search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panimaya matha"

    • 4-ந்தேதி பரிசுத்த அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.
    • 5-ந்தேதி ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 138-வது ஆண்டு திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித மிக்கேல் அதிதூதர் சப்பர பவனி நடந்தது.

    தொடர்ந்து பரிசுத்த அதிசய பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில், ஆலய தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் ஊர் பெரியவர்கள் ஆலயத்தில் இருந்து எடுத்து வந்தனர்.

    பின்னர் புனித கொடியை ஆயர் ஜெபம் செய்து அர்ச்சித்தவுடன், தர்மகர்த்தா ஆலய கொடிமரத்தில் கொடியேற்றினார். தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது. வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. ஜெபமாலை வடிவிலான பலூனும் பறக்கவிடப்பட்டது. தொடர்ந்து ஆயர் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது.

    விழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம், குருவானவர்கள் ஜெகதீஷ், பீட்டர் பாஸ்டின், ரூபன், நெல்சன் பால்ராஜ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரை திருப்பலி, மாலையில் நற்கருணை ஆசீர், மறையுரை நடக்கிறது. 7-ம் திருநாளான வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) மாதா காட்சி கொடுத்த மலைக்கெபியில் திருப்பலி நடக்கிறது. 8-ம் திருநாளான 3-ந்தேதி (வியாழக்கிழமை) காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் தலைமையில், மாணவ- மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது.

    9-ம் திருநாளான 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மலையாள திருப்பலி, இரவு 12 மணிக்கு தமிழ் திருப்பலியை தொடர்ந்து பரிசுத்த அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.

    10-ம் திருநாளான 5-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5.15 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில், பங்குத்தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்குத்தந்தை ஜான் ரோஸ், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    • விழாவானது 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 4-ந்தேதி அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது.

    தென்தாமரைக்குளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா நேற்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவானது அடுத்த மாதம் 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு திருக்கொடி ஏற்றம், கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதற்கு கன்னியாகுமரி வட்டார முதல்வர் அருட்பணி எஸ்.பி.ஜான்சன் தலைமை தாங்கினார். கோட்டாறு மறை மாவட்ட ஆற்றுப்படுத்துதல் பணி குழுவை சேர்ந்த அருட்பணி பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரை நிகழ்த்தினார். இரவு 8 மணிக்கு சிறப்பு இன்னிசைக் கதம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    2-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ் மாலை, 6.45 மணிக்கு கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது. இதற்கு புன்னைநகர் பங்குத்தந்தை சதீஸ்குமார் ஜாய் தலைமை தாங்குகிறார். தேவசகாயம் மவுண்ட் பங்குத்தந்தை மைக்கேல் ஜார்ஜ் பிரைட் மறையுரை நிகழ்த்துகிறார். இரவு 9 மணிக்கு அன்பியங்களின் கலை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் தினமும் திருப்பிலி, ஜெபமாலை, புகழ்மாலை நடக்கிறது.

    9-ம் நாளான 4-ந் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடக்கிறது. இதில் கன்னியாகுமரி காசா கிளாரட் அருட்பணி டன்ஸ்டன் தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு சிறப்பு திருப்புகழ் மாலை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட செயலர் மரிய கிளாட்ஸ்டன் தலைமை தாங்குகிறார். சென்னை சட்டப்பணி எம்.சி.ராஜன் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும் நடைபெறுகிறது.

    10-ம் நாளான 5-ந் தேதி காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டத் திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜாண் ரூபஸ் தலைமை தாங்குகிறார். கிறிஸ்தவ வாழ்வு பணி குழு செயலர் எட்வின் வின்சென்ட் மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம், நற்கருண ஆசீர், இரவு 7 மணிக்கு இன்னிசை விருந்தும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு இறை மக்கள், பங்குப் பேரவையினர், அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    • திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • 5-ந் தேதி அதிசயபனிமாதா அன்னையின் தேர்ப்பவனி நடக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 138-வது ஆண்டு திருவிழா நாளை (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    விழா நாட்களில் தினமும் காலை 7.30 மணிக்கு திரியாத்திரை திருப்பலியும், மாலை ஆராதனை, மறையுரை நடைபெறுகிறது. வருகிற 2-ந் தேதி 7-ம் திருவிழா அன்று காலை 7.30 மணிக்கு மாதா காட்சி கொடுத்த மலைகெபியில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெறுகின்ற திருப்பலியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதுநன்மை வழங்குகிறார். மாலை 6.30 மணிக்கு ஆயர் தலைமையில் நற்கருணைப்பவனி நடைபெறுகிறது.

