என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

பேராயர் லெயோ போல்தோ ஜிரெல்லி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்த போது எடுத்த படம்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி: போப்பாண்டவர் பிரதிநிதி லெயோபோல்தோ ஜிரெல்லி பங்கேற்பு

- தங்கத் தேரோட்டம் ஆகஸ்ட் 5-ந் தேதி நடக்கிறது.
- திரளான மக்கள் பனிமயமாதாவை நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்தனர்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் தங்கத் தேரோட்டம், ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு தூய பனிமயமாதா பேராலயத்தில் உள்ள மாதா சொரூபத்துக்கு தங்கமூலாம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக மாதாவின் சொரூபம் பீடத்தில் இருந்து நேற்று முன்தினம் இறக்கப்பட்டு சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து திரளான மக்கள் பனிமயமாதாவை நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்தனர்.
நேற்று காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில் போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதி லெயோபோல்தோ ஜிரெல்லி தலைமை தாங்கி திருப்பலிகளை நிறைவேற்றினார். அதன் பின்னர் அவர் தங்கத்தேரை பார்வையிட்டார். இதில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி, பங்குதந்தை குமார்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பனிமயமாதா சொரூபம் தஸ்நேவிஸ் பள்ளிக்கூடத்தில் உள்ள கன்னியர் மடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு தங்கமுலாம் பூசும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. அதன்பிறகு தூய பனிமயமாதா சொரூபம் மீண்டும் ஆலயத்தில் உள்ள பீடத்தில் வைக்கப்பட உள்ளது.