என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

- திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
- 5-ந் தேதி அதிசயபனிமாதா அன்னையின் தேர்ப்பவனி நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 138-வது ஆண்டு திருவிழா நாளை (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
விழா நாட்களில் தினமும் காலை 7.30 மணிக்கு திரியாத்திரை திருப்பலியும், மாலை ஆராதனை, மறையுரை நடைபெறுகிறது. வருகிற 2-ந் தேதி 7-ம் திருவிழா அன்று காலை 7.30 மணிக்கு மாதா காட்சி கொடுத்த மலைகெபியில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெறுகின்ற திருப்பலியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதுநன்மை வழங்குகிறார். மாலை 6.30 மணிக்கு ஆயர் தலைமையில் நற்கருணைப்பவனி நடைபெறுகிறது.
4-ந் தேதி காலை 5.15, 7.30, 9.30, 11.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது. 5-ந் தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது.
அன்று காலை 5.15 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி, பிற்பகல் 2 மணிக்கு அதிசயபனிமாதா அன்னையின் தேர்ப்பவனி நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை 7.30 மணிக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் நன்றி திருப்பலியும், காலை 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை பேராலய தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்குத்தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்குத்தந்தை வளன் அரசு மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.