    4-ந் தேதி காலை 5.15, 7.30, 9.30, 11.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது. 5-ந் தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது.

    அன்று காலை 5.15 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி, பிற்பகல் 2 மணிக்கு அதிசயபனிமாதா அன்னையின் தேர்ப்பவனி நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை 7.30 மணிக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் நன்றி திருப்பலியும், காலை 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை பேராலய தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்குத்தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்குத்தந்தை வளன் அரசு மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    • அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடியை பக்தர்கள் பவனியாக எடுத்துச் சென்றனர்.
    • நேர்ச்சையாக கொடிகளை காணிக்கை செலுத்துவோர் கொடிகளை தட்டுகளில் ஏந்தி சென்றனர்.

    உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம். அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு திருப்பலி நடந்தது. 6 மணிக்கு மறைமாவட்ட முதன்மை செயலாளர் செல்வம் தலைமையில் திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து கொடிபவனி தொடங்கியது. ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் இன்று (புதன்கிழமை) காலை ஏற்றப்படவுள்ள அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடியை பக்தர்கள் பவனியாக எடுத்துச் சென்றனர்.

    மேலும், நேர்ச்சையாக கொடிகளை காணிக்கை செலுத்துவோர் கொடிகளை தட்டுகளில் ஏந்தி சென்றனர். அதுபோன்று பக்தர்கள் கல்வி உபகரணங்கள், ஏழைகளுக்கு வழங்கக்கூடிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காணிக்கை பொருட்களையும் பவனியாக கொண்டு சென்றனர். இந்த கொடி பவனி செயின்ட் பீட்டர் தெரு, மணல் தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக, தூய பனிமய மாதா ஆலயத்தை வந்தடைந்தது. அங்கு அருட்தந்தையர்கள் கொடிகள் மற்றும் காணிக்கைகளை பெற்றுக் கொண்டு மக்களை ஆசீர்வதித்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை கொடியேற்றம் நடக்கிறது. தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் கூட்டுத் திருப்பலியும், தொடர்ந்து கொடியேற்றமும் நடக்கிறது. இந்த ஆண்டு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தங்கத் தேர் பவனி நடக்கிறது. 16-வது முறையாக இந்த ஆண்டு தங்கத் தேர் பவனி நடப்பதால் திருவிழா நாட்களில் தினமும் ஒரு பிஷப் பங்கேற்று சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகின்றனர். விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை குமார்ராஜா, உதவிப் பங்குத்தந்தை சைமன் ஆல்டஸ் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்து உள்ளனர்.

    • இந்த தங்கத் தேர் சுமார் 216 ஆண்டுகள் பழமையானதாகும்.
    • தங்கத்தேர் பவனி ஆகஸ்ட் 5-ந்தேதி நடக்கிறது.

    தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய தங்கத் தேர் திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது என்று பேராலய அதிபரும், பங்குத்தந்தையுமான குமார் ராஜா தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கத்தேர் பவனி நடக்கிறது.

    இந்த பேராலயத்தின் 441-ஆம் ஆண்டு திருவிழா மற்றும் 16-வது தங்கத் தேர் திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும் நடக்கிறது. 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. 8.30 மணியளவில் பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்படுகிறது. மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்கத்தேர் பவனி வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி நடக்கிறது. விழாவையொட்டி அதிகாலை 5.15 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலியும், காலை 7 மணிக்கு தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. தங்க தேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினாய்க் பிலிப் நேரி நடத்துகிறார். அதுபோல் தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஜெபம் செய்து தொடங்கி வைக்கிறார்.

    இதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு தங்கத் தேர் நன்றி திருப்பலியும், மாலை 4 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது. விழாவில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், பங்குத்தந்தைகள் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர். மேலும் இந்த விழாவில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த தங்கத் தேர் சுமார் 216 ஆண்டுகள் பழமையானதாகும். 53 அடி உயரம் கொண்ட இந்த தேரை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழமையான தேர் என்பதால் 80 சதவீதம் வரை புதிதாக தேக்குமரக்கட்டைகள் கொண்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இத்தேருக்கு, ஜப்பான் நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட தங்க தாள்கள், அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட 9 ஆயிரம் வைர கற்கள் ஆகியவை கொண்டு அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத்தேர் புதுப்பிக்கும் பணி மற்றும் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் இந்த திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேராலய பங்கு பேரவை கமிட்டி துணைத்தலைவர் ஹாட்லி, பொருளாளர் ஜாய் ரோச், செயலர் கென்னடி ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஆலய திருவிழா 26-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெறும்.
    • ஆலய வளாகத்தில் தங்கத்தேர் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    முத்துநகரான தூத்துக்குடி மாநகரில் அமைந்து உள்ள பனிமயமாதா ஆலயம் உலக பிரசித்தி பெற்றது ஆகும். சாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் வழிபடும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சமூக நல்லிணக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆலய திருவிழா ஜூலை மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 11 நாட்கள் நடைபெறும்.

