search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panimaya matha"

    • இந்த திருவிழா நாளை தொடங்கி 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 8-ந்தேதி ஆடம்பர அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது

    நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளத்தில் புனித பனிமய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் குடும்ப விழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறை வட்ட குருகுல முதல்வர் ஆண்டனி சகாய ஆனந்த் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் வினோ செலுக்கஸ் அருளுரை வழங்குகிறார். விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை திருப்பலி, ஜெபமாலை நடைபெறுகிறது.

    4-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட சான்சிலர் அருட்பணியாளர் இம்மானுவேல் ராஜ் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஆண்டனி கிளாரட் அருளுரை வழங்குகிறார். மாலை 5 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. இரவு 9 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா நடைபெறுகிறது.

    6-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. இதற்கு கனடா குருத்துவ கல்லூரி பேராசிரியர் அருட்பணியாளர் மார்சிலின் டிபோரஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஜோசப் காலின்ஸ் அருளுரை வழங்குகிறார். இரவு 9 மணிக்கு புனித வளனார் தேர்பவனி நடக்கிறது.

    7-ந்தேதி காலை 6.45 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி, அருளுரை வழங்குகிறார். 10 மணிக்கு புனித வளனார் தேர்பவனி நடக்கிறது. இரவு 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர் பவனி நடைபெறுகிறது.

    8-ந்தேதி காலை 7 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் லியோன் ஹென்சன் அருளுரை வழங்குகிறார். 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி, மாலை 5 மணிக்கு திருக்கடையூர் டி.எஸ்.எம். உமாசங்கரின் நாதஸ்வர கச்சேரி ஆகியவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அருள்ஜோ மற்றும் பங்கு நிர்வாகிகள், பங்குமக்கள், அருட்சகோதரிகள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • தூய பனிமய மாதா சொரூபம் தூத்துக்குடிக்கு வந்ததன் 250-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது.
    • இதுவரை 15 முறை தங்கத் தேர் பவனி நடந்து உள்ளது.

    தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய பனிமய மாதா பேராலயத்தில் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி (சனிக்கிழமை) அன்று தங்கத் தேர் பவனி நடைபெறும் என பிஷப் ஸ்டீபன் தெரிவித்தார்.

    தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பெருவிழாவின் போது 10-ம் நாள் இரவு 9 மணிக்கு மேல் ஆலய வளாகத்திலும், 11-ம் நாளான ஆகஸ்டு 5-ந்தேதி இரவு 7 மணிக்கு மேல் நகர வீதிகளிலும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெற்று வருகிறது.

    அதே நேரத்தில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் ஆண்டுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் நினைவு ஆண்டுகளில் மட்டும் தங்கத் தேர் பவனி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 முறை தங்கத் தேர் பவனி நடந்து உள்ளது. முதல் முறையாக 2.2.1806-ல் தூய பனிமய மாதா சொரூபம் தூத்துக்குடிக்கு வந்ததன் 250-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. தொடர்ந்து 1872, 1879, 1895, 1905, 1908, 1926, 1947, 1955, 1964, 1977, 1982, 2000, 2007 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் தங்கத்தேர் பவனி நடந்து உள்ளது.

    15-வது முறையாக கடந்த 2013-ம் ஆண்டு பனிமய மாதா பெயரில் புதிய ஆலயம் கட்டப்பட்டதன் 300-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. அடுத்த ஆண்டு (2023) 16-வது முறையாக தூத்துக்குடி நகரில் பனிமய மாதாவின் தங்கத்தேர் பவனி நடக்கிறது. இதனால் பக்தர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    • அன்னையின் சப்பரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது.
    • சாதி, மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்தனர்.

    தூத்துக்குடி பனிமய மாதாவின் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 440-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று அன்னையின் சப்பர பவனி நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி, 5.30 மணிக்கு 2-ம் திருப்பலி, 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலி நடந்தது.

