search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

    தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • விழாவானது 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 4-ந்தேதி அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது.

    தென்தாமரைக்குளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா நேற்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவானது அடுத்த மாதம் 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு திருக்கொடி ஏற்றம், கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதற்கு கன்னியாகுமரி வட்டார முதல்வர் அருட்பணி எஸ்.பி.ஜான்சன் தலைமை தாங்கினார். கோட்டாறு மறை மாவட்ட ஆற்றுப்படுத்துதல் பணி குழுவை சேர்ந்த அருட்பணி பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரை நிகழ்த்தினார். இரவு 8 மணிக்கு சிறப்பு இன்னிசைக் கதம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    2-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ் மாலை, 6.45 மணிக்கு கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது. இதற்கு புன்னைநகர் பங்குத்தந்தை சதீஸ்குமார் ஜாய் தலைமை தாங்குகிறார். தேவசகாயம் மவுண்ட் பங்குத்தந்தை மைக்கேல் ஜார்ஜ் பிரைட் மறையுரை நிகழ்த்துகிறார். இரவு 9 மணிக்கு அன்பியங்களின் கலை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் தினமும் திருப்பிலி, ஜெபமாலை, புகழ்மாலை நடக்கிறது.

    9-ம் நாளான 4-ந் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடக்கிறது. இதில் கன்னியாகுமரி காசா கிளாரட் அருட்பணி டன்ஸ்டன் தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு சிறப்பு திருப்புகழ் மாலை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட செயலர் மரிய கிளாட்ஸ்டன் தலைமை தாங்குகிறார். சென்னை சட்டப்பணி எம்.சி.ராஜன் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும் நடைபெறுகிறது.

    10-ம் நாளான 5-ந் தேதி காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டத் திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜாண் ரூபஸ் தலைமை தாங்குகிறார். கிறிஸ்தவ வாழ்வு பணி குழு செயலர் எட்வின் வின்சென்ட் மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம், நற்கருண ஆசீர், இரவு 7 மணிக்கு இன்னிசை விருந்தும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு இறை மக்கள், பங்குப் பேரவையினர், அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×