    இதில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள். விழாவின் சிகர நாளான ஆகஸ்டு 5-ந்தேதி நடைபெறும் அன்னையின் தங்கத்தேர் பவனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள். சில ஆண்டுகளில் முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கும் வகையில், ஆலய திருவிழாவின் சிகர நாளில் அன்னையின் தங்கத்தேரோட்டம் நடத்தப்படும்.

    அதன்படி, தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கத்தேரோட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக ஆலய வளாகத்தில் தங்கத்தேர் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று பனிமயமாதாவுக்கு தங்கமுலாம் பூசும் பணிகளும் நடக்கிறது.

    இதுகுறித்து தூத்துக்குடி பனிமயமாதா ஆலய பங்குதந்தை குமார் ராஜா கூறியது:-

    தூத்துக்குடியில் கடந்த 468 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம், பரதர்குல மக்களின் சரித்திர வரலாற்றில் முக்கிய இடம் பிடித்து உள்ளது. அது பரதகுலத்தாய் என்று அழைக்கப்படும் சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா, தூத்துக்குடி மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட காலம் ஆகும். கடந்த 1532 முதல் 1537-ம் ஆண்டு வரையிலும் முத்துக்குளித்துறையின் பரதவர் இனத்தினர் பெருமளவில் கத்தோலிக்க திருமறையை தழுவினர். தொடர்ந்து 1538-ம் ஆண்டு புனித பேதுரு ஆலயம் முதலாவது பங்கு ஆலயமாக உருவானது. பேதுரு கொன்சால்வஸ் முதல் பங்குதந்தையாக பணியாற்றினார்.

    1542-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றி உள்ள கடற்கரை கிராம மக்களால் 'ஞானதகப்பன்' என்று அழைக்கப்படும் புனித பிரான்சிஸ் சவேரியார் இங்கு வந்து மக்களுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தை போதித்து அவர்களை வேதத்தில் உறுதிப்படுத்தினார். இப்பகுதி மக்களுக்காக பிலிப்பைன்சில் உள்ள மணிலா தீவில் கன்னியர் மடத்தில் இருந்த அன்னையின் சொரூபத்தை புனித பிரான்சிஸ் சவேரியார் கேட்டார். அவர் 'இதோ உங்களது தாய்' என்று மக்களுக்கு பனிமயமாதாவை சுட்டிக் காண்பித்தார்.

    அன்னையின் சொரூபம் கடந்த 9-6-1555 அன்று சந்தலேனா என்ற கப்பல் மூலம் தூத்துக்குடியை வந்தடைந்தது. இந்த தாய் வேம்பார், வைப்பார், தூத்துக்குடி, புன்னக்காயல், வீரபாண்டியன்பட்டினம், திருச்செந்தூர், மணப்பாடு ஆகிய 7 பெரிய கடற்கரை கிராமங்களின் தாயாக விளங்கியதால், 'ஏழுகடல் துறையின் ஏக அடைக்கலத்தாய்' என்று அழைக்கப்படுகிறார்.

    1582-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி இரக்கத்தின் மாதாவின் ஆலயம் கொச்சி பிஷப் தவோரா ஆண்டகையால் கிரகோப் தெருவில் திறக்கப்பட்டது. இந்த ஆலயம் நாளடைவில் செயிண்ட் பவுல் ஆலயம் என்றும், பின்னர் பனிமயமாதா ஆலயம் என்றும் அழைக்கப்பட்டது. 1658-ம் ஆண்டு டச்சுக்காரர்கள் தூத்துக்குடியை கைப்பற்றினார்கள். கத்தோலிக்கர்களை துன்புறுத்தி ஆலயங்களை வாணிப சாவடிகளாகவும், ஆயுத கிடங்குகளாகவும் மாற்றினார்கள்.

    தூத்துக்குடி மக்கள் பரிசுத்த பனிமயமாதாவின் சொரூபத்தை பல சிறிய ஊர்களுக்கு எடுத்து சென்று மறைத்து வைத்தனர். டச்சுக்காரர்களின் தொல்லை ஓய்ந்ததும் சொரூபத்தை மீண்டும் தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர்.