    9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்காக மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு உபகாரிகளுக்காக பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு நன்றி திருப்பலி நடந்தது. மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்டம் பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடந்தது. இதைத்தொடர்ந்து நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடந்தது. .

    இதையொட்டி ஆலயத்தை சுற்றிலும் மக்கள் வெள்ளம் போல் திரண்டு இருந்தனர். ஏராளமானவர்கள் சப்பரத்தை தூக்கி வந்தனர். பவனி வந்த அன்னையை வரவேற்கும் வகையில் இருபுறமும் கட்டிடங்களில் பூக்களை தூவியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக பிரார்த்தனை செய்தனர். அன்னையின் சப்பரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது.

    சாதி, மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்தனர். சப்பரம் கோவிலின் பின்புறமாக பெரியகடை தெரு, கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு வழியாக ஆலய வளாகத்தை வந்தடைந்தது. விழாவை முன்னிட்டு நேற்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

    • இன்று அன்னையின் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
    • நாளை 6-ந்தேதி கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 440-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்காத நிலையில், இந்த ஆண்டு வழக்கம் போல் அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.

    விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது. 6-ம் திருவிழாவான கடந்த 31-ந் தேதி மாபெரும் நற்கருணை பவனி நடைபெற்றது.

    இதில் கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பாகுபாடின்றி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    10-ம் திருவிழாவான நேற்று இரவு 7 மணிக்கு ஆயர் ஸ்டீபன் ஆன்டகை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. 9 மணிக்கு அன்னையின் திருஉருவ பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவில் இன்று அன்னையின் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி, 5.30 மணிக்கு 2-ம் திருப்பலியை தொடர்ந்து 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    இந்த கூட்டுத் திருப்பலியில் 50-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    தொடர்ந்து காலை 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்காக கூட்டுத்திருப்பலியும், 10 மணிக்கு முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்காக கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    பிற்பகல் 12 மணிக்கு தூத்துக்குடி மண்ணில் பிறந்து பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் அருட்தந்தையர்கள், துறவிகள், அருட் சகோதரர்கள், அருட் சகோதரிகள் கலந்து கொள்ளும் சிறப்பு நன்றி திருப்பலி நடந்தது.

    இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடைபெறுகிறது.

    இன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருஉருவ சப்பர பவனி நடக்கிறது. அப்போது அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தூய பனிமய மாதா நகரில் உள்ள முக்கிய வீதிகளில் பவனியாக வருவார்.

    இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இரவு 10 மணிக்கு மரிய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல் மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும்.

    நாளை 6-ந்தேதி காலை 5 மணிக்கு ஆலய உபகாரிகளுக்காகவும், பெருவிழா நன்கொடையாளர்களுக்காகவும் சிறப்பு நன்றி திருப்பலி நடைபெறும். 6.30 மணிக்கு 2-ம் திருப்பலி முடிந்ததும் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு பனிமய மாதா ஆலயம் வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகிறது. மேலும் திருவிழாவால் தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    திருவிழாவை முன்னிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • இன்று இரவு 7 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் சப்பர பவனி நடக்கிறது.
    • நாளை இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

    தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் சாதி, மதம், இன பாகுபாடின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு 440-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் செபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடந்து வந்தன.

    விழாவை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் அன்னையின் சப்பர பவனி நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பனிமய மாதா ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் வக்கில் வாரியார் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் வழிபட்டு வருகின்றனர். இந்த ஆலய திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று பாரதிய ஜனதா கட்சியினர் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பனிமய மாதா ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.

    நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் வக்கில் வாரியார், சிவராமன், இளைஞரணி மாவட்ட தலைவர் விக்னேஷ், தொழில் பிரிவு மாநில செயலாளர் கொம்பன் பாஸ்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 4-ந்தேதி பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.
    • 5-ந்தேதி பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.

    உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து விழா நாட்களில் செபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடந்து வந்தன. 6-ம் திருநாளான நேற்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2-ம் திருப்பலி, 6.30 மணிக்கு 3-ம் திருப்பலி நடந்தது. 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் புதுநன்மை திருப்பலி நடந்தது. காலை 10 மணிக்கு மலையாள திருப்பலி, 11.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் மறைமாவட்ட துறவியருக்கான சிறப்பு திருப்பலியும், மாலை 4 மணிக்கு ஏழுகடல் துறை, கடலோர பங்குகளின் இறைமக்களுக்கான திருப்பலியும் நடந்தது. 6.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் நற்கருணை பவனி நடந்தது.

    அப்போது அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிஷப் ஸ்டீபன் நற்கருணை பேழையை கையில் பிடித்தபடி வந்தார்.

    தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நற்கருணை ஆசீர் நடந்தது. நிகழ்ச்சியில் பங்குதந்தை குமார்ராஜா மற்றும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 4-ந்தேதி 10-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

    • இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
    • தினமும் திருப்பலி, ஜெபமாலை மறையுரையுடன் நற்கருனை ஆசீரும் நடக்கிறது.

    தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 137-வது திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணி முதல் திருப்பலி, திருயாத்திரை திருப்பலி நடந்தது. மாலையில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனாக தத்து கொடியை ஆலயத்தை சுற்றி வந்து காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

    பின்பு நற்கருணை ஆசீருடன் கொடியை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பங்குதந்தைகள் நெல்சன் பால்ராஜ், ரூபன், பீட்டர் பாஸ்டியான் ஆகியோர் அர்ச்சித்து தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் கொடியை ஏற்றி வைத்தார்.

    இதில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலி, மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் நற்கருனை ஆசீரும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான வருகிற 4-ந் தேதி காலையில் திருப்பலி, திருயாத்திரை, மாலையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் ஜெபமாலை, மன்றாட்டு மாலை நடக்கிறது. அதனை தொடர்ந்து மலையாள திருப்பலி நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 5-ந் தேதி கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெரால்ட் ரவி, உதவி பங்கு தந்தை சிபுஜோசப், தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்து வருகின்றனர்.

    • திருவிழா இன்று தொடங்கி ஆகஸ்ட் 5-ந்தேதி நிறைவுபெறும்.
    • 4-ந்தேதி அதிசய பனிமாதா அன்னையின் அலங்காரத் தேர்ப்பவனி நடக்கிறது.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய ஸ்தலங்களில் சிறப்பு பெற்ற திருத்தலம் தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயமாகும். இந்த ஆலயத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5-ந் தேதி நிறைவுபெறும். அதன்படி இன்று (27-ந் தேதி) மாலை 6.30 மணிக்கு புனித கொடியேற்றம் நடைபெறுகிறது. மாதா சொரூபம் பொறிக்கப்பட்ட புனித கொடியை அருட் தந்தையர்கள் ஜெபம் செய்து அர்ச்சித்தபின்னர் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் கொடியேற்றுகிறார்.

    அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும் மாலை மறையுரையும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 2-ந்தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு பாளையங்கோட்டை பேரருட்திரு. ஜோமிக்ஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. ஆகஸ்டு 3-ந் தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு பேரருட்திரு - இளங்கே தலைமையில் முனைவர் ஜெரால்டு.எஸ்.ரவி மறையுரையுடன் புதுநன்மை திருப்பலி நடைபெறுகிறது.

    இத்திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நற்கருணை சிற்றாலயம் திறப்பு மற்றும் நற்கருணைப் பவனியும் அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 4-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7.30மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் உறுதிப்பூசுதல் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு பாளை மறைவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் இரக்கத்தின் ஆண்டவர் கெபி திறப்பு விழா மற்றும் சிறப்பு நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு சிபு ஜோசப் தலைமையில் மலையாளத்திருப்பலி நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்காரத் தேர்ப்பவனியும் நடைபெறுகிறது. ஆகஸ்டு 5-ந் தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.15 மணிக்கு பாளை மறைவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி காலை7.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடைபெறும் மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீருடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஆகஸ்டு 6-ந் தேதி முதல் சனி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்கு தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை சிபு ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • 5-ந்தேதி இரவு 7 மணிக்கு சப்பரத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

    உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ந் தேதி தொடங்கி, ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த ஆண்டு ஆலயத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மாலையில் கொடிபவனி நடந்தது.

