search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.17.87 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி- கலெக்டர் வழங்கினார்
    X

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்.

    ரூ.17.87 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி- கலெக்டர் வழங்கினார்

    • பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிட்டில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினார்.
    • தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு ரூ. 22 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் இடுபொருட்கள் வழங்கினார்.

    திருத்துறைப்பூண்டி :

    திருத்துறைப்பூண்டி தாலுகா பாமினி ஊராட்சி, அத்திமடை கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாமில் 162 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 87 ஆயிரத்து 10 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். இதற்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இம்முகாமில் பாமினி, தேசிங்குராஜபுரம், கொக்கலாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுமக்கள் துறைகளின் நலதிட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெறுவதற்கு இம்முகாம் மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்த மக்கள் நேர்காணல் முகாமில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிட்டில்; வீடு கட்டுவதற்கான ஆணையும்; வருவாய்துறையின் சார்பில் 13 நபர்களுக்கு உட்பிரிவு பட்டாவும், 11 நபர்களுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையும், 19 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 84 நபர்களுக்கு ரூ.84 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 11 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாவும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் பேட்டரி தெளிப்பானும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 05 நபர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் இடுபொருட்களும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.29 ஆயிரத்து 250 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரமும் என மொத்தம் 162 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 87 ஆயிரத்து 10 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சித்ரா, தாசில்தார் அலெக்ஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×