    கடந்த 1707-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி திருமந்திரநகராம் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தாக்கிய கொடிய கோடை மின்னலை தாய் தன் மீது தாங்கிக்கொண்டு மக்களை காத்தருளினார். சேதாரம் ஏதும் இன்றி அன்னையின் திருச்சொரூபம் கருநீல வண்ணமானது. அன்னையின் திருவுருவம் மீது படிந்து இருந்த கறைகளால் கலக்கமுற்ற இறைமக்கள் தொடர்ந்து 40 நாட்கள் பரிகார பக்தி முயற்சிகளில் ஈடுபட்டனர்.

    இறுதிநாள் செபத்தில் கலந்துகொண்ட ஏசுசபை மாநில தலைவர், முடிவில் பக்தியோடு தாயின் மேனியை வெண்ணிற துணியால் துடைக்க, அற்புதமாக கறைகள் அகன்று முற்றிலும் வடுக்களற்ற, முன்பைவிட பிரகாசமாக அன்னையின் திருச்சொரூபம் தெய்வீக களையோடு சாந்தமே உருவான அருள்பாலிக்கும் தாய்மை உருவை பெற்றது.

    அதன்பிறகு தற்போது அமைந்துள்ள பெரிய கோவிலுக்கு கடந்த 1712-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி விஜிலியுஸ் மான்சியால் அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு 1713-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அன்னையின் புதிய ஆலயம் திறக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு காலத்தில் ஆலய புதிய கட்டிடங்கள் மாற்றம் செய்யப்பட்டன. இதனால் தற்போது ஆலயத்தின் தோற்றம் ஒருபுறத்தில் கோத்திக் கோபுரமாகவும், மறுபுறம் தேர்வடிவ கோபுரமாகவும், முகப்பு, முன்மண்டபங்கள் வேறு பாணி என்று பல்வேறு கட்டிடக்கலை பாணிகளை உள்ளடக்கி பறைசாற்றும் கூட்டு கட்டிடக்கலை கண்காட்சி சின்னமாக ஆலயம் நிமிர்ந்து நிற்கிறது.

    1834-ம் ஆண்டு சூசைநாதர் முயற்சியால் அன்னையின் ஆலயத்தில் வெண்சலவை கல்பீடம் அமைக்கப்பட்டது. 1895-ம் ஆண்டு இந்த பேராலயம் மயிலை மறைமாவட்ட ஆளுகையின் கீழ் ஒப்படைக்கப்பட்டது. 1922-ம் ஆண்டு மாதா கோவில் கோபுரம் கட்டப்பட்டது. 1923-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கிய தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆளுகையின் கீழ் 1930-ம் ஆண்டு பனிமயமாதா ஆலயம் ஒப்படைக்கப்பட்டது.

    1960-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி தூத்துக்குடி ஆயர் தாமஸ் பர்னாந்து, பங்குத்தந்தை எஸ்.எம்.தல்மெய்தா முயற்சியாலும், பரிந்துரையாலும் உரோமை மேரி மேஜர் பேராலயத்துடன் இணைப்பு பேராலயமாக திருத்தந்தை 23-ம் அருளப்பரால் பிரகடனப்படுத்தப்பட்டது. 30-7-1982 அன்று தூய பனிமயமாதா ஆலயமானது பேராலயம் என்ற சிறப்பு நிலைக்கு உயர்த்தப்பட்டது.

    கடந்த 1806-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முதன் முதலாக தங்கத்தேரில் அன்னை நகரில் பவனி வந்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக முக்கிய விழாக்களை மையமாக கொண்டு தங்கத்தேரோட்டம் நடந்தது. பனிமயமாதா ஆலயத்துக்கு சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர். அன்னையின் திருவிழா ஆண்டுதோறும் சமய நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த ஆண்டு தங்கத்தேரோட்டம் நடக்கிறது. இது 16-வது முறையாக நடைபெற உள்ள தங்கத்தேரோட்டம் ஆகும். அன்று பனிமயமாதா தங்கத்தேரில் எழுந்தருளி நகரை வலம் வருகிறார். இதனை முன்னிட்டு தங்கத்தேரை எழில்மிகு கலைநயத்துடன் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பனிமய மாதாவின் தங்கத்தேர் :

    தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் தங்கத்தேரோட்டம் ஆலயத்தின் முக்கிய நிகழ்வுகளை பறைசாற்றும் வகையில் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 2-2-1806-ம் ஆண்டு பனிமய மாதாவின் அற்புத சொரூபம் தூத்துக்குடி வந்தடைந்த 250-வது ஆண்டு நிறைவாக முதல்முறையாக தங்கத்தேரோட்டம் நடந்தது. 1872, 1879, 1895-ம் ஆண்டு முறையே 2, 3, 4-வது தங்கத்தேரோட்டம் வளமையான தேரோட்டமாக நடந்தது.

