்கை நடத்த எங்களுக்கு வசதி இல்லை. மேலும் கடன் பிரச்சினையும் நிறைய உள்ளது. இதனால் நான் என் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அதில் கூறி இருந்தார். #tamilnews
    அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டு குடியிருந்தால் பட்டா வழங்க, அரசாணை வெளியிடப்பட்டது. #TNGovernment
    சென்னை:

    அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டு குடியிருந்தால் பட்டா வழங்க, அரசாணை வெளியிடப்பட்டது.

    இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த 11.7.2018 அன்று முதல்-அமைச்சர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக குடியிருப்பதன் மூலம் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பான நெறிமுறைகளை வகுப்பது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.

    அந்த கலந்தாய்வில், சிறப்பு வரைமுறை திட்டத்துக்கான வரைவு நெறிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசுக்கு நில நிர்வாக ஆணையர் பரிந்துரை அனுப்பினார். அந்தப் பரிந்துரையை ஏற்று, ஆக்கிரமிப்புகளை வரைமுறைப்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு வரைமுறை திட்டத்துக்கான நெறிமுறைகளை வகுத்து அரசு ஆணையிடுகிறது.

    அதன்படி, கடந்த 5 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாக உள்ள ஆக்கிரமிப்புகளை வரைமுறை செய்து பட்டா வழங்க கோரிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. அனைத்துவிதமான நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களைத் தவிர்த்துவிட்டு, பிற புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் இந்தத் திட்டத்துக்கு தகுதியுள்ளவர்கள் ஆவர்.

    அவர்கள் ஆக்கிரமித்துள்ள இடத்தை வரைமுறை செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இவர்களின் ஆண்டு வருமான வரம்பு நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களுக்கு குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் என நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஊரகப் பகுதியில் 4 சென்ட், நகர்ப் பகுதியில் இரண்டரை சென்ட், மாநகராட்சிப் பகுதியில் 2 சென்ட் அளவுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கலாம்.

    சென்னை மாநகராட்சி, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சென்னை மாநகர் சூழ் பகுதிகள், இதர மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வரைமுறைப்படுத்துவதற்கு உள்ள தடையாணை தொடரலாம். மற்ற நகரங்களில் தடையாணையை விலக்கி மாவட்ட அளவிலான குழுவின் நடைமுறைகளை பின்பற்றி வரைமுறை செய்யலாம்.

    நீர்நிலை போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அப்புறப்படுத்த வேண்டும். அவர்களை குடிசைமாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்த வேண்டும்.

    மேய்க்கால், மந்தைவெளி, சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிப்போரையும் முடிந்த அளவில் அதே முறையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்த வேண்டும்.

    இந்த சிறப்பு வரைமுறைத் திட்டத்தை 6 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNGovernment
    ×