    நேற்று காலையில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2-ம் திருப்பலி நடந்தது. காலை 7 மணிக்கு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னையின் கொடி ஆலயத்தை சுற்றி மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் காலை 8.50 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த இழுவை கப்பல் மூலம் ஒலி எழுப்பப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் நேர்ச்சையாக வைத்த பால், பழம் உள்ளிட்டவற்றை மக்களுக்கு வழங்கினர்.

    விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி முதல்வர் ரூபஸ் பர்னான்டோ தலைமையில் அன்னைக்கு பொன்கிரீடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் சப்பரத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

    • 5-ந்தேதி மாலை 5 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.
    • 5-ந்தேதி இரவு 7 மணிக்கு அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

    உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கன மக்கள் கலந்து கொள்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது.

    இந்த ஆண்டு கோவிலில் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு திருப்பலி நடந்தது. 6 மணிக்கு பாதிரியார் லெரின் டிரோஸ் தலைமையில் திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து எளியோருக்கும், திருவழிபாட்டுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் உரிய பொருட்கள் உள்ளிட்ட காணிக்கைகள் மற்றும் கொடி பவனி நடந்தது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2-ம் திருப்பலி, 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி, கொடியேற்றம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி முதல்வர் ரூபஸ் பர்னான்டோ தலைமையில் அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி 6-ம் திருவிழா அன்று காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் புதுநன்மை திருப்பலி, 11.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் மறைமாவட்ட துறவியருக்கான திருப்பலி நடக்கிறது. மாலை 6.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் நற்கருணை பவனி நடக்கிறது.

    அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ந் தேதி 10-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

    • இந்த ஆண்டு திருவிழா வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • இந்த திருவிழா ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது.

    தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழா நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, ஆலயம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சுகாதார பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்ய மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழா நாட்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க வேண்டும்.

    தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு இடையூறு இன்றியும், பொதுமக்களுக்கு சிரமமின்றியும் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிறுத்தப்பட்டு உள்ளது. திருவிழாநாட்களில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலும், பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்திடவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.மேலும் திருவிழா கடைகளில் வைக்கப்பட்டுள்ள திண்பண்டங்கள், உணவுகள் தரமானதாகவும், பாதுகாப்பான முறையில் வைத்திருப்பதையும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.

    இந்த ஆண்டு திருவிழாவில் முறைப்படி கொடியேற்றத்துடன் எல்லா ஆராதனைகளும், தேர்பவனி, கொடிபவனி, நற்கருணைபவனி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும். மக்கள் அனைவரும் பனிமய மாதா அன்னையை நேரடியாக தரிசிக்கலாம். அதே போன்று திருவிழா நாட்களில் வழக்கமாக பேராயலத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகளும், பொருட்காட்சியும் இந்த ஆண்டு நடைபெறும்.

    வருகிற 26-ந் தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது. அடுத்த 10 நாட்களும் பேராலயத்தின் உள்ளே வழக்கமாக காலையில் நடைபெறும் திருப்பயண திருப்பலிகள், மாலையில் நடைபெறும் அருள் உரை, அருள் இரக்கஆசீர், இரவில் நடைபெறும் நற்கருணைஆசிர் ஆகியவை நடைபெறும். திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி, அரசின் விதிகளை பின்பற்றி விழாவை கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தை சுற்றி உள்ள தெருக்கள், சாலைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய், சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பனிமய மாதா திருவிழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அந்த பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாத வகையில் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து எட்டயபுரம் ரோடு கலைஞர் அரங்கம் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், குறிஞ்சி நகர் டவர் சாலை உள்ளிட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தார். வருங்காலங்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    ×