    1905-ம் ஆண்டு முதலாவது தங்கத்தேரின் 100-வது ஆண்டின் நினைவாக 5-வது தங்கத்தேரோட்டம் நடந்தது. அதன்பிறகு 1908, 1926, 1947-ம் ஆண்டுகளில் 6, 7, 8-வது தங்கத்தேரோட்டம் நடந்தது. 1955-ம் ஆண்டு பனிமயமாதாவின் அற்புத சொரூபம் திருமந்திரநகருக்கு வந்தடைந்த 400-ம் ஜூபிளி ஆண்டு நினைவாக 9-வது தங்கத்தேரோட்டம் நடந்தது.

    1964-ம் ஆண்டு தாமஸ் பர்னாந்து ஆண்டகை குருத்துவ வெள்ளி விழா நினைவாக 10-வது தங்கத்தேரோட்டமும், 1977-ம் ஆண்டு பாத்திமாபதியில் நம் தேவ அன்னை காட்சி கொடுத்த 60-ம் ஆண்டு நினைவாக 11-வது தங்கத்தேரோட்டமும், 1982-ம் ஆண்டு இரக்கத்தின் மாதா கோவில் கட்டப்பட்ட 400-ம் ஆண்டு நினைவாக 12-வது தங்கத்தேரோட்டமும், 2000-ம் ஆண்டு ஏசுகிறிஸ்து பிறந்த 2000-ம் ஆண்டு நினைவாக 13-வது தங்கத்தேரோட்டமும், 2007-ம் ஆண்டு முதல் தங்கத்தேரின் 200-வது ஆண்டு நிறைவு, பசலிக்கா பிரகடனத்தின் 25-வது ஆண்டு நிறைவு மற்றும் இரக்கத்தின் மாதா கோவில் கட்டப்பட்ட 425-வது ஆண்டு நினைவாக 14-வது தங்கத்தேரோட்டமும் நடந்தது. 2013-ம் ஆண்டு திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா பேராலய 431-ம் ஆண்டு திருவிழா மற்றும் பேராலயம் எழுப்பப்பட்டதன் 300-ம் ஆண்டு நினைவாக 15-வது தங்கத்தேரோட்டம் நடந்தது.

    53 அடி உயர தங்கத்தேர் :

    இந்த ஆண்டு தேரோட்டத்துக்கான தங்கத்தேரின் ஒவ்வொரு வடிவமைப்பும் பல வரலாறுகளை கூறும் வகையில் அமைந்து உள்ளது. அன்னையின் மங்கள மாலையான ஜெபமாலையை நினைவுகூரும் வகையில் 53 அடி உயரத்தில் தங்கத்தேர் அமைக்கப்பட்டு உள்ளது.

    பொதுவாக மற்ற ஆலயங்களில் நடைபெறும் தேரோட்டத்தில் பீடத்தில் உள்ள சொரூபத்தை தேரில் எடுத்து செல்வது கிடையாது. ஆனால் பனிமயமாதா ஆலயத்தில் அன்னையின் சொரூபம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனியாக கொண்டு வரப்படுகிறது. இந்த தேரின் மேல் பகுதியில் ஒரு நட்சத்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. இது அன்னை கடலின் நட்சத்திரம் என்பதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

    அன்னையை சுற்றிலும் 9 கோள்கள் இருப்பதை குறிக்கும் வகையில், அன்னையை சுற்றி 9 மீன்கள் உள்ளன. மேலும் அன்னைக்கு தங்க கிரீடமும் அணிவிக்கப்பட்டு உள்ளது. பனிமயமாதா பூமி மற்றும் ஆகாயத்தின் ராணி என்பதை குறிக்கும் வகையில் இந்த கிரீடம் அமைக்கப்பட்டு உள்ளது. 12 அப்போஸ்தலர்களை குறிக்கும் விதத்தில் தேரில் 12 தூண்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 6 சக்கரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    தங்கத்தேரின் 4 மூலைகளிலும் 4 கிளிகள் உள்ளன. அதேபோன்று மீனவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மனித தலையும், மீன் உடலும் கொண்ட கடல்கன்னிகளின் உருவமும், 2 காளைகளும் பொருத்தப்பட்டு உள்ளன. தேர் முழுவதும் பல்வேறு ரத்தின கற்களாலும், சிற்பங்களாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. இந்த தங்கத்தேரில் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி பனிமய அன்னை தூத்துக்குடி நகரில் வலம் வருகிறார். அவரை கண்டு அருளாசி பெறுவதற்கு எண்ணற்ற மக்கள் காத்திருக்கின்றனர்.

    • 4-ந்தேதி ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும்.
    • 5-ந்தேதி அன்னையின் தங்கத் தேர் பவனி நடக்கிறது.

    தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 5-ந் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது.

    முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு 16-வது தங்கத்தேர் பவனி நடக்கிறது.

    இந்த ஆண்டு பேராலயத்தின் 441-வது ஆண்டு பெருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைமுன்னிட்டு அன்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும் நடக்கிறது. காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது. 8.30 மணியளவில் பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்படுகிறது. பகல் 12 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது. மேலும், தினமும் இளையோர், முதியோர், ஆதரவற்றோர், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், கப்பல் மாலுமிகள், உப்பு தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான சிறப்பு திருப்பலிகள் நடக்கின்றது.

    இந்த ஆண்டு தங்கத்தேர் திருவிழா என்பதால் விழாவில் தினமும் ஒரு பிஷப் பங்கேற்கின்றனர். அதன்படி திருவிழாவின் 2-ம் நாள் பாளையங்கோட்டை முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ், 3-ம் நாள் பாளையங்கோட்டை தற்போதைய பிஷப் அந்தோணிசாமி, 4-ம் நாள் சிவகங்கை பிஷப் சூசை மாணிக்கம், 5-ம் நாள் மதுரை பிஷப் அந்தோணி பாப்புசாமி, 6-ம் நாள் தூத்துக்குடி முன்ளாள் பிஷப் இவோன் அம்புரோஸ், 7-ம் நாள் திண்டுக்கல் பிஷப் பால்சாமி, 8-ம் நாள் திருச்சி பிஷப் ஆரோக்கியராஜ், 9-ம் நாள் இலங்கை மன்னார் பிஷப் இம்மானுவேல் பர்னாண்டோ, 10-ம் நாள் கோவா உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் பிலிப் நேரி, 11-ம் நாள் கோவை பிஷப் தாமஸ் ஆக்குவினாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    5-ந் நாள் விழாவான வருகிற 30-ந் தேதி காலை 7.30 மணிக்கு பள்ளிக் குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. ஆகஸ்டு 4-ந் தேதி 10-ம் திருவிழாவில் மாலை 6.30 மணிக்கு பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும்.

    5-ந் தேதி காலை 5.15 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலியும், காலை 7 மணிக்கு தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. இதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு தங்கத்தேர் நன்றி திருப்பலி, மாலை 4 மணிக்கு பெருவிழா நிறைவுத் திருப்பலி நடக்கின்றது.

    தங்கக்தேர் திருவிழாவை முன்னிட்டு 53 அடி உயரம் கொண்ட பாரம்பரிய தங்கத்தேர் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது. இதற்காக ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்ட உயர்தர தங்கத்தாள் ஒட்டும் பணியில் 60-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும், பேராலயத்தில் வீற்றிருக்கும் அன்னையின் திருச்சொரூபம் தங்க முலாம் பூசப்பட்டு வருகிறது. திருப்பலிப்பீடம், பின்னணி அலங்கார வேலைகள், உயர் சுவர் வர்ணம் பூசுதல், உட்புற ஜோடனைகள் மற்றும் வெளிப்புற மின் அலங்கார வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றது. மேலும் பக்தி ஆராதனை பாடல் பயிற்சிகளும் நடந்து வருகின்றன.

    வெளியூர் திருப்பயணிகள் தங்குமிட ஏற்பாடுகள், குடிநீர், சுகாதார வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்பாடுகளை பேராலய அதிபர் பங்குதந்தை குமார்ராஜா தலைமையில், உதவி பங்குத்தந்தை சைமன் ஆல்டஸ், பேராலய மேய்ப்புப்பணி குழுவினர், பக்தசபையினர் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.

    • தங்கத் தேரோட்டம் ஆகஸ்ட் 5-ந் தேதி நடக்கிறது.
    • திரளான மக்கள் பனிமயமாதாவை நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்தனர்.

    தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் தங்கத் தேரோட்டம், ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு தூய பனிமயமாதா பேராலயத்தில் உள்ள மாதா சொரூபத்துக்கு தங்கமூலாம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக மாதாவின் சொரூபம் பீடத்தில் இருந்து நேற்று முன்தினம் இறக்கப்பட்டு சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து திரளான மக்கள் பனிமயமாதாவை நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்தனர்.

    நேற்று காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில் போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதி லெயோபோல்தோ ஜிரெல்லி தலைமை தாங்கி திருப்பலிகளை நிறைவேற்றினார். அதன் பின்னர் அவர் தங்கத்தேரை பார்வையிட்டார். இதில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி, பங்குதந்தை குமார்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து பனிமயமாதா சொரூபம் தஸ்நேவிஸ் பள்ளிக்கூடத்தில் உள்ள கன்னியர் மடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு தங்கமுலாம் பூசும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. அதன்பிறகு தூய பனிமயமாதா சொரூபம் மீண்டும் ஆலயத்தில் உள்ள பீடத்தில் வைக்கப்பட உள்ளது.

    • தங்க முலாம் பூசும் பணி நாளை தொடங்க உள்ளது.
    • தங்கத் தேரோட்டம் ஆகஸ்ட் 5-ந் தேதி நடைபெற உள்ளது.

    தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 5-ந் தேதி வரை பெருவிழா நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

    மேலும் முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத் தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி இதுவரை 15 முறை தங்கத் தேர் பவனி நடந்துள்ளது. இந்த ஆண்டு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16-வது முறையாக தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது.

    அதன்படி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் தங்கத் தேரோட்டம் வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தூய பனிமயமாதா பேராலயத்தில் உள்ள மாதா சொரூபத்துக்கு தங்கமுலாம் பூசப்பட உள்ளது.

    இதற்காக மாதாவின் சொரூபம், பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் பீடத்தில் இருந்து நேற்று இறக்கப்பட்டது. பின்னர் திருப்பலி, வழிபாடுகள் நடந்தது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரோமன் கத்தோலிக்க தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு நிறைவுதினத்தை முன்னிட்டு, தூய பனிமயமாதா ஆலயத்தில் காலை 9 மணி முதல் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பீடத்தில் இருந்து இறக்கி வைக்கப்பட்டுள்ள மாதா சொரூபத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் போப் ஆண்டவரின் இந்திய பிரதிநிதி லெயோபோல்தோ ஜிரெல்லி தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றுகிறார். இதில் ஆயர்கள், அருட்தந்தையர்கள் கலந்து கொள்கின்றனர். நேற்று பீடத்தில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட மாதா சொரூபத்தை திரளானோர் வந்து வழிபட்டுச் சென்றனர்.

    இதனை தொடர்ந்து, தங்க முலாம் பூசும் பணி நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இந்த பணி 10 முதல் 15 தினங்கள் நடைபெறும் எனவும், அதன் பின்னர் தூய பனிமயமாதா சொரூபம் மீண்டும் ஆலயத்தில் உள்ள பீடத்தில் வைக்கப்படும் என்று ஆலய நிர்வாகக்குழுவினர் தெரிவித்தனர்.

    • தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய இதுவரை 15 முறை தங்கத் தேர் பவனி நடந்து உள்ளது.
    • வருகிற 11-ந் தேதி பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை பெருவிழா நடந்து வருகிறது. இறுதி நாளான ஆகஸ்ட் 5-ந் தேதி நகர வீதிகளில் தூய பனிமய அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத் தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி பேராலய வரலாற்றில் இதுவரை 15 முறை தங்கத் தேர் பவனி நடந்து உள்ளது. இந்த ஆண்டு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16-வது முறையாக தங்கத்தேர் பவனி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தங்கத்தேர் வடிவமைக்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி நடந்து வருகிறது.

    தங்கத் தேர் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் வீற்றிருக்கும் பனிமய மாதா சொரூபத்துக்கு தங்க முலாம் பூசும் பணி வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய மாதா சொரூபம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து செயின்ட் ஹெலேனா என்ற கப்பல் மூலம் கடந்த 1555-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி தூத்துக்குடி வந்து சேர்ந்தது.

    இந்த நாளை தூத்துக்குடி மறைமாவட்ட மக்கள் சிறப்பு மிக்க புனித நாளாக கொண்டாடி வருகின்றனர். இதனால் வருகிற 9-ந் தேதி மாதா சொரூபத்துக்கு தங்க முலாம் பூசுவதற்காக சிறப்பு திருப்பலி, வழிபாடுகளுக்கு பிறகு பீடத்தில் இருந்து இறக்கப்படுகிறது. தொடர்ந்து 2 நாட்கள் ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்படுகிறது.

    பின்னர் 11-ந் தேதி தங்க முலாம் பூசுவதற்காக அன்னையின் சொரூபம் அருகில் உள்ள தஸ்நேவிஸ் மாதா பெண்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கன்னியர் மடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வைத்து தங்க முலாம் பூசும் பணிகள் சுமார் 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பணி முடிந்து திருச்சொரூபம் வைக்கப்படும். இதனை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதில் போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதி லெயோபோல்தோ ஜிரெல்லி தலைமை தாங்கி, திருப்பலி நிறைவேற்றி தங்க முலாம் பூசும் பணியை தொடங்கி வைக்கிறார். இதில் ஆயர்கள், அருட்தந்தையர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • அடுத்த 10 மாதங்கள் இந்த பணி நடைபெறும்.
    • 2023 ஆகஸ்டு 5-ந்தேதி தங்கத்தேர் பவனி நடைபெற உள்ளது.

    தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில், அந்த ஆண்டுகளில் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி இதுவரை 15 முறை தங்கத்தேர் பவனி நடந்து உள்ளது. முதல் முறையாக 2.2.1806-ல் தூய பனிமய மாதா சொரூபம் தூத்துக்குடிக்கு வந்ததன் 250-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு பனிமய மாதா பெயரில் புதிய ஆலயம் கட்டப்பட்டதன் 300-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஆண்டு (2023) தங்கத்தேர் பவனி நடைபெறும் என்று பிஷப் ஸ்டீபன் அந்தோணி அறிவித்தார்.

    இதனை தொடர்ந்து தங்கத்தேர் வடிவமைப்புக்கான பணிகள் கடந்த வாரம் தொடங்கின. இதற்காக பேராலய வளாகத்தில் பிரமாண்டமான ஷெட் அமைக்கும் பணிகள் நடந்தன. இதற்காக பனைமரங்கள் முழுமையாக கொண்டு வரப்பட்டு ராட்சத கிரேன்கள் மூலம் நடப்பட்டன. நேற்று காலையில் தேர் பிறையில் இருந்து தேர் வெளியே கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை பங்கு தந்தை குமார்ராஜா பிரார்த்தனை நடத்தி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து தேர் வடிவமைப்பு மற்றும் அலங்கரிப்பதற்காக குருசு கோவிலில் இருந்து பனிமயமாதா ஆலயம் அருகே அமைக்கப்பட்டு இருந்த கூடத்துக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். பின்னர் தேர் பிரமாண்ட பனிமனை பகுதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கும் பணி தொடங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து பங்கு தந்தை குமார்ராஜா கூறும் போது, தூத்துக்குடி மறைமாவட்டம் நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஆண்டு பனிமயமாதா ஆலய தங்கத் தேர் பவனி நடக்கிறது. அதற்கு ஆயத்தமாக தேர்பிறையில் இருந்து ஆலயவளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள கூடத்துக்கு தங்கத் தேர் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    அடுத்த 10 மாதங்கள் இந்த பணி நடைபெறும். அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி 16-வது முறையாக தங்கத்தேர் பவனி நடைபெற உள்ளது. 53 மணி ஜெபமாலையை வைத்து கத்தோலிக்கர்கள் ஜெபிக்கிறார்கள். அதனை குறிக்கும் வகையில் 53 அடி உயரம் கொண்டதாக தங்கத் தேர் அமைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு விழாவுக்கான பல ஆயத்த பணிகள் தற்போது இருந்தே தொடங்கி நடைபெறும் என்று கூறினார்.

    • 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந்தேதி தங்கத்தேர் பவனி நடைபெற உள்ளது.
    • தங்கத்தேர் வடிவமைப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன.

    தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில், அந்த ஆண்டுகளில் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி இதுவரை 15 முறை தங்கத்தேர் பவனி நடந்து உள்ளது. முதல் முறையாக 02.02.1806-ல் தூய பனிமய மாதா சொரூபம் தூத்துக்குடிக்கு வந்ததன் 250-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு பனிமய மாதா பெயரில் புதிய ஆலயம் கட்டப்பட்டதன் 300-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது.

    இந்த நிலையில் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஆண்டு (2023) தங்கத்தேர் பவனி நடைபெறும் என்று பிஷப் ஸ்டீபன் அந்தோணி அறிவித்தார்.

    இதனை தொடர்ந்து தங்கத்தேர் வடிவமைப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. தங்கத்தேர் வடிவமைக்கும் பணிக்காக பேராலய வளாகத்தில் பிரமாண்டான ஷெட் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக பனைமரங்கள் முழுமையாக கொண்டுவரப்பட்டு ராட்சத கிரேன்கள் மூலம் நடப்பட்டன. இந்த ஷெட் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததும், தேர் கூடத்தில் இருந்து தேர் வெளியே எடுத்துவரப்பட்டு இந்த ஷெட்டில் நிறுத்தி தேர் வடிவமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இந்த பணிகள் முடிக்கப்பட்டு, 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி தங்கத்தேர் பவனி நடைபெற உள்ளது என்று ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×